Thursday, April 7, 2022

*✳️கோவிலில் பலி பீடம் ஏன்?*

 ஆகம விதிப்படி எழுப்பப்பட்ட கோவிலில் மனித உடலைப் போலவே அமைக்கப்பட்டிருக்கும்.

அது எப்படியெனில்.......
🍀பாதங்கள் - கோபுரம்
🍀முழங்கால் - ஆஸ்தான மண்டபம்
🍀தொடை - நிருத்த மண்டபம்
🍀உறுப்பு - கொடிமரம்
🍀 தொப்புள் - பலி பீடம்
🍀 மார்பு - மகா மண்டபம்
🍀 கழுத்து - அர்த்த மண்டபம்
🍀 சிரம் - கர்ப்பக்கிருகம்
🍀 சிரத்தின் உச்சி - விமானம்
இதில் பலி பீடம் என்பது, நம் மனதுள் நமக்கு தெரியாது ஒளிந்திருக்கும்…..
⚡ காமம்,
⚡ ஆசை,
⚡ குரோதம் (சினம்),
⚡ லோபம் (கடும்பற்று),
⚡ மோகம் (கற்பு நெறி பிறழ்வு),
⚡ பேராசை,
⚡ மதம் (உயர்வு தாழ்வு மனப்பான்மை),
⚡மாச்சர்யம் (வஞ்சம்),
எனும் எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி செய்துக்கொள்ளுமிடம்.
வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் நலன் ஒன்றும் வந்து விடாது. வீழ்ந்து வணங்கும் போது தனது கீழான இயல்புகளெல்லாம் அந்த இடத்திலே பலி கொடுக்க வேண்டும். மனிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம் அங்கு பலியிட வேண்டும். மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது. மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்க வேண்டும்.......🪔🌹🙏
நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்
அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதம் பணிந்து இன்றைய விடியலை மனமுவந்து நமக்கு அளித்த இனிய ஈசனுக்கு நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரங்கள்.
உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள்
ஆலவாயர் அருட் பணி மன்ற எம் குருவான தந்தையே ஆத்ம நமஸ்காரங்கள்
அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி 🦜🦚🦚🦚🦜
May be an image of 3 people and body of water

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...