Tuesday, April 30, 2019

விஷால், தமிழக அரசுக்கு எதிராக போர்க்கொடி.

விஷால், தமிழக அரசுக்கு எதிராக போர்க்கொடி

விஷால், தமிழக அரசுக்கு எதிராக போர்க்கொடி
தலைவர், விஷால் தலைமையிலான அணியினர், தமிழ் திரைப்பட
தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகித்து வருகின்றனர். இவர்களது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி என். சேகர் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்த நியமனத் தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்துள் ளார்.
தற்போது பதவி வகித்துவருபவர்களின் பதவிகாலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து சங்கத்தின் வரவுசெலவு கணக்குகளை தாக்கல்செய்து, அவற்றுக்கு ஒப்புதல் பெற வருகிற மே 1-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், தேர்தல் தேதி தீர்மானிக்கப்படும்.
இந்த சூழ்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க அரசு அதிகாரி சேகர் என் பவரை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழக அரசின் வணிகவரித்துறை, பதிவுத் துறை இணைந்து மத்திய பதிவுத்துறை அதிகாரி என்.சேகரை தனி அதிகாரியாக எங்கள் சங்கத்துக்கு நியமித்துள்ளது.
தயாரிப்பாளர் சங்க நடவடிக்கைகளில் எந்த விதமான முறைகேடும் நடைபெறாத நிலையில், தனி அதிகாரியை நியமித்தது சட்டவிரோதமாகும். எனவே, இந்த நியம னத்தை ரத்துசெய்யவேண்டும். நியமனத்துக்கு தடை விதிக்கவேண்டும்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று உயர்நீதி மன்ற நீதிபதி K.ரவிச்சந்திரபாபுவிடம் நடிகர் விஷால் தரப்புவக்கீல் கோரிக்கை விடு த்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை நாளை விசாரிப்பதாக கூறினார்.

என்கிட்ட எஸ்கேப் ஆன ஒரே ஹீரோ அவர்தான் - லைலா.


















90-களின் பிரபல கதாநாயகிகள் சமீபத்தில் வித்தியாசமான வேடங்களில் ரீஎன்ட்ரி ஆகின்றனர். அந்த வரிசையில் லைலாவும், ஆலிஸ் என்ற படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார்.

தனது இணைய தள பக்கத்தில் விஜய்யுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட லைலா, ‘எங்கிட்ட எஸ்கேப் ஆன ஒரே ஹீரோ’ என்று அந்த படத்துக்கு கருத்து கொடுத்ததுடன், இது என்ன திரைப்படம் என்று கண்டுபிடியுங்கள் என சவாலும் விட்டிருந்தார்.


விஜய்யோடு லைலா நடிக்கவில்லையே அப்புறம் எப்படி இந்த படம் என்று பலரும் குழப்பிக்கொள்ள ஒரு சிலர் சரியாக கணித்தனர். விக்ரமன் இயக்கிய, ‘உன்னை நினைத்து’ படத்தில் முதலில் விஜய்தான் நடித்தார். பின்னர் அப்படத்திலிருந்து விலகினார். பிறகு அந்த வேடத்தில் சூர்யா நடித்தார். விஜய்யுடன் அப்படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தைத்தான் லைலா பகிர்ந்திருக்கிறார் என சிலர் பொருத்தமாக விடை கூறி லைலாவின் பாராட்டை பெற்றுள்ளனர்.

மோடியை விமர்சித்த விவகாரம்- உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டார்.

மோடியை விமர்சித்த விவகாரம்- உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டார்
















காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதியே கூறிவிட்டதாகவும் அவர் பேசினார். 

இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். ராகுல் காந்திக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். விசாரணையின்போது, தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். ஆனால், ராகுல் காந்தியின் பதிலில் திருப்தி இல்லை என கூறி விரிவான விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி ராகுல் காந்தி நேற்று பதில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மீனாட்சி லேகி தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, ராகுல் காந்தி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருப்பது வெறும் கண்துடைப்புதான் என்றும், அவரது பதில் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என கண்டித்தனர். 

இதையடுத்து, பிரதமரை திருடன் என உச்ச நீதிமன்றம் கூறியதாக பேசியதற்கு, மன்னிப்பு கேட்பதாக ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் கூறினார். மே 6-ம் தேதி ராகுல் காந்தி புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வார் என அவரது வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணை மே 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

99 மதிப்பெண்ணுக்கு பதிலாக 0 மார்க் போட்ட ஆசிரியை சஸ்பெண்டு.

99 மதிப்பெண்ணுக்கு பதிலாக 0 மார்க் போட்ட ஆசிரியை சஸ்பெண்டு
















தெலுங்கானா மாநிலத்தில் இன்டர்மிடியேட் தேர்வு (11 மற்றும் 12-ம் வகுப்பு) பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடந்தது. இந்த தேர்வை மொத்தம் 9.47 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. இதில் மிகப்பெரிய குளறுபடி காணப்பட்டது.

பாஸ் மதிப்பெண் பெற வேண்டிய 3.28 லட்சம் பேர் தோல்வி அடைந்ததாக தேர்வு முடிவில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ-மாணவிகள் மறு மதிப்பீடு செய்ய கோரி விண்ணப்பித்து உள்ளனர். தேர்வு முடிவு காரணமாக 21 பேர் தற்கொலை செய்து உள்ளனர்.

இதைதொடர்ந்து தெலுங்கானா பள்ளி கல்வித்துறை 3 பேர்கொண்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் மாணவி ஒருவருக்கு 99 மதிப்பெண்ணுக்கு பதிலாக 0 மார்க் இருந்த விவரம் வெளியே தெரிய வந்து உள்ளது.

கிரிஜா நவ்யா என்ற மாணவி தெலுங்கு பாடத்தில் 0 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அவர் வர்த்தக பாடத்தில் 99, சிவிக்ஸ் பாடத்தில் 96, பொருளாதாரம் 95, ஆங்கிலம் 68 பெற்று இருந்தார். தெலுங்கு பாடத்தில் மதிப்பெண் இல்லாமல் தோல்வி அடைந்ததாக முடிவு வெளியானதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து அந்த மாணவி தனது மதிப்பெண்ணை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று முறையிட்டார். அப்போது அவருக்கு 99 மார்க்குக்கு பதிலாக 0 மார்க் போடப்பட்டிருந்த அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்தது.

