Monday, April 16, 2018

தூக்கிலிட வேண்டும்.

பொதுவாக ஆசிரியர் என்றாலே நமக்கு ஒரு மரியாதை தோன்றும். அதிலும் ஆசிரியை என்றால் இன்னும் மதிப்புதான். இரு கரம் கூப்பி வணங்க தோன்றும். இந்த தொழிலுக்கு மிகவும் பொருத்தமானவர்கள் பெண்கள் தான் என்று நினைப்பதன் காரணம் அவர்களே ஆண்களைவிட ஒழுக்கத்தையும் பண்பையும் கற்றுத்தர முடியும் என்ற எண்ணத்தால் தான். அருப்புக்கோட்டை கல்லூரி ஆசிரியை நிர்மலாதேவி யின் செயல் பெண்ணினத்திற்கும், ஆசிரியை தொழிலுக்கும் தீராத கறையை ஏற்படுத்திவிட்டது. நல்லொழுக்கத்தை போதிக்க வேண்டிய ஓர் ஆசிரியை தங்கள் மாணவிகளின் கற்பை விலைபேசியிருப்பது மன்னிக்க முடியாத கொடுஞ்செயல். இனி பெற்றோர்கள் எப்படி ஆசிரியைகளை நம்புவார்கள்? வெறும் 15 நாட்கள் பணிநீக்கம் ஒரு தண்டனையே அல்ல. மிக கடுமையான தண்டனையே இது போன்ற செய்லகளை எதிர்காலத்தில் நடக்கவிடாமல் தடுக்கும். மேலும் மகாநதி படத்தில் வரும் ஓர் வசனத்தை போல இந்த ஆசிரியை ஓர் சப்ளை மட்டுமே. அந்த டிமாண்ட் யார் யார்? என்பதை இவள் தைரியமாக சொல்லவேண்டும். இதுவே அவள் செய்த பாவத்திற்கு பரிகாரமாக அமையும். யாராக இருப்பினும் தயை தாட்சண்யம் இன்றி த்மக்கள் முன் நிறுத்தி தூக்கிலிட வேண்டும்.
மாதர் தம்மை இழிவு செய்யும் மடையர்களை தீயிலிட்டு கொளுத்துவோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...