Thursday, April 26, 2018

மீண்டும் அந்த இருண்ட காலத்திற்கு திரும்பப் போகிறோமா..?

ஸ்டாலின் இனி எப்போதும் முதல்வராக முடியாது என்ற விஜயகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். உடனே ஸ்டாலின் நடிகர் சந்திரசேகரையும் திண்டுக்கல் லியோனியையும் ஏவிவிட்டு விஜயகாந்த்தை வசைபாட வைத்திருக்கிறார்.
ஸ்டாலின் எப்போதும் முதல்வராக முடியாது என்ற கருத்து விஜயகாந்த்துடைய கருத்து மட்டுமல்ல...பல கோடி மக்களின் எண்ணமும் கருத்தும் கூட அதுதான்.
திமுக போன்ற மக்கள் விரோத தீய சக்திகளுக்கு மக்கள் எப்படி மீண்டும் வாக்களிக்க முடியும்..?இந்தியாவின் நெம்பர்.1 ஊழல் கட்சி திமுக தான் என்பதை பள்ளி செல்லும் சிறுவர்கள் கூட அறிந்து வைத்திருக்கின்றனர். தங்கள் குடும்பத்திற்காக, குடும்ப நலனுக்காகவே செயல்படும் இயக்கம் திமுக. இந்த நிலை முன்பு போலவே இப்போதும் கூட தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது கூடுதலாக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினும் சேர்ந்து கொண்டிருக்கிறார்.
2006-11 கருணாநிதி, ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக ஆட்சிக்காலத்தை நடுநிலைமையுடன் இப்போது நினைத்துப் பார்த்தால் போதும் திமுக விற்கு மீண்டும் வாக்களிக்கும் எண்ணம் யாருக்குமே வராது.
குடும்ப அராஜகம், வன்முறை, ரௌடித்தனம், மணற்கொள்ளை, அப்பாவி மக்களின் நிலங்கள் பறிப்பு,குடும்பத்தினர்கள் பதவிகளில் இருக்க வேண்டுமென்பதற்காக காவிரி உட்பட தமிழக நலன்கள் அடகுவைப்பு, உலகமே கண்டு அஞ்சி வியந்த பல்லாயிரக்கணக்காக கோடிகளாலான மிகப்பெரும் ஊழல்கள், இலங்கைத் தமிழர் இன அழிப்பிற்கு உடந்தையாக இருந்து ஆதரவு தெரிவித்தது ..சினிமா உட்பட அனைத்து துறைகளிலும் கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கம் சுரண்டல்கள் இப்படி வரிசையாக கூறிக் கொண்டே போகலாம்.
தமிழகத்தை கருணாநிதி குடும்பத்தினர் பங்கு போட்டு, பாகம் பிரித்து கொள்ளையடித்ததை, மக்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரா உரிமைகளை அழித்ததை மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா..?
மேலும் ஒரு விஷயமும் இருக்கிறது, மதச்சார்பற்ற அரசை, அனைத்து மதத்தினருக்கும் சமமான அரசை அளிக்க வேண்டிய திமுக முற்றிலும் ஹிந்து விரோத அரசாகவே செயல்பட்டது.
2005-11ல் கருணாநிதியின் ஆட்சி மட்டுமல்ல.. ஸ்டாலினும் கருணாநிதிக்கு இணையான அதிகாரத்துடன் ஆட்சியில் இருந்தார் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.
24 மணி நேரத்தில் 15 மணி நேரம் தமிழகமே இருண்டு கிடந்த அந்த அவலத்தை நாம் மறக்க முடியுமா..?
வீடுகளில் மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கையில் பல வகைகளில் இருளைப் பாய்ச்சிய அந்த இருண்ட காலம்..அந்த இருண்ட காலத்திற்குரிய ஆட்சியை மீண்டும் வரவிடலாமா..?
மக்கள் மறக்கமாட்டார்கள் எதையும்.
விஜயகாந்த் கூறியது போல ஸ்டாலின்மீண்டும் முதல்வராகவே முடியாது; முதல்வராகவும் கூடாது. இராதாகிருஷ்ண நகர் இடைத்தேர்தல் முடிவிலேயே மக்கள் இந்தச் செய்தியை கோடிட்டு காட்டிவிட்டார்கள்.
கால்களில் கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் குதிக்கும் அவலச் செயலை தமிழக மக்கள் செய்வார்களா..? செய்யமாட்டார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...