இதைதொடர்ந்து அவரது தெலுங்கு பேப்பரை மதிப்பீடு செய்த ஆசிரியை உமாதேவியை சஸ்பெண்டு செய்து தெலுங்கானா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதோடு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

தனியார் பள்ளியில் பணிபுரியும் அந்த ஆசிரியையை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

Monday, April 29, 2019

வாழ்த்துக்கள்......

தஞ்சாவூர் திரு. மோகன் பிள்ளை & திருமதி விஜயலெஷ்மி பிள்ளை அவர்களின் புதல்வி செல்வி சுவேதாமோகன் 10 வகுப்பில் 500 க்கு 486 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக வந்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரக வரலாற்றில் முதல் முறையாக இந்து தந்தை, முஸ்லிம் தாய்க்கு பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்.

ஐக்கிய அரபு அமீரக வரலாற்றில் முதல் முறையாக இந்து தந்தை, முஸ்லிம் தாய்க்கு பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்
















ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள திருமண சட்டத்தின்படி, ஒரு முஸ்லிம் ஆண் பிற மதத்தை சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள அனுமதி உண்டு. அதே சமயம், ஒரு முஸ்லிம் பெண் பிற மதங்களைச் சேர்ந்த ஆணைத் திருமணம் செய்துகொள்ள அனுமதி கிடையாது.

இந்நிலையில், இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்துவான கிரண் பாபு என்பவர், அதே மாநிலத்தை சேர்ந்த சனம் சாபூ சித்திக் என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறினர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், முஸ்லிம் தாய்க்கு பிறந்த அந்த குழந்தையின் தந்தை இந்து என்பதால் அந்த குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் மறுக்கப்பட்டது.

இந்த நிலையில், 2019-ம் ஆண்டை சகிப்புத்தன்மை ஆண்டாக ஐக்கிய அரபு அமீரகம் கடைபிடிக்கிறது. இதனை அடிப்படையாக கொண்டு, கிரண் பாபு மீண்டும் தனது குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரக வரலாற்றில் முதன்முறையாக இந்து தந்தைக்கும் முஸ்லிம் பெண்ணுக்கும் பிறந்த குழந்தைக்கு தற்போது பிறப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது. 

எம்.பி., வீட்டில் அதிரடி, 'ரெய்டு'.

ஆந்திராவை சேர்ந்த ஜனசேனா கட்சி தலைவரும், நந்தியால் தொகுதி, எம்.பி.,யுமான எஸ்.பி.ஒய்.ரெட்டி வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். எம்.பி., ரெட்டியும், அவரது மருமகன் ஸ்ரீதர் ரெட்டியும் நிர்வாக இயக்குனராக உள்ள, நந்தி குழு தொழில் நிறுவனங்கள், பல்வேறு பொதுத்துறை வங்கிகளிடம், 500 கோடி ரூபாய் கடன் பெற்று, திரும்பச் செலுத்தவில்லை. இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ., நேற்று திடீர் சோதனை நடத்தியது. எம்.பி., ரெட்டி, உடல்நலக்குறைவால், மருத்துவமனையில் இருப்பதால், நேற்று சோதனையின் போது, அவர் வீட்டில் இல்லை.

கரும்புஜுஸ் குடிப்பதால் ஏற்படும் பல நன்மைகள்..


புற்றுநோயைத் தடுக்கிறது: கரும்புச் சாறு, கார்பன், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் மாங்கனீசு ஆகியவற்றின் உயர் செறிவு காரணமாக, கார்போஹைட்ரேட் சூழலில் உயிர்வாழ முடியாத புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது. இதனால் இது பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு எதிராக ப்ரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோயை எதிர்த்து உதவுகிறது...
செரிமானத்தில் உள்ள எய்ட்ஸ்: அதன் உயர் பொட்டாசியம் அளவுகள் காரணமாக செரிமான அமைப்பின் நன்மைக்காக இது நல்லது. செரிமான அமைப்புகளை நல்ல வடிவத்தில் வைத்திருக்க உதவுகிறது, வயிற்றுப்போக்குகளை தடுக்கிறது மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிகிச்சையளிப்பது பயனுள்ளதாக இருக்கும்.
Image may contain: drink and indoor
இதய நோய்கள் தடுக்கிறது: இது ஆரோக்கியமற்ற அல்லது கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் அளவை குறைக்க உதவுகிறது இது இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் தடுக்கிறது.
எடை குறைப்பதில் உதவுகிறது: கரும்பு சாறு உடலில் உள்ள கெட்ட கொழுப்பு அளவை குறைக்கிறது மற்றும் இயற்கை சர்க்கரை உள்ளது, அது எடையை குறைக்க உதவுகிறது. எடை இழக்க உதவுகின்ற கரையக்கூடிய ஃபைபர் இது அதிகமாக உள்ளது.
நீரிழிவு நோய்க்கு நல்லது: கரும்பு சுவைகளில் இனிப்பு மற்றும் இயற்கை இனிப்பு நிறைந்ததாக இருக்கிறது, இது ஒரு குறைந்த கிலோகேமிக் குறியீட்டு (ஜி.ஐ.) உள்ளது, எனவே அது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்றாக வேலை செய்கிறது.
சரும குறைபாடுகளை சரிபடுத்துகிறது: ஆரோக்கியமான தோலில் வரும் போது, ​​கரும்புச் சாறு இயற்கைப் பகுதியின் பகுதியாக இருக்கும் ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலங்கள் r பல நன்மைகள் இருக்கின்றன. அவர்கள் முகப்பருவை எதிர்த்து போராடுவதன் மூலம், வயிற்றுப்போக்குகளைத் தடுக்கவும், தோல் நீரைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சர்க்கரை சாற்றை உங்கள் தோலுக்கு பொருத்தவும், அதை உலர வைக்கவும் அல்லது உங்களுக்கு பிடித்த முகம் மாஸ்க் மற்றும் ஸ்க்ரப் சேர்க்கவும், உங்கள் தோல் கதிரியக்க மற்றும் சுத்தமானதாக இருக்கும்.

உலகிலேயே சிறந்த நாடு "சிங்கப்பூர்"...

