Monday, April 30, 2018

தர்பூசணி..

ஊரெங்கும் குவிந்து கிடக்கும் தர்பூசணியின் பின்னால் மறைக்கப்படும் இரகசியம்..? விஷமாகும் ருசி... உள்ளங்கையில் விபரீதம்..!!
வட மாவட்டங்களில் விவசாயிகளுக்கு தர்பூசணி பணப் பயிராகிவிட்டது. அதை விளைவிக்கும் நிலத்தில் பெரும் அட்டூழியம் நடக்கிறது.
நிலத்தில் விரிக்கும் பிளாஸ்டிக் பேப்பர், தெளிக்கும் பூச்சிக்கொல்லி, உரம், எல்லாவற்றுக்கும் மேலாக ஊசி மூலம் செலுத்தப்படும் ஊக்க மருந்துகள் என ஏகப்பட்ட ரசாயனக் கலவையில் பயிராக்கப்படும் இப்பழம் பெரும் அச்சத்தை உருவாக்குகிறது.
இயற்கையாய் விளைந்தால் நடுப்பகுதி மட்டும் கூடுதல் இனிப்புடன் இருக்கும். அதனால், பழத்தின் சிவப்பு நிறத்தையும் ஒட்டுமொத்த இனிப்பையும் கூட்டுவதற்கு, ஊக்க ரசாயனங்களை-ஹார்மோன் மருந்துகளை டிரிப்பில் கலந்து செலுத்துகின்றனர். கூடவே பழத்தை நன்றாகப் பருக்கவைக்க, வரப்புகளின் ஓரம் மாட்டு ஊசியுடன் மருந்தடிக்கும் பெண்கள் இந்தத் தொழிலில் ஆங்காங்கே இருக்கிறார்கள்.
கொஞ்சம் உற்றுப் பார்த்தால், தினம் ஆன்டிபயாட்டிக் மருந்து கொடுத்து வளர்க்கப்படும் 60 நாள் பிராய்லர் கோழிக்கும் 60 நாள் பயிரான தர்பூசணிக்கும் அதிக வித்தியாசமில்லை.
தர்பூசணி அறுவடை முடிந்தபின், நிலத்தின் மேல் படிந்திருக்கும் அத்தனை ரசாயன நச்சும், அடுத்த உழவுக்காக உழும்போது மேல் மண்ணிலிருந்து உள்ளே இறங்கும். உள்ளே செல்லும் நச்சு அந்த நிலத்தில் வாழும், நமக்கான உணவைத் தயாரிக்க இடைவிடாமல் உழைக்கும் அத்தனை நுண்ணுயிர்களையும் மண்புழுக்களையும் சேர்த்தே அழிக்கும். நிலத்தடி நீர் வழியே கரைந்து ஓடி, அருகில் உள்ள எல்லா நிலத்துக்குள்ளும் பயிருக்குள்ளும் போய், மனிதரின் நல்வாழ்வுக்குச் சவாலாய் அமையும்.
இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.
முறையாக மண்ணிலிருந்து அகற்றப்படாத பிளாஸ்டிக் மல்ச்’ 20 சதவீதம் முதல் 40 சதவீதம்வரை, நிலத்துக்குள் திணிக்கப்படுகிறது. மிச்சமிருக்கும் பிளாஸ்டிக் மல்ச் எரிக்கப்பட்டு, காற்றில் நச்சு பரப்பப்படுகிறது. அத்துடன் இந்த நவீன தர்பூசணி பயிரிடும் முறைக்காக வயலின் வரப்புகள் அழிக்கப்பட்டு, வயலின் வளமான விளைச்சலுக்குக் காரணமாக இருக்கும் மேல்மண்ணும் தொடர்ச்சியாக அழிந்துபோகிறது.
சென்னை முதலான பெருநகருக்குத் தினம் ஆயிரக்கணக்கான டன் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் இந்த தர்பூசணியை, மருந்திட்டு வளர்க்கும் ‘பயிர் வணிகர்கள்’ ஒரு தர்பூசணியைக்கூடச் சாப்பிடுவதேயில்லை என்பதே உண்மை.
Image may contain: outdoor
உழவின் அடிநாதமே, உழவின் சக பயனைக் கால்நடைக்கு அளிப்பதுதான். இந்தப் பயிரின் இலைகள், கால்நடைக்கு ஒருபோதும் உணவாவதில்லை.
இப்படிச் சூழலியலைச் சீர்கெடுத்து விளைவிக்கப்படும் ரசாயன தர்பூசணிக்குப் பின்னால் போவதைவிட நீர்மோர், கம்பங் கூழ், பதநீர், இளநீர், எலுமிச்சைச் சாறு போன்றவற்றை மட்டுமே கோடைக்குப் பருகலாம் எனத் தோன்றுகிறது.
ஊரெங்கும் குவிந்து கிடக்கும் இனிப்பும் சிவப்பும் நிறைந்த தர்பூசணியின் பின்னால் மறைக்கப்படும் இந்தச் செய்திகளைத் தாகத்துடன் காத்திருக்கும் நுகர்வோருக்கு வேகமாகச் சொல்ல வேண்டிய நேரம் இது.
அரசும் பல்கலைக்கழகங்களும் இதுகுறித்து ஆய்வுசெய்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால், இப்பூசணி வணிகத்தால் உறிஞ்சப்படப் போவது, நிலத்தின் வாழ்வு மட்டுமல்ல நம் வாழ்வும் சேர்த்துத்தான்.

வேலை வாய்ப்பூ!

தமிழ்நாட்டிலேயே வெறும் 4 அல்லது 5 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது. இதைப் படித்தால் Groupof 1 examல் எளிதில் வெற்றியடைந்து Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்...
சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ. 5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ. 20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும், ஆகமொத்தம் ஒரு வருடத்திற்கு ரூ. 65,000/- உதவித் தொகை கிடைக்கும்.
அக்ரி பாடம் பயில விரும்புபவர்கள் திருச்சி அருகிலுள்ள கல்லூரிகளில் சேர முயல்வது நன்மையளிக்கும். ஏனெனில், இக்கல்லூரிகளில் டொனேஷன் கிடையாது....
திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம் (Central University) உள்ளது. இதில் பயிற்சிக் கட்டணம் மிகவும் குறைவு. மேலும், இப் பல்கலையில் பயின்றால், மேற்படிப்பிற்காக நீங்கள் வெளிநாடுகளில் உள்ள யூனிவர்ஸிடி சென்றால் எவ்வித நுழைவுத் தேர்வும் எழுத வேண்டியதில்லை...
பகிருங்கள்..
தற்போது 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு உபயோகப்படும்...

நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட்டால்.

நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட்டால்

நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட்டால்
2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின்
பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. அதனால் மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் இந்த நெய்-க்கு எப்போதுமே முதலிடம் உண்டு.
இந்த நெய்( #Ghee) யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். அவ்வாறு நெய்யை உருக்கி சுடு சோற்றில் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும் வல்ல‍மை கொண்டது.
தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.
மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
ஞாபக சக்தியை தூண்டும்
சரும பளபளப்பைக் கொடுக்கும்
கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.
உடல் வலுவடையும்
குடற்புண் குணமாக்கும்

எல்லோருக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் இருக்கும். அதற்கு ஒரு பரிகாரமும் இருக்கும்.

