Tuesday, April 24, 2018

திருச்சியில் ஆட்டோக்களுக்கு குறைந்த பட்ச மீட்டர் கட்டணமாக ரூ. 30 வசூலிக்க பெருவாரியான மக்கள் ஆதரவு .:-

திருச்சியில் ஓடுகின்ற ஆட்டோக்கள் பெரும்பாலும் , ஆட்டோவின் உரிமையாளர்களே அவரவர் ஆட்டோ வாகனங்களை ஓட்டுவதைத்தான் காண முடிகின்றது
.பல வருடங்களுக்கு முன்பே , திருச்சியில் ஆட்டோக்களுக்கு மீட்டர் போட்டு ,அதன்படி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று ,பொது மக்களிடமிருந்தும் ,எந்த ஒரு தொழிலாக இருப்பினும் அதில் ஒரு நியாயமும் ,அதனால் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பும் மரியாதையும் ஏற்பட வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் மத்தியில் ஒரு உணர்வும் ஏற்பட்டிருப்பது திருச்சியில் மிக அதிகம் .
ஆட்டோக்களுக்கு ,மீட்டர் போட்டு ஓட்ட வேண்டு மென,அதிக அளவு ஆட்டோ ஓட்டுனர்களும் பொது மக்களும் விரும்புகின்றனர்.
காரணம் - ஏதோ ,ஆட்டோ ஓட்டுனர்கள் ,அதிகமாக கட்டணம் கேட்கின்றார்கள் ,அதனை முறைப் படுத்த வேண்டும் அதனால் பயணிகளுக்கு ,செலவு குறையும் என்பதற்காக அல்ல.!
பொதுமக்கள் பயணம் செய்யும் - பேருந்து, சிற்றுந்து , ஷேர் ஆட்டோ, ஆகியவைகளுக்குப் பயணக் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டிருக்கும் போது ,பொது மக்கள் தங்கள் வசதிக்காக ,அவசர காலத்தில் மருத்துவ மனைக்கும் , விஷேச காலங்களில் , திருமணம் ,கோயில்கள் போன்றவற்றிற்கும் , பெரிய காரியங்களுக்கும் செல்வதற்கு ஆட்டோக்களை த்தான் அதிகம் பயன் படுத்துகின்றார்கள் .காரணம்,தங்கள் இருப்பிடத்திலிருந்து ,தாங்கள் விரும்பும் இடத்திற்குப் போய் சேருவதற்கு குறுகிய மற்றும் அதிக அளவு ,ஆக்கிரமிப்பு நிறைந்த சாலை களில் பயணிக்க ஆட்டோதான் வசதியாக இருக்கின்றது.
ஆட்டோவில் மூன்று பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று வாகன சட்டம் கூறினாலும் ,பல சமயங்களில் குழந்தைகள் , சிறுவர்கள் ,உடல் நலமில்லாதவர்கள் ,முதியோர்கள் - மற்றும் அவசர காரணங்கள் என ,தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அதிக பட்சமாக ஆட்டோவில் செல்ல வேண்டியதாகி விடுகின்றது
இதே நிலைதான் அனைத்து பயண வாகங்களிலும் தவிர்க்க முடியாததாய் உள்ளது. அதையெல்லாம் கணக்கிட்டால் ஆட்டோக்களுக்கு 30 ரூபாய் குறைந்த பட்ச கட்டணம் வசூலிப்பதற்கு திருச்சி பொது மக்களிடம் எதிர்ப்பு இல்லை என்பதைத்தான் செவி வழி செய்தியாய்க் கேட்க முடிகின்றது .
எவ்வளவோ காலம் ,ஆட்டோக்களுக்கு மீட்டர் போடாமல் ஓட்டப்பட்டு வந்திருக்கின்ற காலத்தில் கூட பொது மக்கள் ,ஆட்டோ ஓட்டுனர்கள் கேட்கின்ற தொகையினைக் கொடுத்து வந்திருக்கின் றார்கள். அதற்குக் காரணம் ,நியாயமான உணர்வில் தங்களுக்குக் கட்டுப்படியாகும் வகையில் ,உயர்ந்து வருகின்ற,பெட்ரோல் ,டீசல்,கேஸ் ஆகியவைகளின் விலையையும் ஏறிக்கொண்டே இருக்கும் அனைத்து பொருள்களின் விலைகளையும் பொருட் படுத்தி, தங்கள் குடும்பத்தினை நடத்துகின்ற அளவிற்கு வருமானம் வந்தால் போதும் என்றெல்லாம் எண்ணித்தான் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது இருக்கின்ற காலக் கட்டத்தில் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே சம்பாதித்து குடும்பம் நடத்துவது என்பது பற்றாக்குறையாக இருக்கின்றது என்பதால் ,சில குடும்பங்களில் கணவனும் மனைவி யும் கூட ஆட்டோ ஓட்டிப் பிழைப்பு நடத்துவதையும் காண முடிகின்றது.
இப்படி இருக்கின்ற சமயத்தில் ,திருச்சியில் ஆட்டோக்களுக்கு மீட்டர் போட வேண்டிய நிலை ஏற்பட்டபின் ,குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிப் பதிலும்,அதை அடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பதிலும் ஏற்படும் உடன் படிக்கை, நியாயத்தின் அடிப்படையில் அமைந்தால் வசதியாக இருக்கு மென பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் மத்தியில் விரும்பப்படும் ஒரு கருத்தாக உள்ளது.