அந்த நாட்ல அப்படி என்ன தான் இருக்குன்னு பார்ப்போமா..??
"மக்களின் வீடுகளுக்கே மினரல் வாட்டர் தரத்தில் 24 மணி நேரமும் நல்ல குடிநீர்"
"24 மணிநேரமும் நிற்காத மின்சார வசதி"
"சுத்தமான காற்று, மிதமான வெப்பம், அடிக்கடி பெய்யும் மழை"
"நாடு முழுவதும் அழகான சாலைகள் , கோடிக்கணக்கான மரங்கள் , செடிகள், புல்தரைகள்." உள்ள நாடு..
"படித்து முடித்தவுடன் அனைவருக்கும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள்" வேலையில்லாதவர்களே நாட்டில் இல்லை..!!
"நேர்மையான அரசியல் தலைவர்களைக் கொண்ட நாடு."
"ஊழல் , லஞ்சம், குற்றங்கள் இல்லாத நாடு"
24 மணிநேரமும் மக்கள் பாதுகாப்பாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.. பெண்கள் தனியே சென்றாலும் பாதுகாப்புடன் சென்று வரலாம்..
உலகத்தின் முதல் தர பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், ஹோட்டல்கள், விமான நிலையம். உள்ள நாடு.!!
நாட்டின் எந்த பகுதிக்கும் செல்ல ரயில், பஸ், டாக்ஸி வசதிகள் குளிர்சாதன வசதியுடன் உண்டு..!!
இது எல்லாவற்றையும் விட நாட்டில் வாழும் பல்வேறு இன மக்களை சம மாக நடத்தும்
சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாடு..!!
நேர்மையான அழகான நாடு .. எனக்கு பிடித்த நாடு..!! தமிழ் ஆட்சி மொழியாக உள்ள நாடு.!!!

பெண்_என்பவள்_வெறும்_சதையா ?

பெண் என்பவள் வெறும் சதையா..???💠
🔸பெண் புடவை கட்டினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
🔸அவள் சுடிதார் உடுத்தினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
🔸அவள் பர்தா போட்டாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
👉 பெண்ணின் உடையிலும் பிரச்சனை இல்லை…..!
🔹பெண் ஏழு வயதிலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் பதினேழு வயதிலும் கற்ப்பழிக்கபடுகிறாள்,
🔹அவள் எழுபது வயதிலும் கற்பழிக்கப்படுகிறாள்.
👉 பெண்ணின் வயதிலும் பிரச்சனை இல்லை.
🔸பெண் இந்துவாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் முஸ்லீமாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் கிறிஸ்தவராக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
👉 பெண்ணின் மதத்திலும் பிரச்சனை இல்லை.
🔹பெண் தாயாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் மனைவியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் சகோதரியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
👉 பெண்ணின் உறவிலும் பிரச்சனை இல்லை.
🔸பெண் தமிழச்சியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் வடமொழி பேசினாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் ஆங்கிலம் பேசினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
👉 பெண்ணின் மொழியிலும் பிரச்சனை இல்லை.
🔹பெண் கருப்பாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் வெள்ளை மயிலாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் கொள்ளை அழகாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
👉 பெண்ணின் நிறத்திலும் பிரச்சனை இல்லை.
அப்போ எங்கு தான் பிரச்சனை..???
சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் இல்லையேல் நாம் திருந்த வேண்டும்.
சமூகத்தின் மீதும் பெண்கள் மீதும் ஏன் பழிப்போட வேண்டும்.
ஆண்களுக்கு பெண்களை விட வலிமையை தந்து இருப்பது அவளை காக்கவே தவிர பறிக்க அல்ல.
பெண்களை தாயாக சகோதரியாக பார்க்காவிட்டாலும் அவர்களை காமமாக பார்க்காதீர்கள்.
இந்த எழுத்துக்கள் கண்ணீர் சிந்தும் என் கண்மணிகளான சகோதரிகளுக்கு சமர்ப்பணம்.
சிந்தியுங்கள்… செயல்படுங்கள்.
😎😎😎😎😎😎😎😎😎😎v

திமுகவை காட்டிலும் அதிமுகவிற்கு பலமான கூட்டணி அமைந்துள்ளது.

அமமுக சீமான் மற்றும் கமலஹாசன் ஆகிய மூவரும் சேர்ந்து சுமார் 20 % வாக்குகளை இழுக்கிறார்கள் என்கிறார் ரங்கராஜ் பாண்டே.. இது திமுகவுக்கு பல இடங்களில் சாதகமாக முடிந்து, 25 இடங்கள் வரை திமுகவே வெல்லும் என்கிறார் பாண்டே
ஆனால் இதற்க்கு முந்தைய தேர்தலை பார்த்தால், எப்பொழுதெல்லாம் மூன்றாவது அணி வலுவாக உருவாகிறதோ, அப்பொழுதெல்லாம் திமுக படுதோல்வியை சந்தித்திருக்கிறது.. இதற்க்கு உதாரணம் 2014 (பாஜக கூட்டணி) மற்றும் 2016 (மக்கள் நல கூட்டணி)..
இதில் சீமானுக்கும் கமலஹாசனுக்கு வாக்களிப்பவர்கள் யாரென்று பார்த்தால், பெரும்பாலாக பாஜக, அதிமுகவை பிடிக்காதவர்கள்.. இந்த இரு கட்சிகள் இல்லையென்றால் இவர்கள் வோட்டு திமுகவிற்கு போயிருக்கும்.. இதில் அதிமுக வோட்டை ஓரளவு பிரிக்க கூடியவர் என்று பார்த்தால் அது தினகரன் மட்டுமே, முக்கியமாக தேவர் வாக்கு வங்கியை.. ஆனால் இதில் ஆறுதல் என்னவென்றால் இவர் திமுகவிற்கு செல்லும் சிறுபான்மையினரின் வாக்கையும் பிரிக்கிறார்.. ஆனால் திமுகவை காட்டிலும் அதிமுகவிற்கு பலமான கூட்டணி அமைந்துள்ளது
அதனால் பாண்டேவின் இந்த 20% கணிப்பு சரியென்றால், அது அதிமுக கூட்டணிக்கே சாதகமாக அமையும் என்பது என் பார்வை...

Image may contain: 1 person

நல்ல முயற்சி ..........

