Thursday, May 20, 2021

திமுகவுக்கு இருக்கும் மிகப் பெரிய பலம் அரசு ஊழியர்கள் - அதிகாரிகள்!

 "புதிய அரசு - இப்போதுதான் ஆட்சிக்கே வந்துள்ளார்கள் - அவகாசம் தர வேண்டாமா?

அதற்குள் விமர்சிக்கலாமா?"- என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள்.
இவர்கள் எவரும் அரசு ஆட்சி அதிகாரத்துக்கே புத்தம் புதியவர்கள் அல்ல!
மேற்கண்ட வாதம் - ஒரு வேளை தப்பித்தவறி கமலஹாசன் கட்சியோ, விஜயகாந்த் கட்சியோ, சீமான் கட்சியோ ஆட்சிக்கு வந்திருந்தால் பொருந்தும்.
ஆனால் திமுகவினர் அப்படி அல்ல!
இந்த அமைச்சரவையில் உள்ள பலரும் - புதுமுகங்கள் ஓரிருவர் நீங்கலாக ஏற்கனவே கலைஞர் முதல்வராக இருந்தபோதே காபினெட் அமைச்சர்களாக இருந்தவர்கள்தான்.
திரு.ஸ்டாலின் அவர்களே கலைஞர் அமைச்சரவையில் துணை முதல்வராகவும் - உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்தவர்தான்.
துரைமுருகன் அவர்கள் நீண்ட அனுபவமும் - உண்மையிலேயே அவர் பலமுறை வகித்த பொதுப்பணித் துறை குறித்து விரல்நுனியில் விவரங்களை வைத்திருக்கும் திறமைசாலி எனப் பெயர் பெற்றவர்.
இப்போது நீர்ப்பாசனம் என்ற துறை அவருக்கென்று தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது - அவருடைய அனுபவ ஞானத்துக்கு மிகவும் பொருத்தமானது.
பொன்முடி என்ன நிர்வாகத்துக்குப் புதியவரா?
மேலும் ரகுபதி, KKSSR ராமச்சந்திரன், செந்தில் பாலாஜி போன்றோரும் ஏற்கனவே அதிமுக அமைச்சர்களாக இருந்து அனுபவம் உடையவர்கள்தான்.
எனவே இந்த அமைச்சரவையை முற்றிலும் புதிய கற்றுக் குட்டிகள் என்று - அண்ணாதுரை தனது அமைச்சரவையைப் பற்றி 1967 ல் சொன்னது போல் - "காங்கிரஸ் கட்டி முடிக்கப் பட்ட கோபுரம் - நாங்கள் கொட்டிக் கிடக்கும் செங்கல்"- என்று கூற முடியாது.
மேலும் திமுகவுக்கு இருக்கும் மிகப் பெரிய பலம் அரசு ஊழியர்கள் - அதிகாரிகள்!
"ஈட்டிய விடுப்புக்கான சம்பளம் ஓராண்டு நிறுத்தம்"- என்று அரசு சமீபத்தில் அறிவித்தது!
எந்த அரசு ஊழியனாவது, அவர்களது சங்கம் ஏதாவது எதிர்ப்புக் காட்டியதா பாருங்கள்!
இதே போன ஆண்டு கொரோனா முதல் அலையில் - "அரசு ஊழியர்கள் கொரோனா ஒருங்கிணைப்புப் பணியில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்"- என்று எடப்பாடியார் உத்தரவு போட்ட உடனே...
ஜாக்டோ ஜியோ சங்கம் நீதிமன்றத்துக்குப் போயிற்று!
"இது எங்கள் சர்வீஸ் கண்டிஷனில் இல்லை"- என்று மனுக் கொடுத்தது!
நீதி மன்றம் காரித்துப்பி மனுவைத் தள்ளுபடி செய்தது வேறு விஷயம்!
இன்றைக்குப் பாருங்கள் - ஈட்டிய விடுப்பை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்தாலும் பொத்திக் கொண்டு இருக்கிறார்கள்!
அவர்கள் சம்பளத்தையே இன்னும் ஆறு மாதத்துக்கு அரைச் சம்பளமாகக் குறைத்தாலும் - அரசு ஊழியர்களோ, அவர்களது சங்கமோ வாயைத் திறக்க மாட்டார்கள்!