அதற்கு ஒரு பரிகாரமும் இருக்கும். நான் தெரிந்து கொண்ட சிலவற்றை
உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில்
கற்கண்டு போட்டு ,அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட,
கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும்
நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ]
இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து,
செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, .
நெய்தீபம் ஏற்றி ,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால்
தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்.
குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால்,
மன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயங்களில்
தீபம் ஏற்றி வழிபடுவது ரிசிகள் சொல்லிய பரிகாரம்.
கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும்,
மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும்
வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.
ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும்
கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,
திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.
ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம்
குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.
வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு
எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால் ,ஏதும் பூதகண
சேஷ் டைகள் இருந்தால் நின்று விடும்.
சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி
12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்கு
சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும்.
21 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி
வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.
கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில்
தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி
சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பு குறைய,
திங்கட் கிழமைகளில் சிவபெருமானுக்கு,
பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும்.
சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில்
தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும்
நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.
சிவன் கோவிலில் கால பைரவரையும்,
விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும்
வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.
சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை
21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,
நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும்.
இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும்
சக்தி உள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு.
பிரதோஷ காலத்தில், ரிஷபாரூட மூர்த்தியாய்,
மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத
யாகங்களை செய்த பலனை பெறுவார்கள்.
அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு
காட்டப்படும் தீபாரதனையை பார்த்தால்
எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.
மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு
தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால்,
விரைவில் திருமணம் நடை பெறும்.
கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு
அதுவும் இராகு காலத்தில்,செய்வது சிறந்தது.
இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான
அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம்.
நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம்.
ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள்
துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட
நாம் வேண்டிய பிராத்தனைகள் நிறைவேறும்.
வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில்
துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு
ஏற்றி வழிபட,தெய்வ குற்றம்,குடும்ப சாபம் நீங்கும்.
ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்கு
சிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து
27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி,
குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில்
வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.
சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலை
சாற்றி,அர்ச்சனை செய்து வழிபட ,சங்கடங்கள் தீரும்.
சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு
எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட
பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.
இரெட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று
சந்தனக் காப்பு செய்து வழிபடகடன் பிரச்சனை தீரும்.
செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு
செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபட
மூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.
விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று
முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி
அர்ச்சனை செய்யவும்.
ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள
இடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது.
பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில்
தெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.
பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.
புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளில்
காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால்
விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.
வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து
மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து
நெய்விளக்கு ஏற்றி வர ,விரதம் ஏற்ற 192 நாட்களில்
கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.
பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை
சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபட
சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.
வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல்,
பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில்
பூஜை நடக்க உதவுதல்,
அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்-
ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம்
செய்ததற்குச் சமம்.
தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க ,
வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி
வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற
பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா
பூஜையில் கலந்து கொள்வது நற்பலன்களைத் தரும்.
எத்தகைய கிரக தோசமானாலும் தினமும்
சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம்
செய்வது மிக, மிக நன்மை தரும்.
வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால்
குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்.
உயிரையும், உடலையும் பாதுகாக்கும் உடனடி
நிவர்த்திப் பரிகாரங்கள் -
மகா மிருத்யுஞ்ஜய ஹோமம் -திருக்கடையூரில் செய்வது
ஸ்ரீ வாஞ்சியம் சென்று வாஞ்சிநாதரை தரிசிப்பது,
லட்சுமி நரசிம்மர் ,யோக நரசிம்மரை வழிபடுவது,
ஆஞ்ச நேயரை வழிபடுவது, ஆகும்.
தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து,
அதற்குரிய மந்திரங்களை சொல்லி வந்தால்
நீண்ட ஆயுள் கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் மக நட்சத்திரத்தன்று
அகத்தியரிடம் ஆசி பெற்று, அகத்திக்கீரையை
எருமை மாடுகளுக்கு கொடுக்க மரண பயம் நீங்கும்.
இராமேஸ்வரம் ஆலயத்தில் இருக்கும் 22 தீர்த்தங்களில்
தீர்த்தமாட இயலாதவர்கள் ,கடல் நீரின் ஒரு பகுதியாக
இருக்கும் அக்னி தீர்த்தம், ஸ்ரீ ராமர் உருவாக்கிய
கோடி தீர்த்தத்தில் நீராடினாலே பாவங்கள்,
தோஷங்கள், பித்ரு தோஷமும் நீங்கும்.
அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தரும்
பெருமாள், லட்சுமி நரசிம்மர், லட்சுமிஹயகிரீவர்
ஆகியோரை தரிசித்து ,கேசரி, பாயாசம் நைவேத்தியம்
செய்ய தொழில்,வியாபார விருத்தி, நிரந்தர வேலை,
மற்றும் லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.
சிறிது பச்சரிசி, எள்ளு, தினை சேர்த்து மாவாக்கி,
எறும்பு புற்றுகளில் தூவினால் வாயில்லா ஜீவன்கள்
உண்டு மகிழும் போது அவற்றின் வயிறு வாழ்த்த
அதனால் நாம் புண்ணியம் பெறலாம்.Image may contain: 1 person, smiling

மாதுளம் பழச்சாற்றை வெயிலில் வைத்து சில நிமிடங்கள் கழித்து குடித்தால்.

மாதுளம் பழச்சாற்றை வெயிலில் வைத்து சில நிமிடங்கள் கழித்து குடித்தால்

மாதுளம் பழச்சாற்றை வெயிலில் வைத்து சில நிமிடங்கள் கழித்து குடித்தால்
மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில்
இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக் கும் பழத்தில் சிறந்தது.
அந்த மாதுளம் ( #Pomegranate #Juice)  பழத்தை பிழிந்து அதன் சாற்றை பாத்திரத்தில் விட்டு சிறிதுநேரம் வெயிலில் வைத்தபிறகு அதனை அப்ப‍டியே எடுத்துக்குடிக்கவேண்டும். அவ்வப்போது அவ்வா று குடித்து வந்தால் குடிப்ப‍வர்களது நினைவாற்றல் ( #Memory #Power ) பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதியாகும் மேலும் மாதுளம் பழத்தின் அனைத்து நன்மைகளையும் அவர்கள் பெற்று ஆரோக்கிய வாழ்வினை வாழலாம்.

Sunday, April 29, 2018

லஞ்சம் எதற்கு?