தமிழகத்தில் வரும் மே. 1 முதல் ஆலயங்களுக்கு செல்லும்போது இப்படித்தான் ட்ரெஸ் போடனும் - சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி அறிவிப்பு-
அனைவரும் வரவேற்க்கக்கூடியது !
தமிழகத்தில் இந்து ஆலயங்களில் நுழையும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதிரடி உடை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது .
தமிழகத்தில் இந்து கோயில்களில் மே 1-ந் தேதி முதல் ஆண்கள் மேலாடையுடன் வேஷ்டி, பைஜாமா, வழக்கமான பேன்ட் மற்றும் சட்டை அணிய வேண்டும்.
பெண்கள் சேலை, தாவணி, மேலாடையுடன் கூடிய சுடிதார், குழந்தைகள் முழுமையாக மூடப்பட்ட ஏதாவது ஒரு ஆடை அணிந்து வரவேண்டும்.
இந்த ஆடை கட்டுப்பாட்டினை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத் துறை கடிதம் அனுப்ப வேண்டும்.
அறநிலையத் துறைக்கு கட்டுப்படாத கோயில்களில் பாரம்பரிய ஆடை கட்டுப்பாடுகள் அமல்படுத்த வேண்டும். வேறு ஆடைகள் அணிந்து வரும் பக்தர்களை கோயில்களுக்குள் போலீஸார் அனுமதிக்கக் கூடாது.

சின்னம்மா நொன்னம்மா எல்லாம் முதல்வரை தேர்ந்தெடுக்கவில்லை.

அன்றைய ஐவர் அணியில், ஓபிஎஸ் வெளியேற,
கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் எம்.எல்.ஏ.வாக இல்லை.
வைத்தியலிங்கம் எம்.பி.யாக இருந்ததால் முதல்வர் ஆக முடியாது.
அந்த சூழலில் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் ஆக,
தலைமைக்கான தகுதிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது எடப்பாடியார் மட்டுமே.
எனவே எம்.எல்ஏக்கள் கூட்டத்தில் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
அன்று
தற்காலிக பொது செயலாளராக இருந்து முன்மொழிந்தது மட்டுமே சசிகலா.
அன்றைய சோக சூழலில்
அம்மாவுடன் தோழியாய் தாதியாய் இருந்த காரணத்தால்
கழக முன்னோடிகள் அவர் காலில் விழுவதை கூட தவறாக எண்ணவில்லை.
அம்மாவால் துரத்தப்பட்டு ஒளிந்து திரிந்த
தன் ரத்தமான ஃப்ராடு தினகரன் வசம் கட்சியை சசிகலா ஒப்படைக்க,
முதலில் அமைதி காத்தாலும்,
பின்
தினகரனின் முட்டாள்தனம் கலந்த எதேச்சாதிகாரம் காரணமாக,
வெடித்த கழகம் ஏகமனதாக தினகரனையும் சசிகலாவையும் கட்சியை விட்டு நீக்கியது வரலாறு.
கட்சிதான்
சசிகலாவை தற்காலிக பொது செயலாளர் ஆக்கியது.
கட்சி தான்
எடப்பாடியாருக்கு வாகை சூடியது.
கட்சி தான்
பிரிந்து சென்ற தலைவர்களை அரவணைத்தது.
கட்சி தான்
பின் மாஃபியா குடும்பத்தை தூக்கி வீசியது.
தினகரன்
பலமுறை ஸ்லீப்பர் செல் இருப்பதாக பீற்றினாலும்
ஸ்லிப்பரால் (செருப்பால்) அடித்து அவனை விரட்டியது.
கட்சி இன்று ...
எடப்பாடியாரை முதல்வராகவும் ஆட்சிக்கு தலைவராகவும் ஏற்றுக்கொண்டு,
ஓபிஎஸ் அவர்களை கழகத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பை வழங்கியுள்ளது.
காலம் ...
எடப்பாடியாரை புரட்சித்தலைவர், தலைவி வரிசையில் நிறுத்தியிருக்க காரணம்
அவர் எளிமையாக மக்களோடு மக்களாக கலந்திருப்பதேயன்றி வேறல்ல.
கடும் வெயிலில் குடையின்றி ஒரு மாதத்திற்கு மேல் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் சுற்றி
கழகத்தின் வெற்றிக்கு கடினமாக உழைத்து
இன்று அந்த 66 வயது இளைஞர் எடப்பாடியார்
கம்பீரமாக மக்களோடு ஒருவராக நிற்கிறார்.
சசிகலா ஏதோ பதவியை எடப்பாடியாருக்கு பிச்சை போட்ட மாதிரி
பீற்றிக்கொள்ளும் அறிவு கெட்ட முண்டங்களான அமமுகவினரே!
உங்களுக்கு பரிசுப் பொட்டி அல்ல, திருவோடு தான் மிஞ்சும்.

Image may contain: 3 people, people smiling, people standing

திமுக வரக்கூடாது ,, வந்தால் என்ன நடக்கும்,,?

