Thursday, April 25, 2019

வங்கிகள் மீது பெருகும் புகார்கள்; எஸ்.பி.ஐ.,க்கு முதலிடம்.

கடந்த, 2018 ஜூன் வரை­யி­லான ஓராண்டு காலத்­தில், வங்கி குறை­தீர்ப்பு மையங்­களில், 1.63 லட்­சம் புகார்­கள் குவிந்­துள்ளன. இது, முந்­தைய ஆண்டை விட, 24 சத­வீ­தம் அதி­கம். அவற்­றில், 96 சத­வீத புகார்­க­ளுக்கு தீர்வு காணப்­பட்­டுள்­ளது என, ரிசர்வ் வங்கி தெரி­வித்­துள்­ளது.

புகார்­களில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா முத­லி­டத்­தில் உள்­ளது. இவ்­வங்கி மீது, 47ஆயி­ரம் புகார்­கள் குவிந்­தன. அடுத்து, எச்.டி.எப்.சி., வங்கி, 12 ஆயி­ரம் புகார்­க­ளு­டன் இரண்­டா­வது இடத்தை பிடித்­துள்­ளது. அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, சிட்டி பேங்க் மீது, 1,450 புகார்­கள் கூறப்­பட்­டுள்ளன.

வங்­கி­கள், விதி­க­ளின்­படி வெளிப்­ப­டை­யாக நடந்து கொள்­வ­தில்லை என, 22.1 சத­வீத புகார்­கள் வந்­துள்ளன. இதை­ய­டுத்து, ஏ.டி.எம்., மற்­றும் டெபிட் கார்டு தொடர்­பாக, 15.1 சத­வீ­தம்; கிரெ­டிட் கார்டு 7.7 சத­வீ­தம்; வலை­த­ளம் வாயி­லான வங்­கிச் சேவை குறித்து, 5.2 சத­வீத புகார்­கள் தெரி­விக்­கப்­பட்­டுள்ளன.

ஓய்­வூ­தி­யம், முன்­கூட்­டியே தெரி­விக்­கா­மல் சேவைக் கட்­ட­ணம் வசூ­லிப்­பது, கடன், டெபா­சிட், நேரடி விற்­ப­னை­யில் ஈடு­பட்­டுள்ள முக­வர்­கள், வாராக் கடன் மீட்பு நட­வ­டிக்­கை­கள், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு தவ­றான தக­வல்­களை அளிப்­பது போன்­றவை தொடர்­பாக, தலா, 5 சத­வீத புகார்­கள் வந்­துள்ளன.

மத்­தி­யஸ்­தம் மூலம் தீர்வு காணப்­பட்ட புகார், 42.4 சத­வீ­தத்­தில் இருந்து, 65.8 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. வங்கி குறை­தீர்ப்­பா­யங்­கள், வாடிக்­கை­யா­ளர்­களின் புகார்­கள் மீது விரைந்து நட­வ­டிக்கை எடுக்­கிறது. இத­னால், வங்­கி­கள் மீதான புகார் பரி­சீ­லனை செல­வி­னங்­கள் குறைந்து வரு­கின்றன. ஒரு புகாரை பரி­சீ­லிக்க ஆகும் சரா­சரி செலவு, 3,626 ரூபா­யில் இருந்து, 3,504 ரூபா­யாக குறைந்­துள்­ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...