திடீரென்று முன்னறிவிப்பின்றி அண்டா அண்டாவாக உணவுகள் தயாராகிக்கொண்டிருப்பதைக் கண்டதும், கோபாலன் நேராகத் தந்தையிடம் போனான். நந்தனுக்கு இவன் வரும் தோரணையைப் பார்த்ததும் வந்த என்னவோ குழப்பம் செய்யப்போகிறான் என்று தோன்றியது.
அப்பா, அப்பா..
சொல் கண்ணா
இங்க என்ன நடக்குது? திடீர்னு எதுக்கு இவ்ளோ சாப்பாடு? என்ன விஷயம்னு சொல்லுங்க?
கண்ணா, நாமெல்லாரும், விவசாயத்தையும், மாட்டையும் நம்பித் தான் இருக்கோம்.
அதுக்கு?
அதுக்கு ஆதாரம் நீர்வளம்.
அதான் யமுனை இருக்கேப்பா... வத்தவே வத்தாதே...
இருக்குப்பா... இருந்தாலும் காலாகாலத்தில் மழை பெஞ்சாத்தானே பயிர் நல்லா விளையும்? மாட்டுக்கும் வேண்டிய புல் கிடைக்கும்? பயிர் நல்லா விளைஞ்சு மாடெல்லாம்‌ நல்லா இருந்தாத்தான் நாமளும் நல்லா இருக்கமுடியும் கண்ணா?
சரி, அதுக்கும் இந்த சாப்பாட்டுக்கும் என்ன சம்மந்தம்?
வருணன்தான் மழைக்கு தெய்வம். வருணன், அக்னி, வாயு எல்லாருக்கும் தலைவன் தேவேந்திரன்.
எதுக்கு இவ்ளோ சாப்பாடுன்னு கேட்டா கதை சொல்றீங்களேப்பா...
கதையில்லடா. தேவேந்திரனை சந்தோஷப்படுத்தறதுக்காக வருஷா வருஷம் ஒரு யாகம் பண்ணுவோம் கண்ணா. அந்த யாகத்தில் இந்த சாப்பாட்டையெல்லாம் ஆஹூதியா கொடுக்கணும். இதை ஏத்துக்கிட்டு இந்திரன் ஸந்தோஷப்பட்டு, நமக்கு காலாகாலத்தில் மழையை கொடுப்பார்.
அப்பா...
என்ன கண்ணா..
நான் ஒன்னு சொல்லவா?
நந்தனுக்குத் தெரிந்துவிட்டது.
கண்ணா எதையாவது சொல்லி யாகத்தை நிறுத்திடாத. அப்றம் இந்திரனுக்கு கோபம் வரும்.
அப்பா.. நாம் தர்மத்தை ஒழுங்கா செய்தா தெய்வம் சந்தோஷப்படுமா?
ஆமா சந்தோஷப்படும்.
நம்ம தர்மம் என்ன? பசுமாடுகளை நல்லா பாத்துக்கறது.. அதை நாம சரியாத்தானே செய்யறோம்
ஆமா...
அதுக்கு தெய்வம் சந்தோஷப்படுமா இல்லையா?
படும்..
பின்ன எதுக்கு லஞ்சம் கொடுக்கறா மாதிரி இந்த யாகம்?
அதுக்கு பேசாம தர்மத்தை விட்டுட்டு யாகமே செய்துட்டிருக்கலாமே...
அதற்குள் பெரிய கூட்டம் கூடிவிட்டிருந்தது.
நந்தன் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தான்..
இப்ப என்னதான் சொல்ற கண்ணா?
யாகமெல்லாம் வேணாம்பா..
நந்தனுக்கு சற்று பயமாக இருந்தது. தலைவனாக இருந்தாலும் தன்னிச்சையாக‌ப் பொது முடிவுகளை எடுப்பதில்லை அவன்.
நிமிர்ந்து கூட்டத்தைப் பார்த்தான். நந்தனது எண்ணத்தைப் புரிந்துகொண்ட ஒருவன் சட்டென்று குரல் கொடுத்தான்..
கண்ணன் சொல்றதுதான் சரி. கண்ணன் சொன்னபடி செய்யலாம்
உடனே அனைவரும் அதையே சொன்னார்கள்.
அவ்வளவுதான் நந்தனுக்கு நிம்மதி. எல்லோரும் சேர்ந்து கண்ணன் சொன்னபடி யாகத்தை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்தனர்.
ஆனால் எல்லார் மனதிலும் ஒரு சந்தேகம். யாகம் செய்வதானால், செய்யப்பட்ட அவ்வளவு உணவையும், அக்னியில் கொடுத்துவிடலாம். இப்போது இந்த உணவுகளை என்ன செய்வது?
நந்தன் கேட்டே விட்டான்.
அப்பா, நம்மைக் காப்பது இந்த கோவர்தன மலை. அதுக்குகீழ உள்ள புல்வெளியில் பசுவெல்லாம் மேயறது. அதில இருக்கற சுனைகள்ளேர்ந்து தீர்த்தம் கிடைக்குது. நிறைய மூலிகைகள் கிடைக்குது. எதிரிகள்கிட்டேர்ந்து அரண் மாதிரி காப்பாத்துது..
இந்த மலைக்கே பூஜை பண்ணலாம்பா..
செய்த எல்லா பதார்த்தங்களையும் வண்டில எடுத்துக்கிட்டு மலையடிவாரத்துக்கு போவோம்..
அவ்வளவு பேருக்கும் ஒரே குஷி.
எல்லாரும் கிளம்பிவிட்டனர். நாமும் அந்த கோஷ்டியில் இணைந்துகொள்வோம்
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் !



அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும்.
திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று.
மதுரையில் தினந்தோறும் திருவிழாதான். ஆனால் சித்திரை திருவிழாதான் பிரசித்தம். மீனாட்சி திருக்கல்யாணமும் மறுநாள் நடக்கும் தேரோட்டமும், அதை தொடர்ந்து சித்திரா பௌர்ணமி தினத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் மதுரைவாசிகளுக்கு மறக்க முடியாத நினைவுகள். கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வுதான் என்றாலும், ஆண்டுக்கு ஆண்டு அழகரை காண வரும்கூட்டம்அதிகரித்துக்கொண்டு
தான் இருக்கிறது.
No automatic alt text available.
சித்ரா பௌர்ணமியன்று வானில் முழு நிலவு ஜொலிக்க தலை நிறைய மல்லிகை சூடி அழகரை தரிசிக்க கூட்டம் கூட்டமாய் போகும் மதுரை பெண்களை தரிசிப்பது தனி அழகுதான். அழகர் மலையில் இருந்து மதுரை வந்து ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்து விட்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுத்து விட்டு மீண்டும் அழகர் மலைக்குத் திரும்பும் வரை 'சாமி இன்னிக்கு எங்க இருக்குது?' என்பதே சித்திரைத் 
திருவிழாவில் மதுரைக்கு வரும் மக்களின் முக்கியமான கேள்வியாக இருக்கும்.
தன் தங்கை ஸ்ரீமீனாட்சிக்கும் ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும் கல்யாணம் நடக்கும் போது செய்தியைக் கேள்விப்பட்டு ஸ்ரீஅழகர், கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த வைபவத்தைப் பார்க்க அழகர் மலையில் இருந்து இறங்கி சகல கோலாகலகங்களுடன் மதுரையை நோக்கி வருகிறார். வரும் வழி எங்கும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதால் தங்கையின் திருமணத்தை காணமுடியாமல் போய்விடுகிறது. அந்த சோகத்துடன் வைகையில் எழுந்தருகிறார் என்கிறது புராண கதை.
அது ஓரு புறம் இருக்க, சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' என சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு.
சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என சொல்லியிருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் கூறுகின்றன. எது எப்படியோ நமக்கு பத்துநாள் திருவிழா கிடைத்ததே அதுதான் முக்கியம்.

இதற்குத்தான்..... பாத்திரம் அறிந்து பிக்ஷை யிடு என்பார்கள்.

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்:
உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்? அதற்கு அந்த பிச்சைகாரன்: சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது.
கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்.
“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது.
ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை.
வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.”
“வேறு ஒண்ணா…?
எதுவா இருந்தாலும் சரி, என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன்.
“உன்னை என்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”
“என்னது பிசினஸ் பார்ட்னரா...?"
ஆமாம்…
எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது.
அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம்.
உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன்.
நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்!”
“முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு” என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.
“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்…?
உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.
“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்”
அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.
“என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.
“ஆமாம்ப்பா உனக்கு 90%
எனக்கு ஜஸ்ட் 10% போதும்.
எனக்கு பணம் தேவையில்லை.
அது நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காகத் தான்.”
“எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான்.
இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது.
ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான்.
புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கழுத்தில் மைனர் செயின் அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.
ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்….
“என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான்.
அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்.
“உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்!” என்று ரூல்ஸ் பேசினான்.
அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்?
ஒரு செகண்ட் யோசியுங்களேன்….
இது தான் நமது எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிறது.
இறைவன் தான் பிசினஸ் பார்ட்னர்.
நாம் தான் அந்த புதுப்பணக்காரன் (?!).
இறைவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை.
ஒவ்வொரு நொடியை.
நாம் விடும் ஒவ்வொரு மூச்சை.
ஐம்புலன்களை நமக்கு கொடுத்து,
அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்தான் இறைவன். அதுமட்டுமா?
ஐம்புலன்கள் போதாது என்று
கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்கள் கொடுத்தான்.
இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிட துவங்கினால்…
அது முடிவே இல்லாமல்தான் போய்கொண்டிருக்கும்.
இவ்வளவு தந்த அவனுக்கு
ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்.
அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன்.
நமது நன்றியுணர்ச்சிக்காக
அதை எதிர்பார்க்கிறான்.
அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக.
நன்றியுணர்ச்சி மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?
இறைவனை வணங்குவதோ,
வேதங்களை படிப்பதோ,
ஆலயத்துக்கு செல்வதோ,
தொண்டு முதலானவற்றில்
நம்மை ஈடுபடுத்திக்கொள்வதோ அல்லது
சக மனிதர்களுக்கு உதவுவதோ
இவை யாவும் செய்வது நமக்காகத்தான், நம்முடைய நன்மைக்காகத்தான் என்றாலும்,
இறைவன் நமக்கு அளித்த
உயிரையும், உடலையும்,
உறுப்புகளையும்
அவன் கூறிய வழியில்,
அவன் விரும்பிய வழியில்
நடத்திக் கொண்டு இருக்கிறோம்,
என்ற திருப்தியோடு,
இவ்வளவையும் கொடுத்த நம்
இறைவனுக்கு நாம் நன்றியுடன் இருக்கிறோம் என்று காட்டத்தான்.
மற்றபடி இறைவனுக்கு அது தேவை என்பதால் அல்ல.
" நன்றி "

