பெருந்தொற்று கொடூரமா பரவி வர்ற நேரத்துல புதுசா அமைஞ்ச ஒரு அரசாங்கத்த விமர்சனம் பண்றது சரியாயிருக்காதுதான்-
ஆனா,
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்-னு வள்ளுவன் சொல்லியிருக்கான் அதனால சில விமர்சனங்கள் -
கொரோனா வைரஸ கட்டுப்படுத்த உலகம் முழுவதும் உபயோகிக்கப்பட்ட ஒரே ஆயுதம் ஊரடங்கு மட்டும்தான் -
ஆனால், சென்ற முதல் அலையில் மத்திய அரசு முதன்முறையாக ஊரடங்கு போட்ட பொழுது மோடி மீது வைக்கப்படாத மோடியைத் திட்டாத ஊடகங்களோ, கட்சிகளோ கிடையாது-
ஊரடங்கு என்றால் என்னவென்றே அறியாத ஒரு தலைமுறை மக்களுக்கு இதுதான் ஊரடங்கு என்று புரியவைத்தார்-
ஆனாலும், பல மாநில அரசுகள் மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை, கெஜ்ரிவால், தாக்ரே போன்றவர்கள் வீம்பிற்கு வியாதியைப் பரப்ப வேலை செய்தார்கள் என்பது கண்கூடு, ஆனாலும் எல்லாவற்றையும் மீறி முதல் அலையில் இந்தியா கொரோனாவை வென்றது என்பதே வரலாறு-
அதற்குப் பிறகு மத்திய அரசு ஊரடங்கு போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பில் விட்டுவிட்டது -
இதில் உத்திரபிரதேசம், குஜராத் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இரண்டாவது அலையின் தாக்கம் கொடூரமாக இருந்தாலும் அரசுகள் எடுத்த அறிவார்ந்த நடவடிக்கைகளால் தொற்று வெகுவாகக் குறைந்து இயல்பு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன -
ஆனால், ஸ்டாலின் முதல்வராவதற்கு முன்பு ஒரளவு கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா தி.மு.க உடன்பிறப்புகள் போலவே கட்டுக்கடங்காமல் நாளொருமேனி பெருகிவருகின்றது-
சென்ற முதல் அலையில் ஊரடங்கு கொண்டு வந்த மோடி, எடப்பாடி எடப்பாடியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின், ஊரடங்கை அரசியலாக்கி வாக்குகளாக மாற்றிய ஸ்டாலின் இன்று ஊரடங்கு கொண்டுவந்துள்ளார், கடந்த மாதம் தேர்தல் முடிந்தபிறகும் கூட தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஊரடங்கு தேவைப்படாது என்று திருவாய்மலர்ந்த ஸ்டாலினுக்கு முதல்வரான பிறகுதான் ஊரடங்கின் தேவை புரிகிறது -
ஆனால், நான் உட்பட எந்த ஒரு பா.ஜ.க ஆதரவாளரோ ஊரடங்கு தேவையில்லை என்றோ, ஊரடங்கு போட்டு ஸ்டாலின் மக்களைக் கொல்கிறார் என்றோ பேசியதில்லை, மாறாக தொற்றைத் தடுக்க ஊரடங்கு தேவை என்றும், பொறுப்பான குடிமகனாக வீட்டிலிரு, விலகியிரு என்றுதான் கூறிவருகிறோம் -
ஆனால், இந்த துக்ளக் ஆட்சியில் நடப்பது என்ன?-
முதல் ஒருவாரம் தளர்வுகளுடன் ஊரடங்கு என்ற பெயரில் தனது முக்கிய ஓட்டுவங்கியான ஒரு பிரிவினர் தினமும் கறி, மீனுடன் பண்டிகையை கொண்டாடத் தடையின்றி ஒரு ஊரடங்கு போட்டார்கள்-
பண்டிகை முடிந்து பிரியாணி சாப்பிட்ட கையைக் கழுவும் முன்பே தளவுகளற்ற ஊரடங்கு என்று கூறிவிட்டு சென்னை உட்பட பெருநகரங்களில் இருந்த சூப்பர் ஸ்பிரட்டர்கள் வெளியேற ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது, அவர்கள் புண்ணியத்தால் இன்று கிராமங்கள் வரைக்கும் பெருந்தொற்று அற்புதமாகப் பரவிவிட்டது -
இந்த நிலையில், தளவுகளற்ற ஊரடங்கிற்குள் ஒரு கடும் ஊரடங்கு என்று நேற்று அறிவித்துவிட்டு தினமும் 46000 எண்ணிக்கை என்று வந்து கொண்டிருக்கும் கொடூரமான நேரத்தில் நேற்று மதியம் முதல் இன்று முழுவதும் அனைத்துக் கடைகளும் திறந்துவிடப்பட்டு கொரோனா பரப்பிகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளனர், போதாக்குறைக்கு பேருந்துகள் வேறு விடப்பட்டு தொற்று தமிழகம் முழுவதும் பயணம் செய்ய டிக்கெட் கொடுக்கப்பட்டுவிட்டது-
இதைத்தான் நாங்கள் துக்ளக் ஆட்சி என்கிறோம் -
பத்து வருடங்களுக்குப் பிறகு ஆட்சி அதிகாரம் கையில் கிடைத்ததால் கள் குடித்த குரங்குகள் போல் ஆடிக்கொண்டிக்கின்றனர் முதலமைச்சர், அமைச்சர்கள் முதல் அத்துனை திமு.கவினரும் -
நிதி அமைச்சர் திடீரென்று அறநிலையத்துறை அமைச்சராகிறார், சுகாதார அமைச்சர் போக்குவரத்துத்துறை பற்றி பேசுகிறார், அறநிலையத்துறை அமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சராகிறார், பள்ளிக்கல்வி அமைச்சர் தனது கட்சி அலுவலகத்தை அரசு அலுவலகமாக மாற்றி கூட்டத்தை நடத்துகிறார் தி.மு.க உடன்பிறப்புகள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தீடீர் ரேஷன் கடை ஊழியர்களாகவும், காவல்துறை அதிகாரிகளாகவும் மாறி தீயாக வேலை செய்துவருகின்றனர்-
என்ன ஆட்சி இது?, விரல்விட்டு எண்ணினாலும் கணக்குப் பாடம் தெரியாவதனிடம் இவ்வளவு பெரிய பொருப்பை ஒப்படைத்தது யார் தவறு?-
இறுதியாக தமிழக மக்களே தமிழகத்தில் நடப்பது ஆட்சியல்ல, சிறுபான்மை மக்களுக்கான கண்காட்சி எனவே தயவுசெய்து உங்களை நீங்கள்தான் காப்பாற்றிக் கொள்ளவேண்டும், ஸ்டாலினை மதிக்காவிட்டாலும் அவர் போட்ட ஊரடங்கை மதித்து-
வீட்டிலிருங்கள்-
விலகியிருங்கள் -
நோயற்று வாழுங்கள் -
தேசப்பணியில் என்றும் -









No comments:
Post a Comment