Thursday, April 19, 2018

*வெப்பத்தைத் தணித்துக் கொள்ள சில டிப்ஸ்…*

*கோடை காலம் தொடங்கிவிட்டது. பள்ளிக் குழந்தைகள் விடுமுறையைக் கொண்டாட தயாராகி விட்டார்கள். நகரங்களை விட்டு மக்கள் கடற்கரை பிரதேசங்கள், மலைப் பகுதிகள் உள்ளிட்ட குளிரான இடங்களுக்கும் சென்று கோடை வெப்பத்தைத் தணித்துக் கொள்ள திட்டம் போட ஆரம்பித்துவிட்டார்கள்.*
*அதே சமயம் இந்தக் கோடை கால வெப்பத்தில் மஞ்சள் காமாலை, சின்னம்மை உள்ளிட்ட தொற்று நோய்களும் பரவும் அபாயம் உள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாது.*
*வெப்பத்தைத் தணித்துக் கொள்ள சில டிப்ஸ்…*
*அறை தட்பவெப்ப அளவை விடக் கொஞ்சம் மாறுபாட்டோடு இருக்கிற தண்ணீர்… குறிப்பாகப் பானைத் தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான நீரை அருந்தவும். இரண்டுமே தாகத்தைத் தணிக்கும். குளிர்பதனப் பெட்டியில் உள்ள ‘ஜில்’ தண்ணீர் ஒரு சில வினாடிகளுக்கு மட்டுமே திருப்தி தரும். அது உண்மையிலேயே தாகத்தை தணிக்காது.*
*தர்பூஸ், அன்னாசி, கொய்யா, சாத்துக்குடி, ஆரஞ்ச், திராட்சை ஆகிய பழங்களை சாப்பிடுவது புத்துணர்ச்சியைத் தரும்.*
*வெள்ளரிக்காய், கேரட், தக்காளி, முட்டைகோஸ் போன்றவை அடங்கிய சாலட் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு ஏற்றது.*
*உப்புக் கலந்த எலுமிச்சை ஜூஸ், நீர்மோர், இளநீர் வெப்பத்தைத் தணிக்கும் குளிர்பானங்கள்.*
*சர்க்கரையும் முட்டையும் கலந்த பால், ஜெல்லி, மில்க் ஷேக்ஸ் போன்ற இனிப்புகள் தேவையான ஊட்டச் சத்துகளை வழங்கும்.*
*மோர் கலந்த பழைய சாதத்தை ஊறுகாய் மற்றும் வெங்காயத்துடன் சாப்பிடலாம். உடலுக்குக் குளிர்ச்சியையும் இயற்கைச் சத்தையும் கொடுக்கும்.*
*ஆரஞ்ச், தர்பூஸ், பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை ஆகிய பழங்களின் அறுசுவை பானம் உடல் நலத்துக்கு நல்லது.*
*கோடை காலத்தில் சூட்டைக் கிளப்பும், சாப்பிடக் கூடாது என சொல்லப்படு உணவுகள் குறித்த கட்டுக் கதைகளும் உண்மைகளும்…*👇👇👇
*கட்டுக்கதை: பப்பாளி சூட்டைக் கிளப்பும் பழம் என்பதால் அதை இளம் பெண்களும் கருவுற்றிருக்கும் தாய்மார்களும் உண்ணக் கூடாது.*🤦‍♂
*உண்மை:..பப்பாளியில் வைட்டமின் ஏ சத்து உள்ளிட்ட ஏராளமான ஊட்டச் சத்துகள் இருக்கின்றன. பப்பாளி எந்த விதத்திலும் கருவை பாதிக்காது.*🤷‍♂
*கட்டுக்கதை: மாம்பழம் உடல் சூட்டைக் கிளப்பும் என்பதால் சாப்பிடக் கூடாது.*🤦‍♂
*உண்மை: உண்பதற்கு முன் மாம்பழத்தைத் தண்ணீரில் சிறிது நேரம் போட்ட பிறகு சாப்பிடலாம். ஏதேனும் பிரச்னை இருந்தால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கலாம், சரியாகிவிடும்*🤷‍♂
*கட்டுக்கதை:* *குளிர்ந்த தண்ணீர் அல்லது ஐஸ்க்ரீம் சளியை ஏற்படுத்தும்.*🤦‍♂
*உண்மை: சளிக்குக் காரணம் வைரஸ் கிருமிகள். குளிர்ந்த நீரை அருந்துவதாலோ, குளிர்ந்த உணவுகளை உண்பதாலோ சளி ஏற்படாது. குளிர்ந்த உணவு அல்லது நீர் ஒவ்வாமை இருந்தால் மட்டுமே பிரச்னைகள் ஏற்படும்.*🤷‍♂
*கட்டுக்கதை:*
*கோடை காலத்தில் குறைந்தபட்சம் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.*🤦‍♂
*உண்மை: தண்ணீர் அருந்துவது அவரவர் இருக்கும் சூழலைப் பொறுத்தது. வெயிலிலும் சூரிய வெப்பத்திலும் அலைபவர்கள் உடலின் தேவையைக் கருத்தில் கொண்டு தேவையான 1 அல்லது 2 லிட்டர் தண்ணீரைக் குடிக்கலாம். வெப்பம் குறைந்த அல்லது குளிர்சாதன அறையில் இருப்பவர்களுக்கு மேற்கண்ட தண்ணீர் அளவு தேவைப்படாது.*🤷‍♂

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...