கடவுள்_எங்கே_இருக்கிறார் :

ஒரு ஊரில் சிலர் கடவுளைத் தேடிப் புறப்பட்டார்கள். அந்த ஊர் மக்களும் அவர்களை வழியனுப்பி வைத்தார்கள்.
வெளியூர் சென்றிருந்த அந்த ஊர்ப் பெரியவர் ஒருவர், அன்று தான் ஊர் திரும்பினார். தன் ஊரில் சிலர் கடவுளைத் தேடிச் சென்றிருப்பதை அறிந்தார்.
உடனே அவர் ஒரு கழுதையின் மீது அமர்ந்து அவர்கள் சென்ற திசையை நோக்கி வேகமாகச் சென்றார். சில மணி நேரத்தில் அவர்களைப் பிடித்து சந்தித்து விட்டார்.
கழுதையிலிருந்து கீழே இறங்கிய அவர், "நீங்கள் அனைவரும் கடவுளைத் தேடிப் புறப்பட்டுள்ளீர்கள் என கேள்விப்பட்டேன். உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்" என்று வாழ்த்தினார்.
பின் மீண்டும் அவர் கழுதையின் மீது ஏறி அமர்ந்து அவர்கள் செல்லும் வழியிலேயே கழுதையை ஓட்டத் துவங்கினார்.
பெரியவர் ஊர் திரும்பாமல் தங்களுக்கு முன்னால் செல்வதைக் கண்ட அவர்கள் ஆச்சர்யமடைந்தார்கள். அவர்களில் ஒருவர் "பெரரியவரே! ஊர் திரும்பாமல் எங்களுக்கு முன்னால் செல்கிறீரே..?" என்று கேட்டார்.
பெரியவரும்... "நான் என் கழுதையைத் தேடி வந்தேன். வரும் வழியில் உங்களைப் பார்த்ததும் வாழ்த்தினேன். மீண்டும் என் கழுதையைத் தேடிப் புறப்பட்டு விட்டேன். என் கழுதையைக் கண்டுபிடித்த பின்பே ஊர் திரும்புவேன். கழுதை கிடைக்காமல் ஊர் திரும்ப மாட்டேன்" என்றார்.
இதைக் கேட்ட அவர்கள் "பெரியவர் கழுதை மீது அமர்ந்தபடியே கழுதையைத் தேடுகிறாரே. இவரைப் போல் முட்டாள் யார் இருக்க முடியும்." என்று எண்ணிச் சிரித்தார்கள்.
"ஏன் சிரிக்கிறீர்கள்..?" என்று கேட்டார் அப் பெரியவர்.
"பெரியவரே.. நீங்கள் கழுதையின் மீது தான் அமர்ந்து இருக்கிறீர்கள். உங்களிடமே தான் கழுதையும் இருக்கிறது. நீங்கள் கழுதையை தேடிப் போவதாகச் சொல்வதால் நாங்கள் சிரிக்காமல் என்ன செய்வது".. என்றான் அவர்களில் ஒருவன்.
அதற்கு பெரியவர்.. "நீங்கள் கடவுளத் தேடிச் செல்வதாகச் சொல்கிறீர்கள். அதற்கு தான் நான் உங்களைப் பார்த்துச் சிரித்தேன் என்று பதில் கூறினார்.
பெரியவரின் எதிர் கேள்விக்கு அவர்கள் பதில் எதுவும் சொல்லாமல் அவரையே பார்த்தபடி இருந்தனர்.
நான் என்னுடனேயே இருக்கும் கழுதையை தேடி எப்படி செல்கிறேனோ.. அது போலவே நீங்களும், "உங்களுக்குள்ளேயே இருக்கும் கடவுளைக் காணாமல் வெளியில் வீனாகத் தேடி அலைகிறீர்களே என்றார் பெரியவர்.
அப்போது தான் அவர்களுக்கு உண்மை புரிந்தது. தங்கள் தவரை உனர்ந்தவர்களாக பெரியவரிடம் மன்னிப்பு கேட்டு அவருடன் சேர்ந்து அவர்களும் ஊர் திரும்பினார்கள்.
<*><*><*>***********************<*><*><*>
இதையே..."#உன்னை_அறிந்தால்" எனும் தலைப்பில் #ரமண #மகரிஷிஅவர்கள்
பின்வருமாறு எழுதுகிறார் :
'#உன்னையே_நீ_அறிவாய்' என்றார் சாக்ரடீஸ். 'நான் யார்' என்று கேள்வி கேட்கச் சொன்னார் #ஸ்ரீரமணர். இந்த இரண்டு கேள்விகளையும் மேலோட்டமாகக் கேட்டு, மேலோட்டமாக பதிலையும் சொல்லிக்கொண்டு, மேம்போக்காக வாழ்வதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர் பலர்.
அன்பர் ஒருவர், 'உண்மையில் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா..?' என்று என்னிடம் கேட்டார். 'கடவுள் இருக்க வேண்டுமா, கூடாதா..? நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்..?' என்று அவரிடம் திருப்பிக் கேட்டேன்.
"நம்மைக் காப்பதற்கும் நமக்கு நல்லது செய்வதற்கும் கடவுள் இருக்கத்தான் வேண்டும்" என்றார் அவர். உடனே நான், 'கடவுள் எங்கே இருக்கிறார், தெரியுமா..?' என்றேன்.
அவர் கோயிலைக் காட்டினார் ; ஆகாயத்தைக் காட்டினார் ; இயற்கையைச் சுட்டிக்காட்டினார் ; அருகில் அமர்ந்திருந்த அவருடைய அம்மாவையும் அப்பாவையும் காட்டி, 'இவர்களே என் தெய்வங்கள்' என்றார். அத்துடன் நிற்காமல், நான்காவது வரிசையில், ஒரு பெண்மணியின் மடியில் இருந்த ஒரு குழந்தையைச் சுட்டிக் காட்டி, 'குழந்தையும் தெய்வமும் ஒன்று' என்றார்.
நான் மறுத்தவாறு தலையசைத்துக் கொண்டே இருந்தேன். கடைசியில், அயர்ச்சியும் அலுப்புமாக, 'நீங்களே சொல்லுங்கள் சுவாமி..! கடவுள் எங்கே தான் இருக்கிறார்.?' என்று கேட்டார்.
மெள்ளப் புன்னகைத்த படி, 'கடவுள் இங்கே இருக்கிறார் ; அங்கே இருக்கிறார் என்று சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமே இல்லை. அவர் எங்கும் இருக்கிறார். அவ்வளவு ஏன், உங்களுக்கு உள்ளேயும் இருக்கிறார்..!' என்றேன்.
''ஆம். கடவுள் என்பவர்,
உனக்கு உள்ளே இருக்கிறார் ; அவருக்கு உள்ளேயும் இருக்கிறார் ;
இதோ... இந்த இளைஞனுக்கு உள்ளேயும், அதோ, அந்த மூதாட்டிக்கு உள்ளேயும் என எல்லா மனிதர்களிடமும் இருக்கிறார் ;
எல்லா உயிர்களிடத்தும் இருக்கிறார்.
கடவுள் உனக்குள் இருப்பது போல் அவருக்குள்ளும் இருக்கிறார் என்றால், நீ வேறு அவர் வேறு இல்லை. பிரிவினை கிடையாது ;
ஏற்றத்தாழ்வு இல்லை ;
நீயும் அவரும் ஒன்றே..!
நீ உன்னிடம் காட்டுகிற அன்பையும் நேசத்தையும் அவரிடமும் காட்டு.
ஏனெனில், அவர் தான் நீ ; நீதான் அவர்..!
உன்னை அவராகவும் அவரை நீயாகவும் பார்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும், தெரியுமா..? உனக்குள் இருக்கிற உன்னை உற்றுப் பார்க்க வேண்டும். அதற்காகத்தான் இந்த எளிய பயிற்சிகள்..!'' என்றேன்.
ஆம் அன்பர்களே :
முதலில் நீங்கள் உங்களை உள்ளார்ந்து பார்க்கத் துவங்கி விட்டால், பிறகு இந்த உலகத்தாரில் உங்களைக் காண்பீர்கள்..!

