Sunday, April 28, 2019

அட்சய திருதியை நாளில் என்ன வாங்கலாம்?

👉ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை திதிகளில் 3-வது திதியாக திருதியை திதி வருகிறது. சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வருகிற திருதியை திதியையே 'அட்சய திருதியை" என்று அழைக்கிறோம். இவ்வருடம் அட்சய திருதி மே 7ஆம் தேதி வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளியை இரு கிரகங்களின் அம்சமாக கொள்ளலாம். அதாவது மஞ்சள் நிறமான தங்கம் குரு கிரகத்தை காட்டுகிறது. தங்கத்தில் இருந்து செய்யப்படும் நகைகள் மற்றும் வெள்ளி சுக்கிரனை குறிக்கிறது. எனவே, அட்சய திருதியை தினத்தன்று தங்கம் மற்றும் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் வாங்க விரும்புபவர்கள் குரு, சுக்கிர ஹோரைகளில் வாங்கலாம்.
என்ன வாங்கலாம்?
👉அட்சய திருதியை நாளில் செல்வ வளம் பெருகி சிறப்பாக வாழ, மங்களப் பொருட்களில் ஏதேனும் ஒன்றை வாங்குவது நல்லது. உப்பு வாங்கினால் பணம் சேரும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் அட்சய திருதியை நாளில் பொன், பொருட்கள், ஆடை ஆபரணங்கள் மட்டுமின்றி உப்பு, தானியங்கள், மளிகைச் சாமான்கள், சோறு வடிக்கும் பாத்திரம், மஞ்சள் வண்ண ஆடை, தெய்வப் படங்கள், கனி வகைகள், சங்கு, சீர்வரிசை சாமான்கள், பூஜையறையில் உபயோகப்படுத்தும் புனிதமான பொருட்கள், அகல்விளக்கு, வெண்கல மணி, எழுதுகோல், லட்சுமி படம், அடுப்பு, பணப்பெட்டி, மணிபர்ஸ், வெல்லம், நெல்லிக்காய், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வசதிக்கேற்ப வாங்கலாம். இவற்றில் ஏதேனும் ஒன்று வாங்கினால் கூட போதுமானது.
என்ன செய்வது?
👉அட்சய திருதியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, புதிய பொருட்களை வாங்குவது இவற்றை விட முக்கியமானது, தானமளிப்பதும், முன்னோர் கடன்களைச் செய்வதும்தான். இல்லாதோருக்கு உங்களால் இயன்ற அளவுக்கு உதவி செய்வதால் தர்மதேவதையின் அருளைப் பெற்று, புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.
👉அட்சய திருதியை நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டு பசு மாட்டுக்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டும். அத்துடன் ஏழை எளியவர்களுக்கு தானதர்மம், அன்னதானம் செய்வதன் மூலம் பெருமாளின் கருணையால் குடும்பத்தில் உள்ள வறுமை, கஷ்டம் விலகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...