Thursday, April 12, 2018

இவர்கள் அறவழியில் கறுப்புக்கொடி காட்டினார்களாம்.

இன்னிக்கு பாலிமர் செய்திகளில் பார்த்தேன்: மு க ஸ்டாலின் போட்டார் பாருங்க , ஒரு போடு அசந்தே போயிட்டேன்! "கருப்புக்கொடியை சந்திக்க அஞ்சி மோடி சாலை மார்க்கமாக வராமல் ஹெலிகாப்டர் மூலம் பயணிக்கிறார்..."- இது ஏற்கனவே வைகோ சொன்ன கருத்தின் ரிபீட்தான், சரி அது
ஒருபக்கம் இருக்கட்டும்!
கறுப்புக் கொடி காட்டுவது என்பது ஒரு அறப்போராட்டம் என்பதை விளக்க, கடந்த காலத்தில் கறுப்புக் கொடி காட்டப்பட்ட நிகழ்வுகளை எல்லாம் கூறியவர் "நாம் இந்திரா காந்தி அம்மையாருக்கும் கறுப்புக் கொடி காட்டினோம்: அதை அவர் நாகரிகத்துடன் ஏற்றுக் கொண்டார்!"- ஒரு நிமிடம் அசந்தே போய்விட்டேன்!
அதாவது இவர்கள் இந்திரா காந்திக்கு எதிராக 'அறப்போராட்ட' வடிவில் கறுப்புக் கொடி காட்டினார்களாம்! இந்திரா காந்தியும் அதை நாகரிகமாக ஏற்றுக் கொண்டாராம்! அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் யாவரும் இப்போது இறந்திருப்பார்கள், அல்லது மறந்திருப்பார்கள் என்று நினைத்து விட்டார் போலும்!
மதுரையில் இந்திராகாந்தி வந்தபோது கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தை மறக்க முடியுமா? பழ.நெடுமாறன் அப்போது காங்கிரஸில் இருந்தார் - அவர்தான் இந்திராவின் மதுரை விஜயத்தை ஒருங்கிணைத்த பொறுப்பாளர். அவரும் , NSV சித்தனும்தான் (பின்னாளில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்) இந்திராவுடன் திறந்த காரில் ஊர்வலமாக உடன் சென்றவர்கள் இவர்கள் இருவரும்தான். கூட இன்னொருவர் காதர் மொய்தீன் என நினைக்கிறேன்.
அன்று மதுரையில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை வெறியாட்டம் - கறுப்புக்கொடிப் போராட்டம் என்ற பெயரில் ஊடுருவிய கல்வீச்சு, கம்பு வீச்சு - ஆகியவற்றால் மதுரை போர்க்களமானது!
NSV சித்தனும், பழ.நெடுமாறனும் ஆளுக்கு ஒரு தலையணையைப் போட்டு இந்திராவை மூடி, அவர்கள் மேலே கவிழந்தபடி காப்பாற்றியதால் இந்திரா அன்று தப்பித்தார். அதற்குப் பின் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு ஒன்றில் நெடுமாறனை "The brave son, who saved my life"- என்று இந்திரா அறிமுகப்படுத்தினார். இதை நெடுமாறன் தன் கட்டுரைகள் சிலவற்றில் - தினமணி- நினைவு கூர்ந்துள்ளார்!
அன்று சித்தனும், நெடுமாறனும் இல்லாவிட்டால் இந்திரா கதை மதுரையிலேயே முடிந்திருக்கும். அவர்களது பாதுகாப்பையும் மீறி ஓரிரு கற்கள் இந்திராவைத் தாக்கியதில் காயம் ஏற்பட்டு அவரது சேலையில் ரத்தக் கறைகள் சில தென்பட்டன. அந்த சேலை ரத்தக்கறையையும் கொச்சைப்படுத்தி, திமுகவின் கடைமட்டப் பேச்சாளர்கள் - தீப்பொறி ஆறுமுகம் வகையறாக்கள்- பேசியதை நானே கேட்டிருக்கிறேன்!
இவர்கள் அறவழியில் கறுப்புக்கொடி காட்டினார்களாம் - இந்திரா நாகரிகமாக ஏற்றாராம்!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...