மனம் #என்றால் #என்ன..?

மனம் என்றால் பஞ்ச பூத அம்சங்களில் ஒன்றான காற்று ஆகும். காற்றானது இந்த பூமியை எப்படி சுற்றி
ஒரு கவசம் போல் இருக்கிறதோ, அதுபோல நமது மனமும் நமது எல்லா
உணர்வுகளையும், உடலையும்
சூழ்ந்துள்ளது.
ஆகவே எல்லா விதமான உணர்வுகளும்,
செயலும் ஐம்புலன்களும் மனதின்
வழியே செயல்படுகிறது. இந்த மனம் தான் பார்க்கிறது, கேட்கிறது, ரசிக்கிறது,
உணர்கிறது, சுவைக்கிறது, நுகர்கிறது.
இப்படி செயல்படுகிற மனம் ஒவ்வொரு
பிறவியிலும் ஓர் அனுபவத்தை
பெறுகிறது.
ஓர் அறிவாய் இருக்கின்ற போது
உணர்வை பெறுகிறது.
ஈரறிவாய் இருக்கின்ற போது
உணர்கிறது மற்றும் நுகர்கிறது.
3-வது அறிவாய் இருக்கின்ற போது
உணர்வு, நுகர்வு மற்றும் கேட்கிறது.
4-வது அறிவாய் இருக்கின்ற போது
உணர்வு, நுகர்வு, கேட்பது மற்றும்
Bபார்க்கிறது.
5-வது அறிவாய் இருக்கின்ற போது
உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது
மற்றும் சுவைப்பது,
6-வது அறிவாய் இருக்கின்ற போது
உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது,
சுவைப்பது மற்றும் சிந்திப்பது.
இப்படி ஒவ்வொரு அறிவிலும்
ஒவ்வொரு அனுபவத்தைப் பெற்று,
மனித பிறவியில் ஆறு அறிவை
பெறுகிறது. ஆறாவது அறிவாகிய
சிந்தித்தல் என்றால் மனதை ஒரு நிலைப்படுத்தி, அதனுடைய சக்தியை உணர்வது. இது தான் ஆறாவது அறிவு.
இந்த அறிவை முழுமையாக பெறுவதற்கு பிராணாயாமம், தியானம் செய்ய வேண்டும். இவற்றிற்கெல்லாம் காரணம் மனம்.
ஆகவே இந்நிலையை பெறாத மற்ற
மனிதர்கள் மிருகங்கள் போல்
சாப்பிடுவது, உறங்குவது என
சிந்தித்தலைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர்.
இப்படி ஏன் என்றால், இந்த மனதின் பயணம் ஓர் அணு முதல் புலன்களின்
இச்சை வழியே நடந்து வந்ததால் மனிதன் ஆன பிறகும் அந்நிலையில்
இருந்து விலகாமல், அதே நிலை
தொடர்கிறது.
ஆகவே மனித வாழ்க்கையில் அவனது மனம், காமம், குரோதம், லோபம், மதம், மாச்சரியம், டம்பம், பொறாமை, மோகம் ஆகிய இந்த எட்டு அவஸ்தைகளும், ஐம்புலன்களும் சேர்ந்து மனத்தை தன் வசப்படுத்தி வைத்திருக்கிறது.
ஆகவே மனதை இதனிடம் இருந்து பிரித்து எடுப்பது தான் ஆறவாது அறிவின் செயலாகும். மனிதன் இதை பயன்படுத்தாத வரைக்கும் மிருகத் தன்மையோடு தான் வாழ்ந்து வருகிறான்.
ஆகவே இந்த உணர்வுகளை மனம்
மற்றவரிடம் செயல் படுத்தி பார்த்து
இன்பம் அடைகிறது.
இதனால் மனிதன் தன்னுடைய நிலையில் இருந்து உயர்வதற்கு வழி,
புலன்களையும், மனதையும்
தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அப்போது
மனத்தின் சக்தியையும், இறையாற்றலையும் உணர்ந்து தன்னுடைய நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். இதுதான் மனதின்
செயல் ஆகும்.
குறிப்பு :
மனிதனுக்கு காமத்தின் மீது மட்டும் ஏன்
அதீத ஈடுபாடு என்றால், எல்லா பிறவிகளிலும் இனப்பெருக்கத்திற்காக
அதிக அளவில் செயல்படும் உணர்வு
காமம் தான்.
ஆகவே தான் மனிதப்பிறவியில் அதே
நிலையில் இருப்பதால் தான் இறைத்தன்மையை அறிய முடியாமல்
தவிக்கிறது..

எது முக்கியம் எது தேவையற்றது என்பதைப் பகுத்துப் பார்க்கத் தெரிந்துவிட்டால்.

துறவிகள் இருவர் தொடர்ந்து பெய்த மழையினால் ஒரு குடிசையின் கீழ் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தனர். மழை நின்றதும் தங்களது இருப்பிடத்தை நோக்கி நகர்ந்து செல்லும்போது, வழியில் ஓர் அழகான இளம் பெண் சாலையைக் கடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.
இதைக்கண்ட துறவிகளில் ஒருவர், “என்னாயிற்று பெண்ணே? ஏதேனும் உதவி தேவையா?”என்று கேட்டார்.
பதிலுக்கு அந்தப் பெண், “நான் என் தோழியின் திருமணத்துக்குச் செல்ல உள்ளேன். ஆனால், இந்தச் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. நடந்து சென்றால் நிச்சயம் என் அழகிய பட்டுப் பாவாடை பாழாகிவிடும்” என்று கூறி வருந்தினாள்.
“கவலைப்படாதே, என் தோள்களின் மீது ஏறிக்கொள். நீ சேர வேண்டிய இடத்தில் உன்னைச் சேர்த்துவிடுகின்றேன்” என்று கூறிவிட்டு அவளுக்கு உதவி புரிந்தார்.
திரும்பி வரும் வழியில் தன்னுடன் இருக்கும் மற்றொரு துறவி கோபமாக இருப்பது போல அவருக்குத் தோன்றியது. ”ஏன் என் மீது கோபமாக உள்ளீர்கள்?” என்று கேட்க, அதற்கு அவர் ”நாம் ஒரு துறவி என்பதை மறந்துவிட்டு அந்தப் பெண்ணை எப்படித் தொட்டுத் தூக்கலாம்? இது தவறானது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?” என்று கேட்டார்.
உதவி செய்த துறவி, “தூக்கிய அந்தப் பெண்ணை அப்போதே நான் இறக்கிவிட்டேன், நீங்கள்தான் அந்தச் சம்பவத்தை இறக்காமல் மனதில் சுமந்துகொண்டு இருக்கிறீர்கள்”என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
நாமும் நமது வாழ்வில் பிறர் ஏற்படுத்திய காயங்களை மனதில் தூக்கிக்கொண்டு செல்கின்றோம். எது முக்கியம் எது தேவையற்றது என்பதைப் பகுத்துப் பார்க்கத் தெரிந்துவிட்டால் , வாழ்வு என்றென்றும் ஆனந்தமே.

