Saturday, April 21, 2018

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவியை பறிக்க முடியுமா.???

தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், உள்ளிட்ட 7 கட்சிகளின் 71 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட மனுவை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் குலாம்நபி ஆசாத் அளித்தார்.( இதில் மன்மோகன் சிங்கும்... திமுக நாடாளுமன்ற உறுப்பினர் களும் கையெழுத்துப் போடவில்லை.)
இந்தியாவில் முதன் முறையாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தகுதி நீக்க தீர்மானம் கொண்டு வருவது இதுதான் முதல்முறை.
கடந்தாண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற தீபக் மிஸ்ரா மீது ஏற்கனவே பல புகார்கள் இருக்கின்றன. முக்கியமாக அருணாச்சலபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் தற்கொலை விவகாரத்தில் மிஸ்ராவின் பெயர் அடிப்பட்டது. இதற்கிடையில் நீதித்துறையில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக, தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா மீது சக நீதிபதிகளே குற்றம் சாட்டினர். இதனால் மிஸ்ராவை பணியிடை நீக்கம் செய்ய காங்கிரஸ் முயற்சி செய்து, அதற்காக கையெழுத்து இயக்கத்தினையும் தொடங்கியது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் எம்.பிக்கள் சுமார் 71 எம்.பி.கள் தீபக் மிஸ்ராவிற்கு எதிரான மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். அதனை துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவிடம் இன்று அளித்தனர்.
இதில் தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை. வரும் அக்டோபர் 2-ம் தேதி மிஸ்ராவின் பதவிக்காலம் முடிவடைய இருக்கும் நிலையில் அவருக்கு எதிரான இந்தத் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி தற்போது பரவலாக கேட்கப் படுகிறது.
மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே தலைமை நீதிபதியின் பதவி பறிக்கப்படும். தற்போது, மக்களவையில் பா.ஜ.க முழு பெரும்பான்மையுடன் உள்ளதால், தலைமை நீதிபதியின் பதவி பறிக்க முடியாது என்பதே உண்மை. இருப்பினும், தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி பறிப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருப்பதே அவர் வகிக்கும் பதவிக்கு இழுக்காக பார்க்கப்படுகிறது. என்ன செய்யப்போகிறார் தலைமை நீதிபதி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...