Monday, February 24, 2020

ஒரு லாரி நிறைய பழைய துணி...

சேகரித்து சுத்தம் செய்த இடம் திருச்சி காவரி அம்மா மண்டபம்..
இது ஒரு பகுதி மட்டும்...
அங்கே குளிக்க வந்தவர்கள் பரிகாரம் என்ற பெயரில் விட்டு சென்ற துணிகள் தான் இவை..
வெட்கப்படனும் நாம்..
நம் முன்னோர்கள் நம்மிடம் விட்டு சென்ற நீர்நிலைகளை எந்த அளவு அசுத்தமாக வைத்துள்ளோம் என்பதை நினைத்து..
இது காவிரி மட்டுமல்ல... தமிழகத்தில் எல்லா நீர்நிலைகளிலும் நடக்கின்றது..
தண்ணீரை கண்டாலே பழையதை அவுத்து போட்டு சென்றால் பாவம் குறையும் என யார் கற்று தந்தது..?
வஸ்திர தானம் தான் செய்ய சொல்லி இருக்கிறார்களே தவிர, பழையதை அவிழ்த்து விட்டு நீர்நிலைகளை மாசுபடுத்த சொல்லவில்லை...
தண்ணீரை நாம் தாயை போல வணங்குகின்றோம்..அந்த தாய்க்கு நீங்க செய்யும் மரியாதை இந்த பழை துணி போடுவது தானா..?
நீங்கள் செய்வது பாவம்...உங்களை மட்டுமல்ல உங்கள் வருங்கால சந்ததிக்கும் சேர்த்து பாவத்தை சேர்க்குறீங்களே..
அய்யா ஜோதிடர்களே...
நீர்நிலைகள் மாசு தடுப்பது என்பது உங்களுக்கு பெரும்பங்கு உண்டு...
உங்களிடம் வருபவர்களிடம் தண்ணீரில் துணியை கழட்டி விடாதீங்க என சொல்லுங்க...
அதே போல நீர்நிலைகளில் கிடக்கும் துணிகளை எடுத்து சுத்தம் செய்வது பெரும் புண்ணியம் என சொல்லுங்க..
வேட்டி சேலையை கழட்டி விட்னா உங்க குடும்பத்தில் எவனுக்கும் எவளுக்கும் கல்யாணம் ஆகாது...கடன் தொல்லை வரும்...
அட உள்ளாடை எல்லாமா கழட்டி போடுவீங்க...உள்ளாடைகளை கழட்டி ஆத்துல போட்டா ஆண்மைகுறைவு வரும் என சொல்லுங்க....
வேற எவன் சொன்னாலும் கேட்க மாட்டாங்க...
தமிழகத்தில் ஜோதிடர்கள் பேச்ச மட்டும் தான் கேக்குறாங்க மக்கள்.....
எனவே ஜோதிடர்களே நீர்நிலைகளை காப்பாற்றுவதில் உங்கள் பங்கு முக்கியம்..
இதில் அடுத்த கொடுமை கேவலம் ..
நண்பர்கள் காவிரியை சுத்தப்படுத்தும் போது துணிகளுக்கு இணையாக குப்பையாக கிடைத்தது பெண்கள் உபயோகபடுத்தும் நாப்கின்..குழந்தைகளுக்கு பயன்படுத்தும் டயப்பர் போன்றவை இருந்தால் கூட நியாயம்....ஆனால் காவிரியில் நாப்கின்? கொடுமை...
இந்த காவிரி சுத்தப்படுத்தும் காரியத்தில் இதையும் முகம் சுழிக்காமல் அப்புறபடுத்தி தங்களை ஈடுபடுத்தி கொண்ட தமிழ்நாடு வீர விவேகானந்த இளைஞர் பேரவை  அவர்களுக்கும் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...