Monday, April 16, 2018

திக்திக் தகவல் – Bacteria முட்டையை நீங்கள் சாப்பிட்டால்.

திக்திக் தகவல் – Bacteria முட்டையை நீங்கள் சாப்பிட்டால் 

திக்திக் தகவல் – Bacteria முட்டையை நீங்கள் சாப்பிட்டால் 
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை (சிலரை தவிர) அனைவருக்கும் பிடித்த‍மான
அசைவ உணவு எது என்றால் அது முட்டை என்றால் அது மிகையில் லை. சாதாரணமாக ஒரு முட்டையில் சராசரியாக 7 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு, 75 கலோரிகள், 185 மில்லிகிராம் கொலஸ்ட்ரால், 70 மில்லிகிராம் சோடியம், 67மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளன. இவை தவிர, விட்டமின் ஏ, டி, பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அடங்கியுள்ளன. உட லில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் லுடீன் (Lutein), சியாக்சன்தீன் (Zeaxanthin) ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உடலுக்குத்தேவையான ஏழு அமினோ அமிலங்களும் முட்டையில் மட்டுமே நிறைவாக இருக்கின்றன.
முட்டை பற்றிய சில உண்மைகள்
எனவே, முட்டையை அவித்தோ, மிளகு சேர்த்த ஆம்லேட்டாகவோ, வயதைக் கருத்தில் கொண்டு பச்சையாகவோ தேவைக்கேற்ப சாப்பிடு வோம். முட்டையை வேக வைப்பதால், அதிலுள்ள உடலுக்குத் தேவை யான செலினியம், ரிபோஃபிளேவின் உள்ளிட்ட சத்துக்கள் குறைந்துவி டும், எனவே, அரைவேக்காடான முட்டைகள் சாப்பிடலாம் என நினை ப்பது தவறு.
அரைவேக்காடான, முட்டை முழுமையாக வேகாததால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருக்காது. இது குழந்தைகள், கர்ப்பிணி கள், முதியோருக்கு உகந்ததல்ல. வேக வைக்கும் போது, சத்துக்களின் அளவு குறைந்தாலும், நோய்ப் பாதுகாப்பு மிகவும் முக்கியம்.
பச்சை முட்டையில் கிடைக்கும் சத்துக்களை முழுமையாகப் பெற சிற ந்த வழி, வேக வைத்த முட்டையின் வெள்ளைக் கருவை அதிகமாகச் சாப்பிடுதல். மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால், இதய நோயாளிகள், உடல் பருமனானவர்கள் தவிர்ப்பது நல்லது.
இருபதாயிரம் முட்டைகளில் ஒரு முட்டையில் Salmonella Bacteria  ( #SalmonellaBacteriaஇருக்க வாய்ப்புள்ளது. இந்த Bacteria உள்ள முட்டையைச் சாப்பி ட்டால் வாந்தி, உடலில் நீர் வறட்சி, கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படு ம். ஏழு நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும்.
Salmonella Bacteria தாக்குதல் தீவிரமடைந்து அமெரிக்காவில், வருடத் துக்கு சராச ரியாக 360 பேர் மரணமடைகின்றனர்.
பச்சைமுட்டை சாப்பிடுவதால் பரவும் இக்காய்ச்சலால், எதிர்ப்புசக்தி குறைந்த முதியோர்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே , பச்சை முட்டையை, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...