ஒரு சின்ன ரிவியூ....
ஆனால் கொஞ்சம் நீளமான பதிவு. முழுவதும் படித்து முடிவு எடுங்கள்....
கருணாநிதியின் 2006 - 2011 வரையான கேடுகெட்ட ஆட்சி நினைவுகள் ..
இந்த அலங்கோலங்கள் அம்மா ஆட்சியில் அறவே இல்லை ..
ஏன் கடந்த 1 வருட எடப்பாடி ஆட்சியில் கூட இந்த நாட்டை சூறையாடும் கொள்ளை கும்பல் அராஜகங்கள் கிடையவே கிடையாது ...
ஏதோ திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு சொர்க்கபுரி ஆகிவிடும் என்று நினைக்கும் மறதி வந்த மனிதர்களுக்கு தமிழ்நாடு நாறிவிடும் என்று நினைவூட்டவே இந்த பதிவு.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஜூலை 2011 தேதிவரையிலும் 2 மாதத்தில் நில மோசடி புகார்கள் நான்காயிரத்தைத் தாண்டியது..
முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளருமான என்.கே.கே.பி.ராஜா, தான் கேட்டும் தனக்கு நிலத்தை விற்க மறுத்த கோபத்தினால் சிவபாலன் என்பவரை தனது வீட்டு முன்னால் இருந்த போஸ்ட் கம்பத்தில் கட்டி வைத்து, விடிய விடிய சவுக்கால் தனது வப்பாட்டியுடன் சேர்ந்து அடித்துத் துவைத்த கதையையும் கேட்டு தமிழகமே பதறியது.
12 முதல் 18 மணி நேர மின் தடை ..
அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் சர்வநேரமும் பாராட்டு விழா மற்றும் திரை துறையினர் குத்தாட்ட விழாவில் முதல்வர் கருணாநிதி தவறாமல் பங்கேற்றது ஞாபகம் ..
2011ல் ஆட்சியை இழந்த உடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது நிலத்தை மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மிரட்டி வாங்கியதாக சேஷாத்ரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..
ஆரம்பத்தில் முடிந்தால் கைது செய்யுங்கள் என்று வீரம் காட்டிய ஸ்டாலின் ஒரே மாதத்தில் பணத்தை பைசல் செய்து வழக்கை வாபஸ் பெற சுமூகமாக வழக்கை தீர்த்துகொண்டார் மு.க.ஸ்டாலின்...
ஏப்ரல் 25, 2010 அன்று இந்திய தலைமை நீதிபதி பாலக்ருஷ்ணன் , போலீஸ்
டிஜிபி லத்திகா , மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி , முதல்வர் கருணாநிதி மேடைக்கு முன்பு வழக்கறிஞர்கள் திமுக ரவுடிகளால் தாக்கப்பட்டது அன்று இந்திய தலைப்பு செய்தியானது ...
வழக்கறிஞர் ஒருவரை ரவுடி ஒருவர் முழு செங்கல்லால் ஓங்கி அடிக்க முனையும் புகைப்படம் வைரல் ஆனது ..
அப்போது தமிழ்நாட்டின் கருணாநிதி ஏவல் துறை தாக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் கைது செய்தது ..
அது போல பிப் 10 2009 அன்று சென்னை உயர் நீதி மன்ற எல்லைக்குள்ளே , வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் மேல் போலீசார் தாக்குதல்.
நீதிபதிக்கு மண்டையில் அடிப்பட்டு ரத்தம் கொட்டிய காட்சி ...
கிண்டியில் அண்ணா சாலையில் உள்ள செக்கர்ஸ் நட்சத்திர ஹோட்டலை அடித்து நொறுக்கிய சன் டீவி சக்சேனாவும் அவரது அடியாட்களும்.
சேலத்து இளவரசர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனான பாரப்பட்டி சுரேஷ்குமார் என்பவர் ஒரு நில விவகாரத்தில் தலையிட்டு தன் பேச்சைக் கேட்கவில்லையே என்கிற ஆவேசத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புசாமி என்பவரின் குடும்பத்தில் 7 பேரை வெட்டிச் சாய்த்ததாக தி.மு.க. ஆட்சியிலேயே சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அவரைக் கைது செய்தது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் எங்கெங்கோ சுற்றி கடைசியில் கருணாநிதியின் குடும்பத்தினருக்கே வந்து சேர்ந்திருக்கிறது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
அவருடைய கட்சி உறுப்பினரான ஒரு நகர மன்றத் தலைவர் பட்டப் பகலில் வெடிகுண்டு வீசி
கொல்லப்பட்டிருக்கிறார்.
மாநிலத்தின் முதல்வரான இவருக்கு அந்தத் தகவல் மாலை வரை சொல்லப்படவில்லை.
மாலையில் பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்ட பின்பு ஆச்சரியத்துடன் “அப்படியா..?” என்று அவர்களிடமே திருப்பிக் கேட்கிறார் கருணாநிதி ..
இந்த லட்சணத்தில் ஆட்சி நடத்தியவர் கருணாநிதி..
13.10.2006-இல் சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பல்வேறு இடங்களில் நடந்த வாக்குப் பதிவு மையங்களில் திமுக-வினர் நடத்திய தாக்குதல்கள் காரணமாக 100க்கும் அதிகமான வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடத்த உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது...
வரலாறு காணாத அராஜகம் என்று சொன்னது ..
கருப்பு பேன்ட் வெள்ளை சட்டை இளைஞர் அணி ரவுடிகள் ஒவ்வொரு வாக்கு சீட்டாக கிழித்து உதயசூரியனுக்கு குத்தி சாவகாசமாக ஓட்டு போட்டது டிவியில் பார்த்து பெருமைபட்டான் தமிழன் ..
முத்துக்குமார் என்னும் வீர இளைஞன் ஈழத் தமிழர்கள் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தன் உயிரைத் தானே மாய்த்துக் கொண்டான்.
அந்த இளைஞனின் உடலுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த அதேவேளையில் தான் பெற்றெடுத்த ரவுடி மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி அறிக்கை வெளியிட்ட இந்த மகா உத்தமத் தலைவனை தமிழகம் பெற்றெடுத்ததற்கு நாம் நிச்சயமாகக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..
பிரபாகரன் என்னும் ஒரு தமிழரின் தாயார்.. 80 வயது மூதாட்டி. பெயர் பார்வதியம்மாள்.
சிகிச்சைக்காக தமிழ்நாடு வருகிறார். படுத்தப் படு்க்கையாகக் கிடக்கிறார். அவர் தமிழ்நாட்டுக்குள் கால் வைத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடுமாம்.. அதனால் அவரை அப்படியே திருப்பியனுப்பி விட்டார் இந்த மனுநீதிச் சோழன்.
கிருட்டிணன் கொலை வழக்கு தள்ளுபடி , தினகரன் ஆபீசில் மூவர் கொலை, சென்னை சட்டக்கல்லூரியில் போலீசார் கண்முன்னே சாதி சங்க மாணவர்கள் வெறியாட்டம்..
அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும்.
திரையுலகைக் கபளீகரம் செய்ய கருணாநிதியின் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் திமுகவுக்கு எதிராக திரும்பியது..
திருநெல்வேலியில் இரண்டு அமைச்சர்கள் முன்னிலையில் ஆழ்வார்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம், தர்மபுரி, சேலம், கோவை போன்ற இடங்களில் காவல் துறையினரின் துப்பாக்கிகள் களவு போன விவகாரங்கள் அனைத்தும் கடந்த திமுக அரசின் சட்டம் ஒழுங்கின் லட்சணமாகும்.
நெல்லை துணை மேயர் திமுகவைச் சேர்ந்தவர் கூஜா வெடிகுண்டு தொடர்பான சர்ச்சையில் சிக்கினார் ..
போலி மருந்து வழக்கில் கைதான மீனாட்சிசுந்தரம் ஸ்டாலின் சபரீசனுக்கு வாங்கி கொடுத்த மசராட்டி கார் வெளிச்சத்துக்கு வந்தது.
சென்னை பனையூர் ஓய்வுபெற்ற கப்பல் கேப்டன் இளங்கோ, அவரது மனைவி ரமணி ஆகியோர் ஆகஸ்ட் 24-ம் 2009 தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்களுக்கு பல ஏக்கர் சொத்து இருந்தது ..
பொதுமக்கள் மூலம் போலீஸாரிடம் பிடிபட்ட ராஜன் (எ) சண்முகசுந்தரம் போலீஸ் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்தார்..
இதில் திமுக அமைச்சரின் பெயர் அடிப்பட்டது ..
அனைத்து அரசுத் துறைகளிலும் வஞ்சகமில்லாமல் புகுந்து விளையாடிய உடன்பிறப்புக்களின் லஞ்ச லாவண்யம்.. கட்சிக்காரர்களின் அடிதடி, மிரட்டல்,. கட்டப் பஞ்சாயத்து..
அமைச்சர்கள் மற்றும் கட்சிக்காரர்களின் சொத்துக் குவிப்புகள்..
அத்தனை துறைகளிலும் தனது குடும்பத்தினரின் ஆதிக்கம்..
திரும்பிய பக்கமெல்லாம் தனது வாரிசுகளின் அராஜகச் செயல்கள்..” என்று அப்பாவி மக்களின் கூக்குரல்கள்..
ஆனால் இதெல்லாம் கருணாநிதி காதுகளை எட்டவில்லை...
பொட்டு சுரேஷ் , அட்டாக் பாண்டி போன்ற ஈன கொலைகார அக்க்யூஸ்ட்டுளிடம் போலிஸ் டிஐஜி போன்ற IPS அதிகாரிகள் கை கட்டி வேலை செய்த வரலாற்றை நாடு கண்டது .. ...
திமுக ஆட்சியில் கிளை செயலாளர் கூட சுமோவில் பறந்து காவல் நிலையத்தில் புகுந்து அராஜகம் செய்த செய்திகள் வந்தனவே ...
இந்த ஆட்சியில் அப்படி கூற முடியுமா ?
மலை ராஜா என்கிற திமுக எம்எல்ஏ நெல்லை பல்கலை கழக துணை வேந்தரை அனைவர் முன்பும் பளார் என்று அறைந்தார் அராஜக ஆட்சியில்..
அவமானத்தில் துணை வேந்தர் ராஜினாமா செய்தாரே ...
2 ஏக்கர் நிலம் என்று மயக்கி பட்டை நாமம் போட்டார் ...
இப்போது யார் கிடைப்பார் , தலையில் மிளகாய் அரைத்து முதுகில் ஏறி சவாரி செய்யலாம் என்று ஏங்கி தவிக்கிறார் .. ....
கருணாநிதியோ மாதத்தில் 20 நாட்கள், தான் பார்த்த வேலைக்காக, பாராட்டு விழாக்களை தானே ஏற்பாடு செய்து மானாட மார்பாட என ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதையாக.. தன்னைப் பற்றிய பாராட்டுக் கவிதைகளை ஏகாந்தமாக ரசித்துக் கொண்டிருந்தார்.
ஊழல் செய்தார்கள்.. கொள்ளையடித்தார்கள்..
கொலை செய்தார்கள்..
அராஜகம் நடத்தினார்கள் .
அதைவிட அதற்குப் பின்பு காவல்துறையில் புகார் கொடுக்க வந்தவர்களிடமிருந்து புகார்களைக்கூட வாங்க மாட்டோம் என்று காவல்துறையே மறுத்திருக்கிறது என்றால், கருணாநிதியின் நிர்வாக லட்சணத்தை இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்...
இப்போது மகனும் பேரனும் அப்பாவி வேஷம் போட்டு ஊருக்குள் வருகிறார்கள்...
விடலாமா!
வாழ்க வளமுடன்!!

