Thursday, April 7, 2022

*அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைத் தரும் புளிச்ச கீரை.*

 புளிச்சகீரை இது மால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த செம்பருத்தி இனத்தாவரம் ஆகும். இதிலிருந்து கிடைக்கும் இழை கொண்டு புளிச்சை நார்க் கயிறு திரிக்கப் படுகிறது.

பொதுவாக இந்தியப் பகுதிகளில் அதிக அளவு காணப்படுகிறது.
பெயருக்கு ஏற்றார்போல புளிப்பு சுவையுள்ள இந்த கீரை, உடல் வலிமையை பெருக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. புளிச்சக்கீரைக்கு காசினிக் கீரை என்ற மற்றொரு பெயரும் உண்டு.
இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து நிறைந்த இந்தக் கீரையைச் சாப்பிடுவதால் ரத்தம் தூய்மையாகும்; உடல் குளிர்ச்சியாவதுடன் மந்தமும் நீங்கும்; ரத்த அழுத்தம் கட்டுப்படும்; ஜீரணக்கோளாறுகள் சரியாகும்.கல்லீரலை பலமாக்கும் மாலைக்கண் நோயை விலக்கும்.
உடல் வலிமை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த கீரையை சிறிதளவெனும் சமைத்து சாப்பிட கொடுத்து வந்தால் உடம்பு தேறுவார்கள்.
புளிச்சக்கீரையை உலரவைத்து, அதனுடன் சம அளவு பாசிப்பருப்பு, சிறிதளவு ஜாதிக்காய், சுக்கு, மிளகு, காய்ந்த மிளகாய், இந்துப்பு சேர்த்துப் பொடித்து உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்குறைபாடு நீங்கும்.
இந்த கீரையில் தாதுபொருட்களும், இரும்பு சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. இது தவிர வைட்டமின் சத்துக்களும் கணிசமான அளவு கலந்துள்ளன.
வாதநோயால் பாதிக்கப்பட்டவர்கள், புளிச்சக்கீரையை இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒருமுறை சமைத்துச் சாப்பிட்டுவந்தால் காலப்போக்கில் அவர்களுக்கு வாத நோய் தணிந்துவிடும். மலச்சிக்கல் உள்ளவர்களும் இதேபோல சாப்பிடுவதால் முழுமையான நிவாரணம் கிடைக்கும்.
இதயநோய் வராமல் பாதுகாப்பதுடன் சிறுநீரகக் கோளாறுகளைக் குணப்படுத்தக்கூடிய தன்மை இந்தக் கீரைக்கு உண்டு.
சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
உடல் வெப்பத்தை குறைத்து சமப்படுத்துவதில் புளிச்ச கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. எல்லாவிதமான வாத கோளாறுகளையும் குணப்படுத்தும் வல்லமை இந்த கீரைக்கு உண்டு.
வாயு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் புளிச்ச கீரை குணப்படுத்தும். காய்ச்சல் காரணமாக நாவில் ருசி மறைந்துவிட்டால் புளிச்ச கீரை இழந்த ருசியை உணரவைக்கும். மஞ்சள் காமாலைக்கு ஆளானவர்கள் கைப்பிடி அளவு புளிச்சகீரையை அரைத்து சாறு எடுத்து மோருடன் கலந்து பருகிவர மஞ்சள் காமாலை குணமடையும்.
இந்தப் பொடியைக் காலை மற்றும் மதிய உணவில் ஒரு டீஸ்பூன் அளவு சேர்த்துக்கொள்வதோடு, நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து 48 நாள்கள் சாப்பிட வேண்டும். பெண்கள் இதைச் சாப்பிட்டு வந்தால் தாம்பத்யம் பலப்படும்.
காசநோய் உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்தும் தன்மை இந்த கீரைக்கு இருப்பதால், இந்த கீரையை உடலையும் குடலையும் குணமாக்கும் கீரை என்கின்றனர்.
புளிச்ச கீரையின் கனிகளின் சாறுடன் சர்க்கரை மற்றும் மிளகு சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.
இந்த கீரை பித்தத்தை அதிகப்படுத்தும் தன்மையுடையது என்பதால் பித்தம் அதிகமாக உள்ளவர்கள் இந்த கீரையை தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...