ஆசாராம் பாபு...

குழந்தையை கற்பழித்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஆசாராம் பாபு என்ற அயோக்கியனை
"புகழ்பெற்ற துறவிகள்"என்ற பெயரில் 3ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்று இருக்கிறான் பாஜக ஆளும் ராஜஸ்தானில்
சாமியார் பாபாராம்தேவும் இதில் இருப்பது இன்னமும் கொடுமையான விஷயம்.
Image may contain: 4 people

தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007.

ஏரிகளைப் பாதுகாக்க தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007
பராந்தகச் சோழன் ஆட்சிக்காலத்தில், தனது எதிரிகளை எதிர்நோக்குவதற்காக, தனது புதல்வன் இராஜாதித்தனை, படை வீரர்களுடன் திருமுனைப்பாடி என்ற இடத்தில் ஆண்டுகள் பல தங்கியிருந்து முகாமிடச் செய்தான்.
ஆயிரக்கணக்கான வீரர்கள் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதை கண்ட இராஜாதித்தன் தன் படைவீரர்களைக் கொண்டு காவிரி நீரைச் சேமிக்க அமைத்தது தான் வீராணம் ஏரி. இந்த ஏரியின் நீளம் 18 கிலோ மீட்டர், அகலம் 4 கிலோ மீட்டர். 1011 ஆம் ஆண்டு கட்டத் துவங்கி 1037-ல் கட்டி முடிக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. அரசர்கள் காலத்தில் கூட நீர்நிலைகளை மேம்படுத்தும் எண்ணம் அவர்களுக்குள் தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருந்திருக்கிறது. ஆனால் இன்று நீர்நிலைகளை மேம்படுத்தா விட்டாலும் அழிக்காமல் இருந்தால் போதும் என்ற நிலை உருவாகி விட்டது.
இவ்வாறு, நாட்டின் விடுதலைக்கு முன் அதாவது 1947-ல் சென்னை மாகாணத்துக்குள் இருந்த இன்றைய தமிழக நிலப்பரப்பில் மட்டும் 50,000 நீர்நிலைகள் இருந்தன. இன்றைக்கு அது பாதிக்கும் குறைவாகிவிட்டது. வெறும் 20,000 நீர்நிலைகள் மட்டுமே எஞ்சியிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
தற்போது, தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. இவற்றுள் 13,710 ஏரிகள் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மாநிலத்தில் 5.40 இலட்சம் ஹெக்டேர் ஏரிகள் மூலம் நீர்ப்பாசன வசதி பெறுகிறது. அரசின் புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் இன்றைக்கு 18,789 பொதுப்பணித் துறை ஏரிகள், 29,484 கிளை வாய்க்கால்கள், 86 ஆறுகள், 200 அணைகள் இருக்கின்றன.
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகாலமாக பல்லாயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், குட்டைகள் காணாமல் போய்விட்டன. அதன் விளைவே இன்று தமிழகம் மழை வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
சொல்லப்போனால், மழையின் தீவிரத்தை அவர்கள் நன்கு உணர்ந்திருந்த காரணத்தினாலேயே, சென்னையைச் சுற்றி, நூற்றுக்கணக்கான ஏரிகளை அமைத்திருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாக கருதப்பட்டது.
தமிழகத்தில் இயற்கையின் அருட்கொடையான நதிகளையும், நீராதாரங்களையும் நாம் சரியாகப் பராமரிக்கவில்லை என்பதைத் தாமதமாக உணர்ந்திருக்கிறோம். மேலே சொன்ன பட்டியலில், பல நதிகள் தற்போது வரைபடங்களில் மட்டுமே இருக்கின்றன. நீர்நிலைகளின் நிலை அதைக் காட்டிலும் மோசம். நிலத்தடி நீரும் மிகவும் குறைந்துவிட்டது. இதனால் 1.10 கோடி ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாய நிலத்தின் பரப்பும் சுருங்கிக்கொண்டே வருகிறது.
இவை அனைத்திலும் அரசுக்கும், மக்களுக்கும், ரியல் எஸ்டேட்காரர்களுக்கும் பங்கு உண்டு.
தமிழகத்தில் பரவலாக இளைஞர்கள் குழுக்கள் நீர்நிலைகளையும், மறைந்துவிட்ட ஆறுகளையும் தேடத் தொடங்கியிருப்பது நம்பிக்கை தருகிறது
இதில் இன்னொரு நிர்வாகச் சிக்கல் என்னவென்றால், ஏரிகளைப் பொறுத்த வரை ஏரி நிர்வாகம் பொதுப்பணித்துறை அல்லது ஊரக வளர்ச்சித்துறையிடம் இருக்கும், அதன் வரைபட விவரம் நில அளவையிடமும், நிர்வாகம் வருவாய்த்துறையிடமும், அதிலுள்ள வண்டல் மண் கனிம வளத்துறையிடமும், பாதுகாப்பு காவல்துறையிடமும் அதிகாரப்பகிர்வு உள்ளது.
அதிக வறட்சி, வெள்ளம் இரண்டிலிருந்தும் நம்மை நாம் காத்துக்கொள்ள ஏரிகளின் பாதுகாப்பு மிகமிக அவசியம்…
அதன் படி, தமிழ்நாடு சட்டப்பேரவையின் பின்வரும் சட்டமானது, 2007 ஆம் ஆண்டு மே திங்கள் 22ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது.
பொதுப்பணித் துறையின் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மையின் கீழ் உள்ள ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்துவதற்காகவும், ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காகவும், இத்தகைய ஏரிகளைப் பாதுகாப்பதற்கும் அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்குமான நடவடிக்கைகளுக்கு வகை செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் ஐம்பத்து எட்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுக:-
தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (Tamilnadu protection of Tanks and Eviction of Encroachment Act,2007)
(சட்ட எண் - 8/2007)
பிரிவு 1. குறுந்தலைப்பு, பரவெல்லை மற்றும் தொடக்கம்:-
*****************************************************************************
(1) இந்தச் சட்டம் 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் அளாவி நிற்கும்.
(3) இது, அரசானது, அறிவிக்கையின் வாயிலாகக் குறிக்கக்கூடிய அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
பிரிவு 2. பொருள் வரையறைகள்.-
**********************************************
இந்தச் சட்டத்தில் தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி...
(a) ‘ஆயக்கட்டுப் பரப்பு’ என்றால், எந்த ஒரு பாசன அமைப்பின் மூலமும் அதன் ஆளுகையின்கீழ் பாசனம் பொருள்படும்.
(b) ‘வயல் வாய்க்கால்’ என்றால், பாசனத்திற்காக நீரைப் பெறவும், அதை பகிர்ந்தளிப்பதற்காகவும், தற்போது இருக்கின்ற வாய்க்கால் அல்லது இனி கட்டப்பட இருக்கின்றதுமான ஒரு வாய்க்கால் என்று பொருள்படும்.
c) வயல் வடிகால் என்றால், நிலத்திலிருந்து உதவாத கழிவு நீர் அல்லது உபரி நீரை வெளியேற்றும் நீர் செல்வழி என்று பொருள்படும்
(d) ‘முன்கரைப் பரப்பு’ என்றால் ஏரிக்கரையின் நீர்வரத்துப் புக்கப் பகுதியில் (Tank bund)உள்ள முழுநீர்மட்ட அளவிற்கு மேலுள்ள நீர் பிடிப்புப் பகுதியை ஒட்டிய நிலப்பகுதி என்று பொருள்படும்.