அந்த அளவுக்கு அவர்களில் மிகப் பலர் திமுக அபிமானிகள்!
போக்குவரத்து ஊழியர்களும் அப்படித்தான்!
எடப்பாடியார் அரசு என்றால் - ஸ்ட்ரைக் அறிவித்த நேரத்துக்கு சில மணி நேரம் முன்பே பஸ்களை நடுரோட்டில் ஆங்காங்கே நிறுத்திவிட்டுப் பயணிகளைப் பாதிவழியில் இறக்கிவிட்டு நடக்கவிடுவார்கள்!
இப்போது அவர்களின் கூட்டணி அரசு - இன்னும் இரண்டு வருடத்துக்கு ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன் எதுவும் பேசக்கூடாது என்று ஸ்டாலின் உத்தரவிட்டாலும் அதை அப்படியே கேட்பார்கள்!
தமிழக அரசுக்கு - ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு வாய்த்தது போல ஒத்துழைப்பும், புரிதலும் கொண்ட அரசு ஊழியர்கள், அவர்களது சங்க அமைப்புக்கள் வேறு எந்த மாநில அரசுக்கும் கிடையாது!
மேலும் சென்ற ஆண்டு - கொரானா முதல் அலையிலேயே - அப்போதிருந்த எடப்பாடியார் தலைமையிலான அரசு...
அந்த அரசுக்கு சந்தித்த முதல் அனுபவம் அது! அதில் பட்ட சிரமங்களை ஆராய்ந்து, ஒவ்வொரு முயற்சியாக எடுத்து, அதில் ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு அடுத்த முயற்சியில் அந்தப் பிழைகளைத் திருத்தி...
இப்படி முயன்று முயன்று படிப்படியாக டெவலப் செய்து - கொரானா நோய் எதிர்ப்பு செயல்பாட்டைப் பொருத்தவரை - ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கிக் கொடுத்து விட்டுத்தான் போயுள்ளது அதிமுக அரசு!
இவர்கள் அந்த நிர்வாகக் கட்டமைப்பை மேலும் விரிவாக்கலாம் - அல்லது அதில் ஏதேனும் குறைகள் இப்போதைய அனுபவத்தின் அடிப்படையில் தென்பட்டால் - அவற்றைக் களைந்து அந்த நிர்வாகக் கட்டமைப்பை மேலும் சிறப்பாக ஆக்கலாம்!
ஆனால் ஒரு நிர்வாகக் கட்டமைப்பு - கொரோனா மேனேஜ்மென்டில் - ஏற்கனவே உள்ளது!
புதியதாக ஒன்றை உருவாக்க வேண்டிய சிரமம் இவர்களுக்கு இல்லாமல்தான் செய்து வைத்துவிட்டுப் போயுள்ளது முந்தைய அரசு!
ஆக... ஆக....
1) ஏற்கனவே அனுபவம் வாய்ந்த சீனியர் அமைச்சர்கள்.
2) எந்த வித முணுமணுப்பும் காட்டாமல் - சம்பள நிறுத்தம் உட்பட எதுவானாலும் - கழகத் தலைவர் காலால் இட்ட வேலையைத் தலையால் ஏற்று முடிக்கும் விஸ்வாசம் மிக்க அரசு ஊழியர்கள், அவர்களது சங்கங்கள்.
3) ஏற்கனவே முந்தைய அரசு ஏற்படுத்தி விட்டுச் சென்றுள்ள - முதல் கொரானா அலையைத் தொடர்ந்து ஏற்படுத்திச் சென்றுள்ள - ADMINISTRATIVE MECHANISM....
இப்படி இத்தனை வசதிகளையும் வைத்துக் கொண்டு...
புதிய அரசை விமர்சிக்க அவகாசம் கொடுங்கள் என்று எதிர்பார்ப்பது சரியில்லை!
ஜனநாயகத்தில் விமர்சனங்களையும் எதிர் கொண்டுதான் - அவற்றில் ஏற்பவற்றை ஏற்று, தள்ள வேண்டியதைத் தள்ளி - அரசு செயல்பட வேண்டும்!
ஆனால் - 'தள்ள வேண்டியதைத் தள்ளினால்தான்'- எந்த வேலையும் நடக்கிறது என்ற பெயரைத்தான் எந்த அரசும் வாங்கிவிடக் கூடாது .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...