Sunday, April 22, 2018

வைரமுத்து அவர்கட்கு,

உங்களுடைய சமீபத்திய பேச்சைக் கேட்க நேர்ந்தது. "கல்வி பொதுமுறைப்படுத்தப்பட்டது இந்தியாவிற்கு கிறிஸ்தவர்கள் வந்த பிறகே" என்றும் அதற்காக கிறிஸ்தவ சமுதாயத்திற்கு நின்ற இடத்தில் இருந்தே நன்றியும் கூறினீர்கள். நன்று நன்று!
.
அதில் சில விஷயங்கள் மீண்டும் தெளிவாயிற்று, சில விஷயங்களை தெளிவுபடுத்த சில கேள்விகளை கேட்கவேண்டும் என்ற ஆசையும் எழுந்தது. அதன் பொருட்டு எழுந்ததே இந்த மடல்.
.
கவிதைக்கு வேண்டுமென்றால் பொய் அழகாக இருக்கலாம், கவிஞனுக்கு அல்ல. தவிர உங்கள் கூற்று பொய்யா, அறியாமையா இல்லை பொருள் ஈட்டல் முயற்சியா என்பதே என் சந்தேகம்.
.
"கல் தோன்றி மண் தோன்றா முன் தோன்றி மூத்தகுடி" என்று நம்மை நாமே புகழ்ந்து
கொள்வது உண்டு. இந்த சிறப்பு வெறும் மூப்புக்கு மட்டுமா?
வேறு சிறப்பே இல்லையா இந்த தமிழ்ச் சமுதாயத்துக்கு?
எல்லாமே "அவர்கள்" கொடுத்ததுதானா?
ஏன் இந்தப் பிதற்றல்?
.
சோழர் காலத்தில் கல்வி முறை எப்படி இருந்தது என்று தெரியுமா?
.
எண்ணாயிரம், திருபுவனி, திருமுக்கூடல் என்ற இடங்களில் இளநிலை, முதுநிலை என்று பட்டப்படிப்பு நடத்திக்காண்பித்தவர்கள் சோழப்பேரரசர்கள். மாணவர்கள் , ஆசிரியர்களுடன் சேர்ந்து, ஊதியம் பெற்றனர் என்ற சிறப்பை இந்த மண்ணில் நடத்திக்காட்டியவர்கள் நம் சோழ மன்னர்கள். அவர்கள் காலம் என்னவென்று உங்களுக்கு தெரியும் என்றே நம்புகிறேன். ஆம், அவர்கள் சொல்லிக்கொடுத்தது இலக்கியம், வான சாஸ்திரம் தான். அப்போது அவைதான் தேவைப்பட்டது. தொழிற்கல்வியின் தேவையே உலகுக்கு 1600க்கு பின் தான் தேவைப்பட்டது என்பது என் கருத்து.
.
திருவாடுதுறையில் விக்கிரம சோழன் மருத்துவக் கல்லூரி நடத்தினான். அதில் பயிலும் மாணவர்களுக்கு தங்கும் விடுதி மற்றும் உண்ண உணவு இலவசம். மாணவர்கள் தேர்வோ தகுதியின் அடிப்படையில் மாத்திரமே. இவை கல்வெட்டுக்கள் சொல்லும் உண்மை, கட்டுக்கதை அல்ல.
.
இதுதான் எங்கள் சோழ மன்னர்கள் 1200ம் வருடதிற்கு முன்னர் செய்தது. அதன்பின் முகலாய படையெடுப்பு. சிதைந்தது தேசம்.
.
சரி. மூன்று கேள்விகள், உங்களுக்கு.
.
தேவையில்லாமல் ஹிந்து சமயத்தையும், "தேவைக்'கேற்ப கிருஸ்தவ/இஸ்லாம் சமயங்களை உயர்த்தியும் பேசுவது உங்கள் திராவிடத்தின் அடிப்படை குணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
நல்லவற்றையெல்லாம் கிறிஸ்தவர்கள் செய்தார்கள் என்றும் அவர்கள் நடத்திய கொடுஞ்செயல்களையெல்லாம் சுட்டிக்காட்டினால் "அது பிரிட்டிஷ் அரசு" என்றும் மழுப்புவதை நாள்தோறும் நாங்கள் காண்கின்ற ஒன்று.
.
இருந்தாலும் இந்த கேள்விகளை கேட்டுத்தான் ஆகவேண்டும்.
.
1. ஜாலியன் வாலா பாக் படுகொலை பாதகத்தை செய்தது பிரிட்டிஷ் அரசா, இல்லை கிறிஸ்த்தவர்களா?
.
2. உங்கள் சமூகத்தை "குற்ற பரம்பரை" என்று முத்திரை குத்தி "அடக்குமுறை' செய்தது பிரிட்டிஷ் அரசா, இல்லை கிறிஸ்தவர்களா?
.
3. உங்களுக்கு இன்று சோறும், புகழும் போடும் தமிழை போற்றி வளர்த்தது சைவ, வைணவ சமயங்கள். அதற்காக என்றாவது உட்கார்ந்த இடத்தில் இருந்தாவது "நன்றி" தெரிவித்ததுண்டா?
.
உங்களுக்கு கவிதை எழுத வரும் என்பதற்க்காக எல்லாம் வரும் என்று நினைப்பது தவறு. தமிழ் வேறு வரலாறு வேறு. இவை இரண்டும் எங்களுக்கும் தெரியும். உங்கள் விஷப்பேச்சை "அறிவாலய" கூட்டம் வேண்டுமென்றால் ஆர்ப்பரித்து ஆமோதிக்கலாம். சுத்த தமிழன் அதெயெல்லாம் செய்யமாட்டான். அவனுக்கு விஷயம் தெரியும்.
.
உங்கள் எஜமான விசுவாசத்திற்க்காக என் தமிழினம் மீது சேற்றை வாறி இறைக்க வேண்டாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...