(e) ‘ஏரியின் முழு நீர்மட்டம்’ என்றால், உபரிநீரை, வெளியேற்றும் கட்டமைப்பின் நீர் வழிந்தோடும் மட்டத்தின்வரை தேக்கி வைக்கப்படும் நீரின் மட்டம் என்று பொருள்படும்.
(f) ‘அரசு’ என்றால் மாநில அரசு என்று பொருள்படும்.
(g) ‘நிலம் ‘ என்றால், நிலத்திலிருந்து கிடைக்கப்பெறும் நலப் பயன்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட பொருள்களையோ அல்லது அதனுடன் இணைக்கப்பட்ட எவற்றுடனும் நிரந்தரமாகப் பொருத்தப்பட்ட எதுவும் என்று பொருள்படும்.
(h) ‘வகுத்துரைக்கப்பட்ட‘என்றால், விதிகளால் வகுத்துரைக்கப்பட்ட என்று பொருள்படும்.
(i) ‘வழக்கு வாய்க்கால் ‘ என்றால், நீர் ஆதாரமொன்றிலிருந்து நீரினைப் பெற்று, கீழ்மட்டத்தில் உள்ள ஏரிக்கு வழங்கும் ஒரு வாய்க்கால் என்ற பொருள்படும்.
(j) ‘உபரி நீர் செல்வழி‘என்றால், நீர் ஆதாரமொன்றிலிருந்து நீரினைப் பெற்று, கீழ்மட்டத்தில் உள்ள அடுத்த ஏரிக்கோ அல்லது ஆற்றுக்கோ எடுத்துச்; செல்லும் வாய்க்கால் என்ற பொருள்படும்.
(k) ‘உபரிநீர் கட்டமைப்பு‘ என்றால், ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரை, ஏரியின் பாதுகாப்பின் பொருட்டு, கீழ்மட்டத்தில் உள்ள ஆறு அல்லது ஏரிக்கு வெளியேற்றும் ஒரு ஏற்பாடு என்று பொருள்படும்.
(l) ‘ஏரி‘ என்றால், நீரினைப ;பயன்படுத்துவதற்குத் தேக்கி வைப்பதற்காக ஏற்படுத்துப்பட்ட ஒரு கட்டமைப்பு மற்றும் வழங்கு வாய்க்கால் மற்றும் அதனைச் சார்ந்த கட்டுமானங்கள், ஏரி மதகு, உபரிநீர் செல்வழி மற்றும் அதனைச் சார்ந்த கட்டமைப்புகளை உள்ளடக்கியதாகும். இது தவிர பொதுப்பணித்துறையின் கட்டுப்பாடு மற்றம் மேலாண்மையில் உள்ள வடிகால்கள மற்றும் ஏரியின் புறம்போக்கு நிலங்கள் என்று பொருள்படும்.
(m) ‘ஏரிக்கரை‘ என்றால் ஒரு சிறிய நிலையான மண்ற அணை பொருள்படும்.
(n) ‘ஏரி மதகு‘ என்றால், ஏரியிலிருந்து பாசனத்திற்காக நீரினை வழங்குவதற்கான போக்கு வழி என்ற பொருள்படும்.
(o) ‘நீர்பிடிப்பு பரப்பு‘ என்றால், ஏரியின் முழு நீர்மட்ட அளவில், பரவியுள்ள நீரின் பரப்பு என்ற பொருள்படும்.
பிரிவு 3. ஏரிகளை அளப்பதற்கு பணிப்பாணையிடுவதற்கான அதிகாரம்.- (Power to direct survey of tanks)
அரசானது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஏரிகள் தொடர்பான பரப்பிடங்களைப் பொறுத்த வரையிலான எல்லைகளைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காக வருவாய் துறையில் கிடைக்கக்கூடிய பதிவுருக்களின்படி நில அளவை செய்வதற்குப் பணிப்பாணை பிறப்பிக்கலாம் மற்றும் எல்லைகளை அடையாளம் காணும் நோக்கத்திற்காக வாய்க்கால், அனைத்து நாற்புற எல்லைகள், அடையாளங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் காட்டுகின்ற விளக்கப்படங்களும் தயார் செய்யப்படுதல் வேண்டும்.
பிரிவு 4. நில அளவை அலுவலர்களை நியமித்தல்.-
*********************************************************************
(1) அரசோ அல்லது அரசால் அதிகாரமளிக்கப்பட்ட பிற அலுவலர்கள் எவருமோ ஆணையில் குறித்துரைக்கப்படக்கூடிய அத்தகைய வட்டார எல்லைகளுக்குள்ளாக இருக்கும் ஏரிகளை நில அளவை செய்வதற்காக வட்டாட்சி நில அளவையர் நிலைக்குக் குறையாத அலுவலர் எவரையும் நில அளவை அலுவலராக ஆணை வாயிலாக நியமிக்கலாம்.
(2) நில அளவையர் வகுத்துரைக்கக்கூடிய அத்தகைய முறையில் ஏரிகளை நில அளவை செய்வதை நிறைவேற்றுதல் வேண்டும்.
(3) ஏரிகளைக் கட்டுப்பாடு செய்யும் பொதுப்பணித் துறையின் அத்தகைய அலுவலர்கள் நில அளவை அலுவலருக்கு உதவி புரிதல் வேண்டும்.
பிரிவு 5. நுழைவதற்கான அதிகாரம்.-
************************************************
நில அளவை அலுவலர் மற்றும் நில அளவை அலுவலருக்கு உதவி செய்யும் அலுவலர்கள் ஏரிகளை நில அளவை செய்வதற்காக நிலம் எதிலும் நுழைவதற்கும் மற்றும் தேவைப்படக்கூடிய அனைத்துச் செயல்களையும் செய்வதற்கான அதிகாரத்தைக் கொண்டிருப்பர்.
பிரிவு 6. நில அளவை அலுவலரின் அறிக்கை.-
(1) நில அளவை அலுவலர், ஏரிகளை அளக்கும் பணி முடிந்தபின்பு அவைகளின் எல்லைகளை அடையாளம் காணும் நோக்கத்திற்காக ஏரிகளின் எல்லைகளையும் தேவைப்படும் பிற தகவல்களையும் குறிக்கிற விளக்கப்படம் ஒன்றையும், பதிவுறு ஒன்றையும் தயார் செய்தல் வேண்டும்.
(2) (1)ஆம் உட்பிரிவின்படி தயாரிக்கப்பட்ட விளக்கப்படம் மற்றும் பதிவுருவானது அரசால் குறித்துரைக்கப்படக்கூடிய அத்தகைய ஏரிகளைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிற பொதுப்பணித்துறை அலுவலரொருவரிடம் ஒப்படைத்தல் வேண்டும்.
(3) (2) ஆம் உட்பிரிவில் கட்டப்பட்ட அலுவலரானவர், விளக்கப்படும் மற்றும் பதிவுருவானது ஒப்படைக்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் ஏரியின் எல்லைகளைக் குறிப்பிட்டு வகுத்துரைக்கப்பட்ட அத்தகைய முறையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிடுதல் வேண்டும்.
பிரிவு 7. ஆக்கிரமிப்பை அகற்றுதல்.-
***********************************************
(1) 6 ஆம் பிரிவின் (2)ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட அலுவலர், நபர் எவரும் ஏரியின் எல்லைகளுக்குள்ளாக நிலம் எதையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் எனவும் மற்றும் ஆக்கிரமிப்பாளர் அகற்றப்பட வேண்டும் எனவும் கருதுவாரானால், அந்த அலுவலரானவர் வகுத்துரைக்கப்பட்ட முறையில் அறிவிப்பில் குறித்துரைக்கப்பட்டுள்ள தேதிக்கு முன்னர் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு தொடர்புடைய நபரை கோரி அறிவிப்பு ஒன்றினை பிறப்பித்தல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின்படி அறிவிப்பில் குறித்துரைக்கப்பட்டுள்ள கால அளவிற்குள்ளாக ஆக்கிரமிப்பாளர் ஆக்கிரமிப்பை அகற்றாதவிடத்தும் மற்றும் ஏரியின் எல்லைகளுக்குள்ளாக அமைந்த நிலத்தை விட்டுச் செல்லாமலும் இருக்கிறவிடத்தும், 6 ஆம் பிரிவின்
(2) அம் உட்பிரிவில் கட்டப்பட்ட அலுவலர், தேவைப்படக்கூடிய அத்தகைய காவலரின் உதவியைப்பெற்ற ஆக்கிரமிப்பை அகற்றி ஏரியில் எல்லைகளுக்குள்ளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் உடைமையை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இந்த நோக்கத்திற்காக எந்த காவல் அலுவலரின் உதவியானது தேவைப்படுகிறதோ அவர் அந்த அலுவலருக்குத் தேவையான உதவியைச் செய்தல் வேண்டும்.
