Sunday, February 23, 2020

'நேரத்தின் மீது.

யானை மீது செல்லும்போது, நாய் கடிக்ககூடும் என்று முன்பே தீர்மானித்து விட்டால், என்ன செய்வீர்கள்? கீழேயே பார்த்துக் கொண்டு போவீர்கள்.
அப்படிப் பார்வையை நேராக வைக்காமல், கீழே நோக்கி வைத்து இருந்தால், எதிர்பாராமல், அந்த உயரத்தில் ஏதோ ஒரு மரக்கிளை உங்களை மோதலாம்:
கீழே தூக்கி எறியப்படலாம்,அங்கே ஒரு நாய் மீது நீங்கள் விழலாம். அது மிரண்டு போய் உங்களை கடிக்கலாம்.
இந்த சிக்கலான சங்கிலித் தொடர் நிகழ்வுகளை விதி,. தலையெழுத்து,கர்மா என்று சொல்லி தப்பிக்கப் பார்க்காதீர்கள்.
மரக்கிளை உங்கள் மீது வந்து மோதவில்லை. நீங்கள் தான் ஒழுங்காக கவனமில்லாமல், மரக்கிளையின் மீது சென்று மோதி.நாய் மீது விழுந்தீர்கள்.
நீங்கள் அறிந்து செய்தாலும் அறியாமல் செய்தாலும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின் விளைவு இருக்கத்தான் செய்கிறது..
உங்கள் கவனம் இன்மையால் நேர்ந்த நிகழ்வை,நேரம் சரியில்லை ,எல்லாம் விதி.கர்மா என்று இல்லாத வற்றின் மீது பழியை போட்டு தப்பிக்க பார்க்கிறீர்கள்..
உங்களை நாய் கடிக்க வில்லை. கவனமற்ற உங்கள் முட்டாள்தனம்தான் நாய்கடியில் கொண்டு போய் உங்களை விட்டு உள்ளது..
உங்களை தவறை ஏற்க மனமில்லாமல், நேரத்தின் மீது பழி போடுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்
.
அனுபவத்தில் மோசமான நேரம், நல்ல நேரம் என்பதே கிடையாது. உழைக்காமல் வெறுமனே இருப்பதுதான் கெட்ட நேரம்...
நம் வாழ்வில் ஒவ்வொரு கணமும் அற்புதமாகத்தான் இருக்கிறது,அதை மோசமாக்கிக் கொள்வதும், நன்றாக உருவாக்கிக் கொள்வதும் நம் எண்ணத்திலும், செயலிலும்தான் உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...