Tuesday, April 30, 2019

விஷால், தமிழக அரசுக்கு எதிராக போர்க்கொடி.

விஷால், தமிழக அரசுக்கு எதிராக போர்க்கொடி

விஷால், தமிழக அரசுக்கு எதிராக போர்க்கொடி
தலைவர், விஷால் தலைமையிலான அணியினர், தமிழ் திரைப்பட
தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகித்து வருகின்றனர். இவர்களது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி என். சேகர் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்த நியமனத் தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்துள் ளார்.
தற்போது பதவி வகித்துவருபவர்களின் பதவிகாலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து சங்கத்தின் வரவுசெலவு கணக்குகளை தாக்கல்செய்து, அவற்றுக்கு ஒப்புதல் பெற வருகிற மே 1-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், தேர்தல் தேதி தீர்மானிக்கப்படும்.
இந்த சூழ்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க அரசு அதிகாரி சேகர் என் பவரை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழக அரசின் வணிகவரித்துறை, பதிவுத் துறை இணைந்து மத்திய பதிவுத்துறை அதிகாரி என்.சேகரை தனி அதிகாரியாக எங்கள் சங்கத்துக்கு நியமித்துள்ளது.
தயாரிப்பாளர் சங்க நடவடிக்கைகளில் எந்த விதமான முறைகேடும் நடைபெறாத நிலையில், தனி அதிகாரியை நியமித்தது சட்டவிரோதமாகும். எனவே, இந்த நியம னத்தை ரத்துசெய்யவேண்டும். நியமனத்துக்கு தடை விதிக்கவேண்டும்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று உயர்நீதி மன்ற நீதிபதி K.ரவிச்சந்திரபாபுவிடம் நடிகர் விஷால் தரப்புவக்கீல் கோரிக்கை விடு த்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை நாளை விசாரிப்பதாக கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...