Thursday, April 19, 2018

அகில் கட்டை.

மனித இனம் தழைத்தோங்கவும், நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும், சித்தர்கள் தங்களின் ஞான சிருஷ்டியால் ஆராய்ந்து கண்டறிந்து சொன்ன சித்த மருத்துவம் மிகச்சிறந்த மருத்துவமாகும். எத்தகைய பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத மருத்துவமாகும்.
இயற்கையிலேயே மருத்துவ குணம் கொண்ட புல், பூண்டு, செடி, கொடி, மரம் போன்றவற்றைப் பற்றி சித்தர்கள் கூறியுள்ளனர். அவற்றைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் அகில் மரம் பற்றித் தெரிந்துகொள்வோம்.
அகில் பெருமர வகுப்பைச் சார்ந்தது. இமய மலையின் வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரக் காடுகளில் தானாக வளருகிறது. இதுபோல் நேபாளம், மியான்மர், தாய்லாந்து, மலேசியா நாடுகளின் காடுகளில் காணப்படுகிறது.
இதற்கு அசுரு, அகருக்கட்டை, அகிற்கட்டை என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Tamil – Agil
English – Aloewood
Sanskrit – Agaru
Telugu – Krishnagaru
Malayalam – Kayagahru
Hindi – Agar
Botanical name – Aquilaria agallocha
அகில் மரத்தின் கட்டையே மருந்தாகப் பயன்படுகிறது.
தளர்ந்த விருத்தருக்காந் தக்க மணத்தால்
உளைந்த சுரமனைத்து மோடும்- வளர்ந்திகழு
மானே யகிற்புகைக்கு வாந்தியரோ சுகம்போத்
தானே தளர்ச்சியறுஞ் சாற்று
-அகத்தியர் குணவாகடம்
பொருள் – அகில் கட்டை வயோதிகர்களுடைய தளர்ந்த தேகத்தையும் இறுகச் செய்யும். இதன் வாசனையால் சிற்சில சுரம் நீங்கும். புகையால் வாந்தியும், பசியின்மையும், அழற்சியும் நீங்கும். அகில் கட்டை இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது.
அகில் கட்டை தைலம்
அகில் கட்டையை சிறிது சிறிதாக நறுக்கி நீரில் போட்டு வற்றக் காய்ச்சி அதனுடன் நல்லெண்ணெய், பசுவின் பால் வகைக்கு 750 மி.லி. எடுத்து ஒன்றாக்கி வைத்துக்கொண்டு அதிமதுரம், தான்றிக்காய் தோடு வகைக்கு 35 கிராம் எடுத்து பசுவின் பால் விட்டு அரைத்து சேர்த்து லேசாக கொதிக்க வைத்து வடித்து எடுத்துக் கொள்ளலாம்.
இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். மூக்கடைப்பு, தலையில் நீரேற்றம், ஒற்றைத் தலைவலி போன்றவை நீங்கும்.
· அடிக்கடி சளி பிடிப்பதைத் தடுக்கும்.
· தலைமுடி நன்கு வளரும். பொடுகு, முடி உதிர்தல், புழுவெட்டு நீங்கும்.
· அகில் எண்ணெயை சருமம் முழுவதும் பூசிக் கொண்டால் சரும நோய்கள் உண்டாகாது.
· அடிபட்ட வீக்கம், இரத்தக்கட்டு போன்றவற்றிற்கு அகில் எண்ணெயை பூசினால் வீக்கம் குறையும். வலி நீங்கும்.
· சரும எரிச்சல், புண், அரிப்பு, சொறி, சிரங்கு போன்றவைற்றைப் போக்கும்.
· இதன் நறுமணத்தை நுகர்ந்தால் வாந்தி, மயக்கம் நீங்கும்.
· கை, கால் மூட்டுகளில் வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.
· அகில் கட்டையை நீர்விட்டு மை போல் நன்கு அரைத்து உடல் எங்கும் பூசி வந்தால் தளர்ந்த தசைகள் இறுகி வலுப்பெறும். உடல் பொலிவுபெறும்.
· அகில் கட்டையை நெருப்பில் காட்டி வரும் புகையை நுகர்ந்தால் சுரக்காய்ச்சல் நீங்கும். வாந்தி சுவையின்மையைப் போக்கும்.
· இதன் நறுமணம் மனதிற்கு நல்ல அமைதியையும் சாந்தத்தையும் கொடுக்கும்
நன்றி. 
தொகுப்பு
தமிழ் நாட்டு மருத்துவம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...