தமிழகமெங்கும் பிள்ளையார் கோவில்களுக்கு அடுத்தாக அதிக அளவில் இருப்பது கருப்பசாமி கோவில்கள் -
அதில் எத்துனை சம்பிரதாயங்கள் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது தெரியுமா?
திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி அருகே கோட்டைக் கருப்பசாமி குடிகொண்டிருக்கிறார் -
அவருக்கு வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிடப்படும் -
அன்று கோவிலில் நடக்கும் பூசைகளில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் -
ஆனால், இரவில் நடக்கும் பலி கொடுக்கும் நிகழ்ச்சியிலும், கறி விருந்திலும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் -

இது சம்பிரதாயம் -
அதே ,போல் அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்புவைக் கூட வருடம் 365 நாளும் தரிசனம் செய்ய முடியாது -
வருடத்திற்கு ஒரே ஒரு முறைதான் நடை திறப்பார்கள் பொதுமக்களுக்காக -
வருடத்திற்கு ஒரே ஒரு முறைதான் நடை திறப்பார்கள் பொதுமக்களுக்காக -
அதே போல் திண்டுக்கல் மாவட்டம் தேவதானப்பட்டியில் மஞ்சள் ஆற்றங்கரையில் வீற்றிருக்கும் என்னுடைய குலதெய்வம் மூங்கிலனை ஸ்ரீ காமாக்ஷி அம்மனை யாருமே கருவறை திறந்து தரிசிக்க முடியாது -
மூடிய கதவிற்குத்தான் பூசை நடக்கும் -
மேலும், அங்கே ஒரு சிறப்பு பக்தர்கள் அளிக்கும் நெய் பானைகளில் ஊற்றி வைத்திருப்பார்கள் ஆனால் அதை ஒரு ஈ, எறும்பு கூட அண்டாது -
மூடிய கதவிற்குத்தான் பூசை நடக்கும் -
மேலும், அங்கே ஒரு சிறப்பு பக்தர்கள் அளிக்கும் நெய் பானைகளில் ஊற்றி வைத்திருப்பார்கள் ஆனால் அதை ஒரு ஈ, எறும்பு கூட அண்டாது -
இது போலத்தான் எங்களுடைய ஒவ்வொரு கோவில்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு, ஒவ்வொரு சம்பிரதாயம் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது -
இதில் நுழைந்து -
ஏன் கோட்டைக் கருப்பு கோவில் விருந்தில் பெண்களை அனுமதிக்கக் கூடாது -
இது சம உரிமை இல்லையே -
இது சம உரிமை இல்லையே -
ஏன் பதினெட்டாம் படிக்கருப்பை வருடம் ஒரு முறை தரிசிக்க வேண்டும் -
ஏன் மூங்கிலனை காமாக்ஷியை பூட்டி வைத்திருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்க -
எந்த சட்டத்திற்கும், எந்த நீதிபதிக்கும் உரிமை இல்லை -
தெருவுக்குத் தெரு வீற்றிருக்கும் பிள்ளையாரில் கூட -
சித்தி விநாயகர், புத்தி வியாயகர், கற்பக விநாயகர், பஞ்சமுக விநாயகர் என்று ஆயிரம் விநாயகர்களை வணங்குபவர்கள் நாங்கள் -
சித்தி விநாயகர், புத்தி வியாயகர், கற்பக விநாயகர், பஞ்சமுக விநாயகர் என்று ஆயிரம் விநாயகர்களை வணங்குபவர்கள் நாங்கள் -
ஆனால், ஒவ்வொரு நம்பிக்கைக்கும் பின்னால் பலமான காரணம் இருக்கும் -
அதுவே, எங்கள் இந்து மதம், அது தான் எங்கள் வாழ்வியல் முறை -
ஊர்ந்து செல்லும் பாம்பையும், பல்லியையும் கூட சக உயிராக மதித்து வணங்கும் உயர்வான இந்து மதம் -
எங்கள் நம்பிக்கைகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதை எதிர்க்கிறோம் -
உண்மையில் நாங்கள் மாதவிலக்கை தீட்டு என்று கூறுவது கூட -
அவர்களுக்குத் தேவையான ஓய்வை அளிப்பதற்கான ஒரு நுட்பமான திட்டம்தான் -
அவர்களுக்குத் தேவையான ஓய்வை அளிப்பதற்கான ஒரு நுட்பமான திட்டம்தான் -
எண்ணைக் குளியல் செய்த அன்று தம்பதியர் கூடினால் தரித்திரம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர் -
அதன் அறிவியல் காரணம் சிலருக்கு எண்ணைக்குளியல் எடுத்தபின் உடலுறவு கொண்டால் ஜன்னி வரலாம், அதைத் தடுப்பதற்காகச் சொல்லப்பட்டதுதான் அந்தப் பழமொழி -
இதை அர்த்தமுள்ள இந்துமதத்தில் கண்ணதாசன் விளக்கி இருப்பார் -
அது போலத்தான் சபரிமலையில் பெண்களுக்கு விலக்களித்ததும் -
இதை நான் மூலாதாரம் கீழே போகிறது, கீழே போகிறது என்றெல்லாம் எழுதினால் நிச்சமாகப் புரியாது -
ஆனால், எங்கள் ஐயப்பன் எங்கள் பெண்களை மதிப்பவன், தன்னை விரும்பிய மாளிகைபுரத்தம்மனுக்கே தன் சந்நிதியில் இடம் கொடுத்தவன் -
சபரிமலை தவிர பாரதமெங்கும் இருக்கும் ஐயப்பன் கோவில்களுக்கு எங்கள் பெண்கள் நிதமும் சென்று ஐயனை தரிசித்துதான் வருகிறார்கள் -
இதிலிருந்தே அந்த தீட்டு, பெண்களுக்கு அவமரியாதை போன்ற பொய்கள் அடிபட்டு விடுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் -
சென்ற பதிவில் நான் கூறியதைப் போல நடைமுறைச் சிக்கல்கள், சில அறிவியல் காரணங்கள் -
மேலும், முக்கியமாக நம் சம்பிரதாயங்கள்-
சென்ற பதிவில் நான் கூறியதைப் போல நடைமுறைச் சிக்கல்கள், சில அறிவியல் காரணங்கள் -
மேலும், முக்கியமாக நம் சம்பிரதாயங்கள்-
இவற்றை சட்டத்தின் கண்கொண்டோ, பகுத்தறிவுக்கண்ணாடியுடனோ பார்க்க வேண்டாம் -
ஏனென்றால், -
"அர்த்தமுள்ள இந்து மதம் "எங்களுடையது -
No comments:
Post a Comment