Friday, November 8, 2019

தொண்டைமானாறு செல்வச் சன்னிதி முருகன் திருக்கோவில்- இலங்கை.

தொண்டைமானாறு செல்வச் சன்னிதி முருகன் திருக்கோவில்- இலங்கை
வீதி உலா வரும் உற்சவர், கோவில் தோற்றம்


















இலங்கையின் ஆறுபடை வீடுகளுள் ஒன்று, வடஇலங்கையின் கதிர்காமமாக போற்றப்படும் தலம், வீரபாகு கால் வைத்த பூமி, ஐராவசு சாப விமோசனம் பெற்ற இடம், சிகண்டி முனிவர் வழிபட்டுப் பேறுபெற்ற ஆலயம், சோழனின் தளபதி தொண்டைமான் கருணாகரன் திருப்பணி செய்த கோவில், மீனவர் அடியார் மருதர் கதிர்காமர் திருப்பணி செய்த திருத்தலம் என பல்வேறு சிறப்புகள் கொண்டதாக திகழ்கிறது, இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள, தொண்டைமானாறு செல்வச் சன்னிதி முருகன் திருக்கோவில்.

‘ஆறு திருப்பதிகண் டாறெழுத்து மன்பினுடன் கூறுமவர் சிந்தை குடிகொண்டோனே’ என்ற குமரகுருபரரின் வாக்கிற்கிணங்க, இலங்கையிலும் முருகப்பெருமானுக்கு ஆறுபடைவீடுகள் அமைந்துள்ளன. கதிரைமலை, உகந்தமலை, மாவிட்டபுரம், கந்தவனம், செல்வச்சன்னிதி, நல்லூர் ஆகிய இந்த ஆறுபடை வீடுகளில் ஒன்றாகத் திகழ்வதுதான் செல்வச் சன்னிதி ஆலயம். தெற்கே கதிர்காமம், வடக்கே செல்வச்சன்னிதி விளங்குவதுடன், இவ்விரு தலங்களின் வழிபாட்டு முறைகளிலும் ஒற்றுமையே காணப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...