Friday, November 8, 2019

காஞ்சி கூட்டுறவு கடையில் ரூ.150 கோடி ஊழல்?

காஞ்சி மாவட்ட கூட்டுறவு பண்டக சாலையின் கீழ், 400 ரேஷன் கடைகள், 5 பண்ணை பசுமை காய்கறிக் கடைகள், 3 பெட்ரோல் பங்க்குகள், 10 சிறிய அங்காடிகள் உள்ளன. இவற்றில், 960 பேர் பணிபுரிகின்றனர். இதில், சோப்பு, பெருங்காயம், டீ துாள் உட்பட மளிகை பொருட்கள், தரமற்ற முறையில் கொள்முதல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர் கூறியதாவது: சோப்பு, டீ-துாள் என, 50க்கும் மேற்பட்ட மளிகை பொருட்கள், வெளிச் சந்தையில் இருந்து, தரமற்றவையாக வாங்கப்பட்டு, நுகர்வோருக்கு ரேஷன் கடைகளில், கட்டாயமாக விற்கப்படுகின்றன. இதற்கு, பில் போடப்படுவதும் இல்லை. இதனால், லட்சக்கணக்கில் அதிகாரிகள் கமிஷன் அடிக்கின்றனர்.

இவற்றை கொள்முதல் செய்வதில், பதிவாளர் விதித்த உத்தரவுகள் பின்பற்றப்படாததுடன், ஊழியர்களுக்கு பணி ஆணை பிறப்பிப்பது, பணி மாற்றம் செய்வது துவங்கி நிர்வாகத்தின் அனைத்து முடிவுகளையும், ஓய்வு பெற்ற, தொழிற்சங்க நிர்வாகி ஒருவரும், தாம்பரம் சரக மேலாளருமே எடுத்து வருகின்றனர். இதனால், பணம் கொடுத்தே, ஊழியர்கள் அனைத்து பலன்களையும் பெற வேண்டி உள்ளது.

இதை அறிந்தும், மாவட்ட மேலாண் இயக்குனரும், பண்டக சாலையின் மாவட்ட தலைவரும், கண்டுகொள்ளாமல் உள்ளனர்.அதனால், நான்கு ஆண்டுகளில், 150 கோடி ரூபாய்க்கு மேல், நிர்வாகத்தில் ஊழல் நடந்துள்ளது. இது குறித்து, கூட்டுறவு சட்டப்பிரிவு, 81ன் படி, விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சிபுரம்,  கூட்டுறவு கடை, கமிஷன், ஊழல்,தரமற்ற முறை, புகார்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...