கோவில் வழிபாடுகள் முடிந்ததும் சிறிது நேரம் அமர்ந்து செல்வார்கள். ஏனெனில் கண்களுக்கு தெரியாத கடவுளின் தூதர்கள் கோவிலில் உள்ளனர். அவர்கள் கடவுளின் பக்தர்களுக்கு வழிகாட்டுவதாக ஐதீகம் உள்ளது. மேலும் இதனால் கடவுளின் கட்டளைகளை நிறைவேற்ற கோவிலில் காத்திருக்கும் தூதர்கள் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திப்பதற்காக சிறிது நேரம் கோவிலில் அமர்ந்து தியானம் செய்து விட்டு செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். எனவே கோவில் வழிபாடுகள் முடிந்ததும், அவர்களிடம் இருந்து விடை பெறும் விதமாக சிறிது நேரம் கோவிலில் அமர வேண்டும்.


No comments:
Post a Comment