Tuesday, April 23, 2019

மிகத்துல்லியமாக இந்திய உளவுத்துறை இலங்கையை எச்சரித்துள்ளது - செய்தி.

இங்கு அமைதி நிலவுவதற்கு பின் எவ்வளவு தியாகம், எவ்வளவு உழைப்பு, எவ்வளவு கடமையுணச்சி, எவ்வளவு தேசப்பற்று இருந்திருக்கிறது என்பதையும் சேர்த்து உணரவேண்டும்.
நிச்சயமாக இந்திய அரசு உளவுத்தகவல்களை சல்லடையாக சலித்து அலசி பல அசம்பாவிதங்களை தடுத்துவருகிறது என்பதை இந்த பயங்கரவாதத் தாக்குதல் மூலம் உணரமுடிகிறது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதைப்போல இப்போது நாம் வாழும் இந்த அமைதியான சூழல் யாரால் எப்படி பராமரிக்கப்படுகிறது என்று சொன்னால் நிச்சயம் அரசியலாக்கி விடுவார்கள் இங்கிருக்கும் பிரிவினைவாத, லிபரல், திராவிடியால்கள். பைலட்டுக்களுக்கு மாத்திரம் நன்றி சொல்லி சொறிந்து கொண்ட கூட்டம் அது என பொருட்படுத்தாமல் கடந்துவிடலாம்.
வருமுன் காக்கும் இந்த தடுப்பு நடவடிக்கைகள் யாருக்கு அதிகம் பயனளிக்கும் தெரியுமா ? நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு அதிக நன்மைகளைத்தரும்....
பிற சமூகத்தால் அவர்களை சந்தேகக் கண்ணோட்டத்தில் உங்களைப் பார்ப்பது தவிர்க்கப்படும்.
தனிமைப்படுதல் தவிர்க்கப்படும்.
அவர்களது குழந்தைகள் காரணமேயின்றி பகடி செய்தல் தவிர்க்கப்படும்.
இன்னபிற ஏராளமான அனுகூலங்கள் அரசின் இந்தத் தடுப்பு நடவடிக்கைகளால் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது என்பதை சற்று கற்பனை செய்து பார்க்க வேண்டும்.
அந்த மத பெரியவர்கள் எந்த முட்டுக் கொடுத்தல்களுமின்றி தீவிரவாத செயல்களுக்கு எதிராக வெளிப்படையாக பேசி உண்மையாக செயல்பட்டு இளம் வயதினரின் மனதில் இருக்கும் அச்சம், அவநம்பிக்கையைப் போக்கி நல்லெண்ணங்களை வளர்த்தெடுக்க உறுதியேற்க வேண்டும்.
கடும்போக்கு (தீவிரவாதம் என்று சொல்வது நாகரீகமில்லையாம் சரி மலம் என்று சொன்னாலும் அதற்கு பொருள் ஒன்றுதானே) சிந்தனை கொண்ட இளைஞர்களை குடும்பத்தினரிடம் சொல்லி எச்சரித்து மனநல ஆலோசனை வழங்கி சீர்படுத்த தொடர் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக மதப்புத்தகம் தவிர பிற அறநெறி நூல்கள் கற்றவரா என நன்காய்ந்து மத குருக்களை வழிபாட்டுத் தலங்களில் நியமிக்கவேண்டும். இதில்தான் இருக்கிறது சூட்சுமம்.
மீண்டும் சொல்வது ஒன்று இந்த அமைதியான சூழலுக்குப்பின் இருக்கும் தியாகம், உழைப்பு, தேசப்பற்று அனைத்தையும் உணர்ந்து நமது ஒத்துழைப்பையும் அரசிற்கு அளிக்கவேண்டும்.
மற்றபடி பைலட்டுகளுக்கு மாத்திரம் நீங்கள் செலுத்தும் நன்றியைப்பற்றி அதில் இருக்கும் அரசியலைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. நான் உண்மை எதுவோ அதை உணர்ந்து பைலட்டின் தீரத்தையும், தியாகத்தையும் போற்றுவது போல அந்த தீரத்தை, தியாகத்தை வெளிப்படுத்த இருந்த கட்டுப்பாடுகளை நீக்கி செயல்பட வாய்ப்பளித்த "நாட்டின் காவலாளி"க்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொண்டே இருப்பேன்.
பயங்கரவாதம் வெடிப்பில் முடிந்தாலும் துவங்குதல் என்னவோ பாழடைந்த மனித மனதில்தான்...
கண்டதைக் கற்று பண்டிதன் ஆக முயலுங்கள் மனம் செழுமை பெறும் தீய எண்ணங்கள் தூர ஓடும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...