Sunday, April 28, 2019

ஸ்டாலினைப் பார்த்துவிட்டு கொடுக்கும் பேட்டியில் கோமதி என்ன சொல்கின்றார் என்று பாருங்கள்.

முஹம்மது அசாருதீன்... வங்கியில் கடைநிலை ஊழியராக பணிபுரிந்தவர். முதலில் இந்திய அணிக்கு விளையாடிய நேரம் சரியான கிரிக்கெட் மட்டை இல்லை... உபகரணங்கள் இல்லை. ஸ்ரீகாந்த் கவாஸ்கர், போன்றோர் உதவினர்.
அப்துல் கலாம் பெரிய அளவில் அரசு உதவியின்றி பேப்பர் போட்டு, உழைத்து, படித்து மாபெரும் அறிவியல் விஞ்ஞானியாக திகழ்ந்து, இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்தவர்.
இவர்களைப் போல ஒவ்வொரு சாதனையாளருக்குப் பின்பும் ஒரு பெரிய போராட்டம் இருந்திருக்கும். அரசை யாரும் குறை கூறவில்லை.
அதேபோல, வெளிநாடுகளில் கிடைக்கும் வசதி இந்தியாவில் இல்லை எனக் கூறுவோர், அந்த வசதிக்குத் தரும் விலை பற்றி பேசுவதில்லை. உதாரணமாக இங்கு தரம் வாய்ந்த நீச்சல் குளத்தைப் பயன்படுத்துவோர் ஒரு மணி நேரத்துக்கு சுமார் ₹2500 தரவேண்டும். தரம் வாய்ந்த ஓடுதளத்தில் பயிற்சி பெற சுமார் ₹2000 தரவேண்டும். அப்படி செலவழித்து உயர்ந்து மாநில அளவில் வரும்போதே அரசு அல்லது சில தனியார் நிறுவனங்கள் அவர்களுக்கு உதவுவார்கள். அப்படி உதவி பெறவும் இந்த வீரர்கள் தரும் விலை அதிகம்.
இலவசமாக சிலரை பயிற்றுவிக்க வேண்டும்... விளம்பரங்களில் நடிக்க வேண்டும். அவர்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது.
இதனை நமது இந்திய மங்கை புரிந்துக் கொள்ள வேண்டும்...
புரிந்து கொள்வாரா.. இல்லை... சில திராவிட பதர்களை நம்பி வீணாக போவாரா ..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...