எனினும் , தற்சமயம் அதிக சதவிகித ஆட்டோக்கள் மீட்டர் போட்டு ஓட்டும் நிலையை வரவேற்று சிலவற்றில் செயல்படவும் கூட ஆரம்பித்துவிட்டது. எனினும் , இதனால் ஆங்காங்கே நடை பெறுகின்ற போராட்டங்கள் தவிர்க்க முடியாததாகவும் ஆகிவிட்டது..
மீட்டர் போட்டு ஓட்டுவதற்கு தயாராகிவிட்டவர்கள் ,தங்கள் வாடிக்கைப் பயணிகளிடம் அவர்கள் செல்லும் தூரத்திற்கு .மீட்டர் போட்டு, கட்டணம் எவ்வளவு வரும்,என்றும் ,மீட்டர் போடாமல் இதுவரை பயணிகள் கொடுத்து வந்த கட்டணம் எவ்வளவு என ஒப்பிட்டுப் பார்க்கும்போது , இவ் விரண்டிற்கும் அதிக அளவு வித்தியாசமில்லை என்பதைத்தான் காண முடிகின்றது.
மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டவேண்டுமென உத்தரவு வருமென எண்ணி பல ஆட்டோக்கள் வாடகைக் கட்டண மீட்டர்களை ரொக்கத்திற்கும் , கடனிலும் , தவணையிலும் வாங்கிவிட்டனர். ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து வாங்கிய பொருள் தற்போது பயன் படுத்த வழியில்லாமல் வீணாக இருக்கின்றது. இதனால் பணம் செலவு செய்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வீண் செலவும் ,மன உளைச்சளும் உண்டாவிட்டது . வாங்கிய பொருள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அதற்குரிய கியாரண்டி காலம் என்ன என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.
அதே நேரத்தில்,குறைந்த பட்ச தூரத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ 25 குறைவு என்றும் ,ரூ 30 ஆக உயர்த்திக் கொடுத்தால் பயணிகளுக்கும் தங்களுக்கும் வசதியாக இருக்குமெனக் கூறுகின் றார்கள் .அதுமட்டுமல்ல ரூ 25 என நிர்ணயிக்கும் செய்யும் போது ,பயணிகளுக்கு மீதி 5 ரூபாய் சில்லறைக் கொடுப்பதில் சிரமம் ஏற்படும் என்றும் ,பயணிகள் தங்கள் கெளரவம் கருதியும் ,அவசரம் கருதியும் அந்த மீதிக் காசை வாங்காமல் போய்விடு கின்ற சூழ்நிலையும் உண்டாகின்றது.
இது பெரும்பாலான ஆட்டோ ஒட்டுனர்கள் மத்தியில் ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலையை உருவாக்குகின்றது. வாடகைக் கட்டணம் மட்டும் போதும் - டிப்ஸ் வேண்டாமென சொல்லுகின்ற அளவிற்கு ஆட்டோ ஓட்டுனர்கள் எண்ணம் இருக்கின்றதை பெருமையுடன் , மகிழ்ச்சியுடன் உணர முடிகின்றது.
இதனால்தான் குறைந்த பட்சக் கட்டணத்தை 5 ரூபாய்க்கு சுத்தமாய் நிர்ணயம் பண்ணச்சொல்லி ,அனைத்து தரப்பிலிருந்தும் கருத்துக்கள் ஆமோதிக்கப்பட்டு வருகின்றது.
டிப்சாக 5 ரூபாயை கொடுப்பதை தவிர்க்கவும், டிப்ஸ் வாங்க வேண்டாம் ,மீட்டர் கட்டணம் போதும் என்று நினைப்ப வர்கள்தான் இருதரப்பிலும் ,குறைந்த பட்ச கட்டணம் ரூ 30 க்கு ஒப்புக் கொள்கின்றார்கள்.
இது இப்படியிருக்க, தனியார் ஆட்டோ நிறுவனம் பலதரப்பு மக்களும் , ஆட்டோ ஓட்டுனர்களும் நியாயமாக விரும்புகின்ற தொகையை குறைந்த பட்ச கட்டணமாகவும் - தொடர்ந்து செல்லும் தூரத்திற்குமுறையான மீட்டர் கட்டணமும் வசூல் செய்து வாகனங்களை இயக்கும்போது - நியாயமாக மீட்டர் போட்டு ஓட்ட நினைக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பிழைப்பு ஒரு கேள்விக் குறியாகவும் , வாழ்வாதாரம் பாதிக்கும் நிலைமையும் உண்டாகியுள்ளது.
எனவே , திருச்சி மாவட்டஆட்சியர் நிர்வாகம் ,பொதுமக்களின் கருத்துக்களையும் ,ஆட்டோ ஒட்டுனர்களின் நியாயமான உணர்வுகளையும், கோரிக்கையினையும் கருத்தில்கொண்டு ஆட்டோக்களுக்கு , குறைந்த பட்ச கட்டணமாக ரூ.30 நிர்ணயம் செய்யலாமென பல தரப்பட்டவர்களிட மிருந்து செவி வழி ஒப்புதல் தகவல்கள் கேட்க முடிகின்றது
எனவே,திருச்சி மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் , இதுகுறித்து ஒரு முறையான அறிவிப்பு கொடுக்க வேண்டுமென விரும்பப்படுகின்றது.
நன்றி ,
******************************************************************
இக்கடிதம் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது .
ஒவ்வொருவர் செயலும் மற்றவருக்கு நன்மை செய்வதாகவே அமையட்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...