Tuesday, April 24, 2018

இதை கொஞ்சம் படியுங்களேன்..

ஒரு காலம் இருந்தது,
அன்று கன்னடத்தில் பெரும் அணைகள் இல்லை.
ஆடிமாத காவேரி அப்படியே பொங்கி தஞ்சைக்கு வரும், அது பயிர்களை அழித்துவிடும்.
உடனே எப்படி எங்கள் பயிரை நீங்கள் நீர் அனுப்பி அழிக்கலாம் என கிளம்புவார்களாம் தமிழக காவிரி டெல்டா மக்கள்.
மைசூர் சமஸ்தானம் நஷ்ட ஈடுகொடுக்கவேண்டுமாம்.
மழை பெய்கிறது.. வெள்ளம் வருகிறது நாங்கள் என்ன செய்ய.. என கதறி நின்று, தண்ட காசு தஞ்சைக்கு வழங்கி இருக்கின்றது மைசூர் சமஸ்தானம்.
பின்னாளில் மைசூர் திவானாக விஸ்வேஸ்வரய்யா வருமளவும் அது தொடர்ந்திருக்கின்றது,
பெரும் கட்டட பொறியாளரான அய்யர்தான் அணைகட்டினால் இந்த நஷ்ட ஈட்டை தடுக்கலாம் என ஐடியா கொடுத்தவர்..
அதன் பின்னே கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டபட்டது, மேட்டூர் அணையும் கட்டபட்டது.
அந்த விஸ்வேஸ்வரய்யா தான் கன்னடத்து லி குவான் யூ.
அம்மாநிலத்தின் இன்றைய எழுச்சிக்கு அவர்தான் அடிக்கல், சிற்பி எல்லாம்.
அதன் பின் அவர்கள் விவசாய நிலங்களை பெருக்கிகொண்டார்கள், துணை ஆறுகளில் எல்லாம் அணைகட்டிகொன்டார்கள். விவசாயத்தை பெருக்கிக்கொண்டே வந்தார்கள்.
நாமோ சினிமா பின்னால் சென்று, மாநிலத்தை சீரழித்து விவசாயத்தை கைவிட்டு விட்டே வந்தோம்..
அது வறண்ட பகுதிகளில் கதறி கைவிடபட்டபோது தெரியவில்லை,
அதாவது உடை களையும் வரை தெரியவில்லை, உள்ளாடையுடன் நிற்கும்போது அது பட்டவர்த்தனமாக தெரிகின்றது,
அதுவும் களையப்படும் நேரம் இது,
எந்த முப்பாட்டன் தஞ்சாவூரில் காவேரி வெள்ளத்தால் நஷ்டம் என கொடிபிடித்ததோ,
அதே வாரிசுகள் இன்று நீரை கொடு என கொடிபிடித்து போராடுகின்றன, கால விசித்திரம்.
ஒரு அறிவாளியினை கொண்ட சமூகம் எப்படி செழிக்கும் என்பதற்கு விஸ்வேஸ்ரய்யரின் கன்னடமும்,
சினிமா பின்னால் சென்ற சமூகம் எப்படி சீரழியும் என்பதற்கு தமிழகமும் சாட்சி.
கல்லணை கட்டி தமிழன் சாதிக்க ஒரு காலம் இருந்தது,
பின் அய்யர் அணைகட்டி சாதிக்கவும் ஒரு காலம் வந்தது,
மறுபடியும் ஒரு தமிழன் அந்த வரலாற்றினை திருப்ப வராமலா போய்விடுவான்.
நிச்சயம் வருவான்...
திரும்பிகொண்டே இருப்பதுதான் வரலாறு,
நீர்நிலைகளை மேம்படுத்த வேண்டும்.
ஆக்கிரமிப்பு அகற்றப் படவேண்டும்.
புதிய அணைகள் கட்டப்பட வேண்டும்.
கழிவுகளை நீர் பிடிப்பு பகுதியில் தவிர்க்க வேண்டும்.
இதெல்லாம் செய்யாமல் கங்கை​ நதி இல்லை எத்தனை நதிகளை காவேரியில் இணைத்தாலும் பயனில்லை.
நீர் மேலாண்மைக்​கு எடுத்துக்காட்டாக​
சென்னை - கூவம் நதி
சேலம்- திருமணிமுத்தாறு
கோவை - நொய்யல்
மதுரை- வைகை
இன்னும் காணாமல் போன ஆறுகள் குளங்கள் ஏரிகள் எத்தனை எத்தனை?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...