அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று(நவ.,09) தீர்ப்பளிக்கிறது. இது தொடர்பான வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.
தீர்ப்பு வெளியாக உள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதால் அங்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கண்காணிப்பு பணியில் 'ட்ரோன்கள்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வாகனங்களில் செல்வோரை தீவிர பரிசோதனை செய்த பின்பே போலீசார் அனுப்பி வைக்கின்றனர். பாதுகாப்பு பணியில் உள்ளூர் போலீசார் போக துணை ராணுவ படையினர் பயங்கரவாத தடுப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய நிலத்தில் கட்டப்பட்டுள்ள தற்காலிக ராமர் கோவிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இன்று வெளியாக உள்ள தீர்ப்பின் மூலம் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்பது இன்று தெரியவரும்.
No comments:
Post a Comment