Monday, April 29, 2019

வயிற்று வலிக்கு அருமருந்து! வாயு தொல்லைக்கு எமன்! ட்ரை பண்ணி பாருங்க!

இதுக் கோடைகாலம் என்பதால் சிறியவர் முதல் பெரியவர் வரைக்கும் அதிக வெப்பம் காரணமாக வயிற்றுவலி வருவது சர்வசாதாரணம். மேலும் சிலர் வாயு தொல்லையால் அவதிப்படுவர்களுக்கும் பூண்டு கஞ்சியை குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இந்த பூண்டு கஞ்சியை அடிக்கடி செய்து குடித்தால் உடலுக்கும் நல்லது.
இந்த பூண்டு கஞ்சியை நம் வீட்டிலேயே செய்யலாம், கீழே செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது அதன்படி செய்து வயிற்று வலி, வாயு பிரச்னையில் இருந்து குணமடையுங்கள்.
தேவையான பொருட்கள்:-
பச்சரிசி .................. 1 கப்
பூண்டு .................... 150 கிராம்
மிளகு ..................... 1 டீஸ்பூன்
சீரகம் ...................... 2 டீஸ்பூன்
வெந்தயம் ............. 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய்... சிறிதளவு
தண்ணீர் ................. தேவையான அளவு
உப்பு ........................ தேவைக்கு
காய்ச்சிய பால் ..... 1 கப்
செய்முறை:-
* அரிசியை நன்றாக கழுவி சிறிது நேரம் ஊறவைத்து நீரை வடித்து கொள்ளவும்.
* பூண்டை தோல் உரித்து வைக்கவும்
* குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை கொட்டி கிளறவும்.அத்துடன் பூண்டு பற்களை கொட்டி வதக்க வேண்டும்.
* பூண்டு நன்றாக வதங்கியதும் உப்பு மற்றும் அரிசியை கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேக விட வேண்டும்.
* சாதம் நன்றாக வெந்ததும் அதனை மசித்து விட்டு பால் கலந்து பருகவும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...