அதே சாதியில் ஒருவர் கைவண்டியில் காய்கறி, பழம் விற்றபடி கைவலிக்கத் தள்ளி வியாபாரம் செய்வார்!
அதே சாதியில் இன்னொருவர் மூன்றாவது தலைமுறை 'தாத்தா அரசு அதிகாரி ; பாட்டி பள்ளி ஆசிரியை' - 'அப்பா கல்லூரிப் பேராசிரியர்; அம்மா வங்கி ஊழியர்' - மகன் தன்னை Backward என்று கூறி ரிசர்வேஷனில் நுழைவான்!
அப்போது குப்புறக் கவிழாத 'சமூக நீதி'....
அதே சாதிதான்! ஒருமனிதன் மேட்டாங்காட்டைப் பார்த்தபடி பொய்த்துப் போன மழையையும், கருகிப் போன பயிரையும் எண்ணிக் கண்ணீர்விட்டபடி உட்கார்ந்திருப்பான்!
அதே சாதியில் இன்னொருவன் நான்காம் தலைமுறை... அம்மா - அப்பா இருவரும் கல்லூரிப் பேராசிரியர்கள் / அரசு/ வங்கி ஊழியர்கள் அதற்கு முந்தைய இரண்டு தலைமுறைகள் ஆரம்பப் பள்ளி / உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்.... ஆனால் இப்பவும் இவன் Most Backward caste பட்டியலில் உள்ளே வருவான்!
அப்போது குப்புற விழாத 'சமூக நீதி'....
காலில் செருப்பு கூட இல்லாமல் அரசு கொடுத்த இலவச சைக்கிளை பெடல் பண்ணியபடி பள்ளி செல்லும் சிறுமிகள் - அந்த சைக்கிள் மட்டும் அரசாங்கம் தராவிட்டால், சீருடையும் புத்தகமும் அரசு இலவசமாகத் தராவிட்டால், அந்தப் பெண் குழந்தையின் படிப்பு நிறுத்தப்படும்: பள்ளி முடிந்து வந்ததும் அந்தச் சிறுமியும் அம்மாவுக்குத் துணையாக சிட்டம் சுற்றுவாள்; தறி ஓட்டுவாள்!...
அதே சாதிதான்! வீட்டில் ஒன்றுக்கு இரண்டாக டூ-வீலர், படகு போன்ற கார், பங்களா, பிசினஸில் கோடிக் கணக்கில் வருமானம்... இதுபோக ஒரு 'சைடு இன்கம்' மாதிரி ஒரு சில வீடுகளில் அம்மாவுக்கு ஏதோ ஒரு அரசு உத்யோகம்... அவர்கள் வீட்டுப் பெண்ணும் Backward!... சலுகை பெறுவாள்!
அப்போது தலைகுப்புறக் கவிழாத 'சமூக நீதி'....
காஜா அடிப்பது, பட்டன் தைப்பது, இஸ்திரி போடுவது... இப்படி முதுகு ஒடிய வேலை பார்த்துப் படிக்க வைக்கும் தாயின் மகன்!
அதே சாதிதான்! காண்ட்ராக்டர்! கோடிக்கணக்கில் ஷேர்! இன்னோவா கார்! கிரானைட்டில் பளபளக்கும் வீடு... அவர் மகனும் Backward என்று தையல் காரப் பெண்மணி மகனோடு போட்டி போடுவான்!
அப்போது தலை குப்புறக் கவிழாத 'சமூக நீதி'....
அப்பளம் இட்டுப் பிழைக்கும் அய்யராத்து மாமி பெண்ணுக்கும், அடுப்பங்கரையில் வியர்வையில் குளிக்கும் சமையல் கார பிராமணனின் மகனுக்கும், மற்றவர்களுடைய 'கோட்டா'வில் கையே வைக்காமல் தனியாகத் துண்டாக...
அதுவும் 'பொதுப் பிரிவில்' உள்ள எல்லா ஏழைகளுக்கும் என பத்து சதவீதம் தந்தால்....
நான் மேலே சொன்ன உதாரணங்களில் கவிழாத அந்த 'சமூக நீதி' இப்போது அப்படியே தலை குப்புறக் கவிழ்ந்து 'டமால்' என்று உடைந்துவிடும்!
இதுதான் திராவிடியாள்களின் வெறுப்புப் பிரசாரம்! இதுதான் பொருளாதார ஏற்றத்தாழ்வு, வர்க்க பேதம் இவற்றால் எல்லா சாதிகளிலும் ஏழைகளும் உள்ளனர் என்பதை உணர மறுக்கும், போலி மார்க்சீயர்களின் புரட்டு வாதம்!
No comments:
Post a Comment