திமுக திருடாத ஒரே கடை சாக்கடைதான் என்று நீங்கள் நினைத்தால் அதுவும் தவறுதான்!!

1967-இல் அண்ணாதுரை ஆட்சியின் போது நம்ம மஞ்சதுண்டுதான் பொதுப்பணித்துறை அமைச்சர்...!!
சென்னையில் இருக்கும் கூவம் நதியை சுத்தம் செய்வதாக முதல் கட்டமாக 3 கோடி நிதியை ஒதுக்குவதாக மஞ்சத்துண்டு அறிவித்தார்.
6 மாதம் ஓடி விட்டது ; கூவம் நதி சுத்தம் ஆனதாக தெரியவில்லை , இதை பற்றி கம்யுனிஸ்ட்டுகள் சட்டசபையில் மஞ்சதுண்டை கேள்வி கேட்டபோது
இன்னும் மூன்று நாளில் கூவம் நதி சுத்திகரிப்பு பற்றி விவரம் சொல்கிறேன் என்றார் மஞ்சதுண்டு
அடுத்தநாள் பத்திரிக்கையில் ஒரு பரபரப்பு செய்தி வந்தது - கூவம் நதியில் முதலை - பொது மக்கள் அலறி ஓட்டம் என்பதுதான் அந்த செய்தி.
அடுத்த நாள் சட்டசபையில் மஞ்சத்துண்டு விளக்கம் தருகிறார்
கூவம் நதியில் முதலை இருப்பதால் சுத்தம் செய்கின்ற பணியாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய மறுத்துவிட்டதால் கூவம் நதி சுத்திகரிப்பு திட்டம் கைவிடபடுகிறது.
என்று அறிவித்தார் மஞ்ச துண்டு...
உடனே எதிர்கட்சிகள் அப்போ , இத்திட்டத்திற்கு ஒதுக்கிய அந்த 3 கோடி என்னாச்சி?
என கேட்க ...
மஞ்சதுண்டோ முதல்கட்ட பணிக்காக அந்த 3 கோடி முழுமையாக செலவழிந்து விட்டது என்றார்!
சாக்கடையில் முதலை எப்படி வரும் ?
கூவத்தில் இல்லாத முதலையை இருப்பதாக வதந்தி பரப்பி , இத்திட்டதிற்க்காக ஒதுக்கிய 3 கோடியை நம்ம மஞ்சதுண்டின் முதலை வாய் முழுங்கி விட்டது ;
அன்றைய காலத்தில் ஒரு பவுன் நகையே 100ரூபாதான்
3 கோடியில் - 3 லட்சம் பவுன் நகை வாங்க முடியும்;
இன்றைய மதிப்பில் ஒரு பவுன் நகை 20,000 ரூபாய் என்று வைத்தாலும் ,
இன்றைய மொத்த மதிப்பு
20000*300000 = 6600 கோடி .
இப்ப சொல்லுங்க தமிழ்நாட்டு மகா ஜனங்களே,
இந்தியாவுல பலே திருடன் எத்தன பேர்கள் இருந்தாலும்
எத்தனுக்கேல்லாம் எத்தன் .
ஜித்தனுக்கேல்லாம் ஜித்தன்...
பல்லேலக்கா திருடர்... தன் தொழிலை குடும்ப வாரிசுகளோடு திறம் பட செய்கிறார் என்றால் இது நம்ம தமிழ் நாட்டுக்கே
சாபமல்லவா!!
வாழ்க வளமுடன்!!

*எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.*

கடவுள் வந்தார்...!
"என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..
அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..
முதல் மனிதன் :
“எனக்கு கணக்கிலடங்கா காசும்,
பெரிய பிஸினஸும் வேண்டும்..!”
இரண்டாம் மனிதன்:
“நான் உலகில் சிறந்தோங்கி
பெரிய பதவியை அடைய வேண்டும்..!”
மூன்றாம் மனிதன் :
“உலப்புகழ் பெற்ற நடிகர் போல்
மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”
நான்காம் மனுஷி:
“உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..!
உலகமே அதில் மயங்க வேண்டும்..!”
இப்படி..
இன்னும் ஐந்து பேரும்
தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!
கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!
பத்தாவது மனிதன் கேட்டான்:
“உலகத்தில்
ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும்
மன நிறைவோடும் வாழ முடியுமோ,
அந்த நிலை எனக்கு வேண்டும்..!”
ஒன்பது பேரும்
அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!
“ *மனநிம்மதி, மன நிறைவு*…
நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..?
விரும்பியது கிடைத்தால் மனநிறைவு கிடைத்து விடுமே..?”
கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் :
“நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..!
நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு,
பத்தாவது மனிதனைப் பார்த்து :
"நீ இரு..!
நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்..
சிறிது நேரம் கழித்து வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!
இப்போது,
அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..!
கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்;
என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..!
துடித்தது..!
அவர்கள் விரும்பியது எதுவோ
அது கையில் கிடைத்த பின்னும்,
இன்னும் எதுவுமே கிடைக்காத
அந்த
பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..!
நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..!
தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..!
அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே,
அந்த இடத்திலேயே,
அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..!
பத்தாவது மனிதன்,
கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..!
கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே
அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!
நாம்
*பத்தாவது* மனிதனா..?
இல்லை
*பத்தாது* என்கிற மனிதனா..?
முடிவு எடுங்கள்..
*எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.*
இனிமையான எண்ணங்களுடன்.

நீட் தேர்வும் அனிதா மரணமும் திமுகவின் திட்டமிட்ட உன்மை நாடகம்.

நான் இந்த கட்டுரையை எழுதக்காரணம் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு MBBS படித்தேன் என்றும் இன்று நீட் தேர்வு பற்றி எவ்வாறு தவறான தகவல்கள் பரப்பபடுகிறது என்றும் மற்றவர்கள் தெரிந்து கொள்ள செய்யவேண்டும் என்பதற்காகவே.
என் தந்தை ஒரு டாக்டர் ஒரு சிறிய மருத்துவமனை வைத்து நடத்துகிறார் நான் முதல் மகள் என்னை நாமக்கல்லில் உள்ள பள்ளியில் 9 ம் வகுப்பு முதலே சேத்தினார். நான் டாக்டராக வேண்டும் என்பது அவர் கணவு. நான் சிறந்து புரிந்து படிக்கும் மாணவி ஏனென்றால் நான் மருத்துவத்தை தினமும் பார்த்தவள் எனக்கு தந்தை அறிவை ஊட்டி வளர்த்தார் ஆனாலும் என் மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை காரணம் நான் படித்த பள்ளியில் மனப்பாடம் செய்யும் பயிற்சியில் பல மாணவிகள் முழு மதிப்பெண் பெறுவர் அது புரிந்து படிக்கும் எணக்கு சாத்தியமில்லை.
இதை கண்ட என் தந்தை கவலைப்படாதே நாம் மேனேஜ்மெண்ட் கோட்ட சீட் வாங்கலாம் என்றார் SRM கல்லூரிக்கு புரோக்கர் மூலம் 50 லட்சம் முன்பனம் நான் +1 படிக்கும் போதே கட்டினார். நான் சேறும் போது 65 லட்சம் கட்டி சீட் வாங்கினார். நான் படிக்க 72 லட்சம் செலவானது பணத்தை பிடுங்கினர். என் தந்தை அவர் ஹாஸ்பிடல் கட்டிடத்தை அடமானம் வைத்து இன்றுவரை வட்டி கட்டி வருகிறார்.
ஆனால் என்னுடன் படித்த அரசு கோட்டாவில் கிடைத்த சீட்டில் படித்த என் தோழிகள் கூறிய செய்தி அதிர்ச்சி அளித்தது அவர்கள் சீட்டு வாங்க அவர்கள் படித்த பள்ளிகளே உதவியிருக்கின்றன அதாவது அரசு கோட்டாவில் சீட்டு வாங்க அவர்கள் 75 லட்சம் அவர்கள் பள்ளிக்கு கட்டியிருக்கிறார்கள் அந்த பள்ளிகள் அவர்கள் மார்க்கை தேவையான அளவு பெற்று தந்திருக்கிறார்கள் அதாவது அரசு கோட்டாவும் விலைக்கு விற்கப்பட்டு இருக்கிறது. நான் இப்பொழுது தனியார் மருத்துவமனையயில் மருத்தவர் சம்பளம் 76000 ரூபாய் நான் படிக்க செலவு செய்த காசுக்கு வட்டி கூட வருவது இல்லை.
என் தந்தை என் தங்கைக்கு வேறு மறுத்துவம் சேற அறிவுறுத்தினார் அவள் என்னை விட படிப்பில் சுமார்தான் ஆனால் பிராக்டிகல் அறிவில் மற்றவர்களை விட திறமை அதிகம். ஆனால் தந்தை பொருளாதார நிலை கருதி BDS படிக்க சொன்னார். அதுவும் எங்கள் ஊர் தனியார் பள்ளியிலேயே படிப்பு அவள் அதிர்ஷ்டம் நீட் தேர்வு முறை வந்தது அவள் தேர்வு எழுத என் தந்தை தன் முழு அனுபத்தையும் பயன்படுத்தி முயன்றார் சோர்ந்திருந்த தந்தை மிகவும் சுருசுருப்பானார் +2 தேர்வில் 1200 க்கு 1090 மதிப்பென் பெற்ற என் சகோதரி அதே அனிதா எழுதிய தேர்வில் எழுதினார் .
என் தங்கை தேர்வை எழுதிவிட்டு வர நானும் என் தந்தையும் வெளியில் படபடப்புடன் காத்திதிருந்தோம். தேர்வு எழுதிய பலர் சோகமாக வர என் சகோதரியை பெரும்பாலன கேள்விக்கு சரியாக பதில் எழுதியதாக நம்பிக்கையுடண் கூறினார்.
தேர்வு முடிவில் என் சகோதரி கோவை மருத்துவ கல்லூரியில் அரசு கோட்டாவில் சீட் வாங்கினார் மொத்த செலவு 14.5 லட்சம்தான் வருகிறது அதுவும் ஸ்காலர்ஷிப் வருது. அவள் அனைவரிடமும் கூறுவது நான் படித்து முடித்து வந்து கண்டிப்பாக பாதிபேறுக்கும் இலவச மருத்துவம் பார்ப்பேன் என்று. கண்டிப்பாக நீட் தேர்வு மருத்துவ படிப்பு கொள்ளையை முடித்து விட்டது.
திறமையானவர்கள் காசில்லாவிட்டாலும் மருத்துவராகவும் இனி மருத்துவம் வியாபாரம் எனும் நிலை மாறி சேவையாகவும் மாறும்.
என் தங்கை கூறுவது அனிதா ஏன் திமுக தலைவர்களை சந்தித்தார் அவர் ஏன் டீவியில் திரும்ப திரும்ப காட்டப்பட்டார் அவர் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல உதவியது யார். அவரை போட்டி எடுத்தவர்களை சிபிஜ விசாரணைக்கு உட்படுத்தினாலே அவரை கொன்றது திமுக என்று வரும்.
ஆண்டுக்கு 3000 கோடியை மக்களிடம் திருட வழியில்லை இன்று 3000 மருத்துவர்கள் திறமையானவர்கள் 2021 ல் வருவர் அவர்கள் வரும்போது மருத்துவம் சீரடையும்.
தயவு செய்து பலருக்கு இதை கொண்டு சேர்க்கவும் இல்லாவிட்டால் மக்கள் 3000 கோடியே இழக்க வேண்டி வரும் வியாபாரிகள் மருத்துவர்களாக வருவார். உங்கள் பிள்ளைகள் பிறக்க உங்கள் மனைவிகளின் வயிறு கிழியும்.
வாழ்க வளமுடன்!!

