Sunday, April 28, 2019

மயக்கம் #முதலுதவி #என்ன?

நமது மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் தடைபடும் நேரத்தில் நமக்கு மயக்கமானது ஏற்படுகிறது.
ஒரு நபருக்கு மயக்கம் ஏற்பட போகிறது என்பதை நாம் முன்னதாகவே அறிந்திருக்கும் பட்சத்தில், அவரை உடனடியாக கீழே விழுந்துவிடாதவாறு பிடித்து கொள்ளும் பட்சத்தில், அவருக்கு ஏற்படும் காயத்தில் இருந்து தப்பிக்கொள்ள இயலும்.
அவ்வாறு நபர் மயக்கமடைந்து விடும் பட்சத்தில், அவரை கீழே படுக்கவைத்து கால்களை சிறிது உயரத்தில் இருக்கும் படி வைத்து, தேவையான காற்றோட்டத்தை வழங்கி, அவரது முகத்தில் நீரை அடித்து துடைக்க வேண்டும்.
மேலும், அவருக்கு சோடாவை வழங்க கூடாது. முதலில் தேவையான காற்றை அவர் சுவாசிக்க செய்ய வேண்டும்.
பின்னர் அவரை எழுப்பி அமர வைத்து, பதற்றம் இல்லாமல் சிறிது நேரம் மெதுவாக மூச்சு விட செய்ய வேண்டும். பின்னர் அவருடன் சிறிது பேச்சு கொடுத்து, அவரை அமைதிப்படுத்தி ஒன்றும் இல்லை என்று தன்னம்பிக்கை வழங்க வேண்டும்.
அவருக்கு பதில் ஏதும் தெரிவிக்க முடியாத பட்சத்தில், அவரால் நாம் கூறுவதை அறிந்து கொள்ள இயலும்.
அவரது உடல் வெப்பநிலையானது அதிகமாக இருக்கும் பட்சத்தில்., ஈரத்துணியில் மூலமாக அவரது முகம் மற்றும் கைகளை துடைப்பதன் மூலமாக அவரது உடல் வெப்ப நிலையானது குறைக்கப்படும்.
மேலும், மயக்கமடைந்ததில் 4 வயதிற்கும் கீழ் இருக்கும் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில், அவர்களின் நெற்றி மற்றும் கக்கத்தில் ஈரத்துணியை சிறிது வைத்து துடைத்து கொடுக்க வேண்டும்.
பின்னர் மருத்துவமனையில் மருத்துவர்கள் கவனித்து கொள்வார்கள். அவ்வாறு நாம் செய்யாமல் இருக்கும் பட்சத்தில்., இந்த பதட்டத்தின் விளைவாக வலிப்பு அல்லது ஜன்னி ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், சர்க்கரை நோய் இருக்கும் நபர்களுக்கு ஏற்படும் திடீர் கோபம் போன்ற காரணத்தால் அவர்கள் அதிக அழுத்தத்திற்கு உள்ளானால் அவர்களின் சர்க்கரை அளவானது குறைந்துள்ளது என்பதை அறிய வேண்டும்.
அவர்களுக்கு உடனடியாக சிறிதளவு சர்க்கரை அல்லது இனிப்பு சுவை கொண்ட சாக்லெட்டை வழங்குவதன் மூலமாக அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள். இந்த அனைத்தையும் சுயநினைவுடன் இருக்கும் நபர்களுக்கு மேற்கொள்ளலாம்.
அவ்வாறு மயக்கம் அடையும் பட்சத்தில் உடனடியாக அவர்களுக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வது நல்லது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...