Tuesday, April 23, 2019

நான்கு தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு.

நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான, அ.தி.மு.க., வேட்பாளர்கள், நேற்று அறிவிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலுார் சட்டசபை தொகுதிகளுக்கு, மே, 19ம் தேதி, தேர்தல் நடக்க உள்ளது. இத்தொகுதிகளில் போட்டியிட விரும்புவோரிடம், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், 22ம் தேதி விருப்ப மனு வாங்கப்பட்டது.
நுாற்றுக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்தனர்; அன்று மாலை நேர்காணல் நடந்தது. ஆனால், வேட்பாளர்களை தேர்வு செய்வதில், சிக்கல் ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் தொகுதியில், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு, எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா ஆகியோர், தங்களின் ஆதரவாளர்களுக்கு, 'சீட்' அளிக்க வேண்டும் என, கட்சி தலைமையை வற்புறுத்தினர்.
ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், தன் ஆதரவாளருக்கு, சீட் கொடுக்க விரும்பினார். இதனால், வேட்பாளரை தேர்வு செய்வதில், இழுபறி ஏற்பட்டது.
அதேபோல, சூலுார் தொகுதியை, தனக்கு வழங்கும்படி, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி கேட்டார். ஆனால், அமைச்சர் வேலுமணி, தன் ஆதரவாளரை நிறுத்த முயன்றார். அனைத்து தரப்பினரையும் சமாதானப்படுத்தி, நேற்று வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஒட்டப்பிடாரம் தொகுதியில், துாத்துக்குடி வடக்கு மாவட்ட துணைச் செயலர் மோகன்; திருப்பரங்குன்றம் தொகுதியில், அவனியாபுரம் பகுதி செயலர் முனியாண்டி; அரவக்குறிச்சியில், கரூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலர் செந்தில்நாதன்; சூலுாரில், கோவை புறநகர் மாவட்ட ஜெ., பேரவை தலைவர் கந்தசாமி ஆகியோர், வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 
அனைவரும், நேற்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து 
பெற்றனர்.

திருப்பரங்குன்றம் வேட்பாளர்


பெயர் :எஸ்.முனியாண்டி, 60
படிப்பு :எம்.ஏ.பி.எல்.,
தொழில் :வழக்கறிஞர், முழுநேர அரசியல்வாதி
குடும்பம் :மனைவி சாந்தி, மகள் பிரியா, மகன் 
விஜயகுமார்
அரசியல் அனுபவம்:1972 ல் 
அ.தி.மு.க., துவங்கியது முதல் கட்சியில் உள்ளார். 2001- 2006 வரை திருப்பரங் 
குன்றம் ஊராட்சி ஒன்றிய தலைவர், 2006 முதல் 2011 வரை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 2011 முதல் 2016 வரை மதுரை மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் சுகாதார குழு தலைவர், திருப்பரங்குன்றம் தொகுதி ஜெ., பேரவை செயலாளர், அவனியாபுரம் நகர் செயலாளராக இருந்தார். தற்போது அவனியாபுரம் பகுதி செயலாளராக உள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...