Thursday, April 12, 2018

பன்னாடை...



ஒரு கல்லூரி வாசலில் ஒரு மூதாட்டி இளநீர் வியாபாரம் செய்து கொண்டிருந்தாராம். அதைப் பார்த்துவிட்டு உள்ளே போன பேராசிரியர், வகுப்பறையில் மாணவர்களைப் பார்த்து கேட்டாராம்.
“பசங்களா.... வெளியே இந்த தள்ளாத வயதிலும் இளநீர் விற்கும் அந்த மூதாட்டியைப் பற்றி நீங்களெல்லாம் என்ன நினைக்கிறீர்கள்?”
ஒரு மாணவன், “இந்த வயதான காலத்திலும் உழைத்து வாழவேண்டும் என்ற கொள்கை அருமை சார்”
“வறுமை வாட்டிய போதும், மாணவர்களுக்கு தீமை தரும் பொருட்களை விற்காமல் நலம் தரும் இளநீர் விற்கும் அந்த தாயின் நல்லுள்ளம் பிரமிக்க வைக்கிறது சார்” இன்னொரு மாணவன்.
இப்படி ஒவ்வொருத்தரும் அந்த மூதாட்டியின் ஏழ்மையை சுற்றியே பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது, ஒரு மாணவன் மட்டும் எழுந்து சொன்னாராம்,
“ இந்த தள்ளாத வயதிலும், பெப்ஸி & கோக் போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு எதிராக இளநீர் விற்றுச் சவால் விட்டுக் கொண்டிருக்கும் அவரைப் பார்த்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது சார்”.
பன்னாட்டுப் பன்னாடைகளைத் தவிர்த்து இந்நாட்டு இளநீர் குடிப்போம்.
பி.கு : பன்னாடை என்றால், தென்னை மரத்திலேயே அதிகம் பயன்படாத ஒரு வலை நார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...