(3) ஏரியின் எல்லைகளுக்குள்ளாக நிலத்தின் மீது விளைந்த பயிர் அல்லது எழுப்பப்பட்ட பிற கட்டமைப்பு எதுவும் தண்ட இழப்புக்கு உள்ளாதல் வேண்டும் மற்றும் (1)ஆம் உட்பிரிவின்படியாக அறிவிப்புக்குப் பின்பு ஆக்கிரமிப்பாளரால் கட்டப்பட்ட கட்டடம் அல்லது எழுப்பப்பட்ட பிற கட்டுமானம் எதுவும் அல்லது அதில் சேகரித்து வைக்கப்பட்ட எதையும் ஆக்கிரமிப்பாளர் அகற்றாது இருப்பின் அவையும் தண்ட இழப்பிற்கு உள்ளாதல் வேண்டும்.
பிரிவு 8. குற்றங்களும் தண்டங்களும்.-
***************************************************
(a) சட்டப்படியான அதிகாரமின்றி தண்ணீர் சூழப்பட்ட நிலத்திலும் ஏரியின் நீர்க்கரை பரப்பிடங்களில் நுழைகிற
(b) சட்டப்படியான அதிகாரமின்றி பயிர் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிற
(c) சட்டப்படியான அதிகாரமின்றி மரங்களையும் விளைவித்திருக்கிற கட்டப்பட்ட கட்டமைப்புகளைச் சேதப்படுத்துகிற
(d) ஏரிக்கரையை, ஏரி மதகுகளை, உபரி நீர் கட்டமைப்புகளை பிறவாறு கட்டப்பட்ட கட்டமைப்புகளைச் சேதப்படுத்துகிற
(e) இந்தச் சட்டத்தின்படி அலுவலர்கள் தங்களுடைய பணியினைச் செய்வதைத் தடுக்கிற
(f) ஏரிகளை நிரப்புவதற்கு நீர் வழங்கும் வாய்க்காலின் நீரோட்டத்தை தடுக்கிற வகையில் இடையீடு செய்து அருகிலுள்ள வாய்க்கால் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிக்கிற
(g) ஆயக்கட்டு பரப்பிடத்தை நிரப்புவதற்கு ஏரி மதகிலிருந்து மாற்றி வாய்க்கால்களுக்கான நீரோட்டத்தை தடுக்கிற
(h) வயல் வாய்க்கால்களில் அமைந்துள்ள பகிர்ந்தளிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் அமைப்புகளைச் சேதப்படுத்துகிற
(i) வயல் வாய்க்கால் அமைப்புகளில் உள்ள நீரோட்டத்தைச் சேதப்படுத்தித் தடுக்கிற
(த) பயிர் செய்வதற்காக இயந்திர மற்றும் மின்சார சாதனங்கள் மூலமாக ஏரியிலிருந்து நீரை இழுத்து எடுக்கிற
எவரொருவரும் மூன்று மாதங்கள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவிற்கான சிறைத் தண்டனையுடனோ அல்லது ஐயாயிரம் ரூபாய் வரையிலான பணத்தண்டத்துடனோ அல்லது இரண்டும் விதித்தோ தண்டிக்கப்படுதல் வேண்டும்.
பிரிவு 9. நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.-
இந்தச் சட்டத்தினையொட்டியோ, அல்லது அதன்கீழ்ச் செய்யப்பட்ட விதி அல்லது ஆணையொன்றின்படியோ நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்யக்கருதும் ஏதொன்றிற்காகவும்; நபர் எவருக்கும் எதிராக உரிமை வழக்கு, குற்ற வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கைகள் எவையும் தொடரப்படுதல் ஆகாது.
பிரிவு 10. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.-
இந்தச் சட்டத்தின் வகை முறைகளைச் செயல்படுத்துவதில் இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால், அரசு தமிழ்நாடு அரசிதழின் அறிவிக்கையின் மூலமாக அந்த இடப்பாடுகளை நீக்குவதற்குத் தேவையானதன்று அல்லது உகந்ததென்று தனக்குத் தோன்றக் கூடியவாறு, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு ஒவ்வாதவையாயிராத அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்.
வரம்புரை: ஆனால் அத்தகைய ஆணை எதுவும், இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து இரண்டாண்டுக் கால அளவு முடிவடைந்த பின்னர்செய்யப்படுதலாகாது.
பிரிவு 11. பிற சட்டங்களின் செயற்பாடு பாதிக்கப்படுதல் ஆகாது எனல்.-
இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் அப்போதைக்கு நடைமுறையில் உள்ள பிற சட்டம் எதற்கும் கூடுதலாக இருத்தல்வேண்டுமேயன்றி அதனைக் குறைவுபடுத்துதல் கூடாது.
பிரிவு12. புறம்போக்கு நிலங்களை அயலடைவு செய்தல்.-
சேமிப்புக் கொள்ளளவு, நீரின் தன்மை இவற்றுடனான குறுக்கீடு ஏதுமின்றி, பொதுப்பணித் துறையின் கட்டுப் பாட்டின் கீழ் உள்ள ஏரிப்புறம்போக்கு நிலத்தின் பகுதி எதனையும் அரசு, பொது நலனில் அயலடைவு செய்யலாம்.
பிரிவு 13. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.-
****************************************************************
(1) அரசு, இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையுமோ அல்லது அவற்றுள் ஏதொன்றையுமோ நிறைவேற்றுவற்கான விதிகளைச் செய்யலாம்.
(2) (a) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை ஒரு குறிப்பிட்ட நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறப்பட்டாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளன்றே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(b) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை ஒரு குறிப்பிட்ட நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறப்பட்டாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளன்றே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(3) இச்சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது ஆணை அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும் அது செய்யப்பட்ட அல்லது வெளியிடப்பட்ட பின்னர் கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்பட வேண்டும். அவ்வாறு வைக்கப்பட்ட அல்லது அந்தக் கூட்டத் தொடர் முடிவடைவதற்கு முன்பு சட்டமன்றம் பேரவையானது அத்தகைய விதி, ஆணை அல்லது அறிவிக்கையில் மாற்றம் எதையும் செய்யுமானால் அல்லது சட்டமன்றப் பேரவையானது அந்த விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கை செய்யப்படுதல் கூடாது அல்லது பிறப்பிக்கக் கூடாது என்ற சட்டமன்றப் பேரவை முடிவு செய்யுமானால், அதற்குப்பின் அந்த விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கை அவ்வாறு மாற்றப்பட்ட வடிவில்தான் நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்வுக்கேற்ப அது செல்திறன் அற்றதாதல் வேண்டும்.
ஆயினும் அத்தகைய மாற்றமோ அல்லது செல்திறன் அற்றதாதல் வேண்டும். ஆயினும் அத்தகைய மாற்றமோ அல்லது செல்திறன் அற்றுப்போவதோ, அந்த விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கையின்படி முன்னதாகச் செய்யப்ட்ட ஏதொன்றின் செல்லும் தன்மைக்கும் பாதகம் இல்லாமல் இருத்தல் வேண்டும்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...