Saturday, November 9, 2019

'மிசா' கைது விவகாரம்: ஸ்டாலினுக்கு எதிராக வலைதளங்களில் கேலி, கிண்டல்!

சமீபத்தில், தனியார், 'டிவி' நேர்காணலில் பங்கேற்ற, முன்னாள் தி.மு.க., அமைச்சர் பொன்முடியிடம், 'ஸ்டாலின், மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டாரா' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, நீதிபதி ஷா அறிக்கையை, தான் படிக்கவில்லை என்றும், அது குறித்து தனக்கு தெரியாது என்றும், பொன்முடி பதிலளித்தார். 'வரும்... ஆனால் வராது' என்ற, நடிகர் வடிவேலு காமெடி போல, 'மிசா காலத்தில், ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்; ஆனால், மிசா சட்டத்தில் கைது செய்யவில்லை' என, காமெடியாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

'ஸ்டாலின், மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை. அவர், ஜனநாயகத்திற்காக குரல் கொடுத்ததற்காக அடித்தனர் என, கூறுவது தவறு. 'அவருடைய தனிப்பட்ட, தவறான செயல்களுக்காக அடித்திருக்கலாம்' என, அமைச்சர் பாண்டியராஜன் கருத்து தெரிவித்தார். இதற்கு, தி.மு.க., தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 'தியாகம் என்றாலே என்னவென்றே அறியாத, ஒரு அரசியல் வியாபாரி பாண்டியராஜன்' என, தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்தார்.

அமைச்சர் பாண்டியராஜன், தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, அவரது உருவப்பொம்மையை, தி.மு.க.,வினர் எரித்தனர்; மாவட்ட வாரியாக போராட் டங்களையும் நடத்தினர். சென்னை மாநகராட்சியின், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் அறிக்கையில், 'அவசர நிலை காலத்தில், ஸ்டாலினும் எல்லா தலைவர்களையும் போல கைது செய்யப்பட்டார். அவரை சிறை காவலர்கள் கடுமையாக தாக்கியபோது, முன்னாள் மேயர் சிட்டிபாபு, ஸ்டாலினை பாதுகாத்தார். 'இந்த தாக்குதலால் தான், சிட்டிபாபு உடல்நலம் பாதிக்கப்பட்டு, மரணம் அடைந்தார். ஆனால், சிட்டிபாபு குடும்பத்திற்கு, தி.மு.க., என்ன செய்தது' ன, கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் வலம் வரும் பதிவுகள்:
* மிசா கைதியா என்று ஆதாரம் கேட்டோம். அதற்கு, நெஞ்சுக்கு நீதி போய் படியுங்கள்; இஸ்மாயில் கமிஷன் அறிக்கை பாருங்கள் என, எதையாவது பிதற்ற வேண்டாம். ஸ்டாலின், மிசா சட்டத்தின் கீழ் தான் கைதானார் என்பதற்கான ஆதாரத்தை, நீங்களே வெளியிடுங்கள்

* ஆதாரத்தை கேட்டால், இவர்கள் எழுதின புத்தகத்தை, இவர்களே துாக்கிட்டு வருவர். வாங்காத விருதுக்கும் புத்தகம் போட்டு, விற்ற கதை மாதிரி

* திரும்ப திரும்ப சொல்வோம்... ஸ்டாலின், மிசா சட்டத்தில் கைதாக வில்லை; கிசமுசாவில் தான் கைதானார்

* மிசாவில் கைதாகி, சிறையில் கொடுமைகள் அனுபவித்தார் ஸ்டாலின் என, ஊரை ஏமாற்றியது எல்லாம் பொய் தானா? இவ்வாறு பல பதிவுகள் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...