ஏமாறாதீர்கள். ஏமாற்றாதீர்கள்.

வரும் அட்சய திருதியை அன்று பெண்கள் நகை வாங்குவதை தவிர்த்துவிட்டு காலையில் குளித்து கடைக்கு சென்று கல் உப்பு வாங்கி வரவும் பிறகு வீட்டில் தயிர் சாதம் செய்து அதனுடன் நெல்லிக்காயை நறுக்கி கலந்து விடவும்பிறகு குருமிளகு நிறைய கலந்த உளுந்து வடை தயார் செய்து மூன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும்.அடுத்த அட்சய திருதியை அன்று நமது தரித்திரங்கள் தீர்ந்து நமது வாழ்க்கை மென் மேலும் உயர்ந்து கொண்டே போகும் இதை தவறாமல் ஏழைகளுக்கு தானம் செய்யவும்.அட்சய திருதியை அன்று நகை வாங்க வேண்டும் என்று எந்த ஏடுகளிலோ, புரணக்கதைகளிளோ, சித்தர்கள் அல்லது வேறு புத்தகங்களிளோ எதிலும் குறிப்பிட படவில்லை ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்் ்்அப்படி ஏதாவது பழமையான நூல்களில் இருந்தால்பதிவிடவும்.

இரவு நேரங்களில் பாதங்களில் எரிச்சல் அதிகமா இருக்கா.:



அனைத்து வயதினரும் சந்திக்கும் பிரச்சினை தான் பாத எரிச்சல். இது சிலருக்கு இரவு நேரங்களில் வருவதுண்டு.
இந்த எரிச்சல் உணர்வானது மிதமானது முதல் தீவிரமானது வரை என இருக்கும்.
பாதங்களில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டால், அவர்களது பாதங்கள் வீங்கியோ, சிவந்தோ, தோல் உரிந்தோ, சரும நிறம் சற்று மாறுபட்டோ, தாங்க முடியாத எரிச்சலையோ சந்திக்க நேரிடும்.
இப்பிரச்சனையில் இருந்து விடுபட, ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அவை என்ன என்பதை பார்ப்போம்.
ஒரு அகலமான வாளியில் குளிர்ச்சியான நீரை நிரப்பி, அந்நீரில் பாதங்களை சில நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் சிறிது இடைவெளி விட்டு, மீண்டும் குளிர்ந்த நீரில் ஊற வையுங்கள். இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்யுங்கள். ஆனால் ஐஸ் கட்டிகளையோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்த நீரையோ நேரடியாக பாதங்களில் பயன்படுத்தாதீர்கள்.
2 டீஸ்பூன் மஞ்சளை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் 2 முறை குடிக்க வேண்டும்.
2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, எரிச்சல் உணர்வு உள்ள பாதங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 1-2 முறை என சில நாட்கள் பின்பற்ற தீர்வு கிடைக்கும்.
ஒரு அகலமான வாளியில் 1 1/2 கப் எப்சம் உப்பு போட்டு, வெதுவெதுப்பான நீர் ஊற்றி கலந்து, அந்நீரினுள் பாதங்களை 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு ஒருமுறை என சில நாட்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலில் 1 டீஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலந்து, அந்த எண்ணெயால் பாதங்கள் மற்றும் கால்களில் தடவி 10-15 நிமிடம் மசாஜ் செய்து வாருங்கள்.
ஒரு கையளவு பாகற்காய் இலைகளை நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை பாதங்களில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் பின்பற்றி வந்தால், பாதங்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வு நீங்கும்.
பாதங்களுக்கு சில எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலமும், பாதங்களில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அசௌகரியத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
பாதங்களில் மசாஜ் செய்வதன் மூலம், பாதங்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதுவும் வெதுவெதுப்பான தேங்காய், ஆலிவ் அல்லது கடுகு எண்ணெயால் பாதங்களுக்கு குறைந்தது 10 நிமிடம் மசாஜ் செய்யுங்கள்.
அதுவும் இரவு தூங்கும் முன் மசாஜ் செய்து வருவது மிகவும் நல்லது.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...