Friday, February 28, 2020

தாயுமானவருக்கு திருவருள் புரிந்த திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி.

திருச்சிராப்பள்ளியை ஆண்ட விஜய ரங்க சொக்கநாதரிடம் கணக்கு எழுதும் பணியை சிறப்பாக, நேர்மையாக தனது தந்தைக்கு பிறகு தாயுமானவர் சிறப்பாக செய்து வந்ததால் வரி ஏய்ப்பு நிகழாமல் அரசுக்கு நல்ல வருவாய் வந்தது. அதோடு இறை தேடலும், பக்தியும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினார். இதனால் மந்திரி முதல் தளவாய் வரை அனைவரும் வரி சுருட்டமுடியாமல் போய், அவர் மேல் கடும் பொறாமை கொண்டனர். காஷ்மீரத்தில் இருந்து மான்குட்டி போல் மெத்தென்று சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய போர்வை வியாபாரத்துக்காக மன்னர் முன் கொண்டு வரப்பட்டது, அசந்து போன மன்னர் மற்ற மன்னர்களுக்கு பரிசளிக்க அதை வாங்கிக்கொண்டார், அதோடு தாயுமானவரின் சிறப்பான பணியை பாராட்டி பலரது முன்னிலையில் அதில் ஒரு போர்வையை போர்த்தி கௌரவப்படுத்தினார். ஏற்கனவே பொறாமையில் பொசுங்கியவர்கள் வயிறு எறிந்தனர். அன்று வெள்ளிக்கிழமை, திருவானைக்காவல் சென்று அகிலாண்டேஸ்வரியை தரிசனம் செய்ய ராணி விரும்பினார் எனவே, கூடவே தாயுமானவரும் புறப்பட்டார். போகிற வழியில் மலைக்கோட்டை மாணிக்க விநாயகரை தரிசித்து செல்லும் வழியில் கோயில் வாசலில் கடுமையான ஜுரத்துடனும் ஒரு வயசான பாட்டி படுத்து இருந்தாள், சிக்கு பிடித்த தலையோடும், முதுகில் மண்ணோடும், வாயில் எச்சில் ஒழுக, குளிரில் நடுங்கி கொண்டே கதறினாள். கோயிலில் தரிசனம் முடித்து அவ்வழியே வந்த மன்னரை பார்த்து ஏதேனும் உதவி செய்யுமாறு அழுதாள். மந்திரியும் தளவாயும் அவளை தள்ளி அப்புறப்படுத்தினர், மன்னரும் கடிந்து கொள்ள, உடன் வந்த தாயுமானவருக்கோ, அவள் மீது கருணை பிறந்தது, எல்லா மனிதரும் இறைவனின் ரூபமே, அன்பே சிவம், ஆபத்தில் உதவி செய்ய்வதே இறை தொண்டு என்பதை உணர்ந்த அவர் தனக்கு மன்னர் போர்த்திய அந்த விலை உயர்ந்த சால்வையை கிழவிக்கு போத்தினார். தாயே இங்கு எப்போது வந்தீர்கள் உள்ள சென்று ஓய்வு எடுங்கள், மாணிக்க விநாயகர் சன்னதியில் இருந்து பானகம் கொண்டு வந்து ஊட்டினார், சளி துடைத்தார், முகத்தை துடைத்தார், பானகமும் போர்வையும் கிடைத்ததால் கிழவி தெம்பு பெற்றாள். மனதார நன்றி சொன்னாள். இதுவல்லவே கருணை என்று அவர் நெஞ்சில் தட்டி ஆசிர்வதித்தாள். மன்னர் கோபமாக கோயிலுக்கு செல்வதை காட்டினாள். உடன் வந்தோர் மன்னா! நாங்களெல்லாம் ஒரு போர்வை உங்கள் மூலம் கிடைக்காதா என காத்திருக்க, ஒரு பிச்சைக்காரிக்கு அதை கொடுத்து உங்களை அவமதித்துவிட்டானே, அவனுக்கு சவுக்கு அடி கொடுங்கள், சிறையில் தள்ளுங்கள் என ஏற்றி விட்டனர். மன்னரும் கோபம் கொண்டார் கோயிலுக்கு உடன் வர வேண்டாம் என கூறி அவர் தனியே திருவானைக்காவல் சென்றார். வந்து கவனித்து கொள்கிறேன் என திட்டினார். உச்சிக்காலம் அபிஷேகம் நிறைவுற்று கதவு சார்த்தப்பட்டு இருந்தது, மன்னர் வந்ததும் ஒவ்வொரு கதவாக திறந்தனர். கருவறை கதவு திறக்கப்பட்டது. உடன் வந்த அனைவரும் அதிர்ந்தனர், ராணி ஓ வென்று அலறினார். ஒற்றை விளக்கு வெளிச்சத்தில் கம்பீரமாக காட்சி தரும் அகிலாண்டேஸ்வரி மேல் அந்த சிவப்பு காஷ்மீரத்து போர்வை போர்த்தப்பட்டு இருந்தது. இங்கு போர்வை சார்த்தும் வழக்கம் இல்லையே என்ன மன்னர் கேட்க அர்ச்சகர்கள் இல்லை என கூறி அதிர்ந்தனர். சிறுது நேரத்தில் அந்த கிழவியின் முகம் அம்பாள் திருமுகத்தில் தெரிந்து மறைந்தது, அப்படியானால் வந்தது அகிலாண்டேஸ்வரியா! என மன்னர் அதிர்ந்து கூற நானே! என கருவறையில் அம்மை தன் சிம்மக்குரலில் உரைத்தாள். அனைவரும் மெய்சிலிர்த்தனர், அழுது தொழுதனர், தாயுமானவர் பெருமை உணர்ந்தனர். போர்வையை எடுத்து கொண்டு அர்ச்சகர்கள் மன்னரிடம் தர அதில் அங்கு தாயுமானவர் தந்த பானகம் ஈரமும், அதன் வாசனையும் அடித்தது.. ஆஹா இது மகா பிரசாதம் என மன்னர் கண்ணில் ஒற்றி கொண்டார்.. தாயுமானவரிடம் மன்னிப்பு கேட்டார். அவரது பக்தியை அனைவரும் உணர்ந்தனர். அதன் பிறகு அவர் மிக உயர்ந்த ஞானியாக விளங்கியதை நம் அறிந்ததே ஆகும்.. இறை எப்படியும் வரும், எந்த ரூபத்திலும் வரும், எப்படியும் ஆட்கொள்ளும், பார்க்கும் இடம் எங்கும் அந்த சக்தியாக பார்க்கும் பாவம் வந்தால் தாயுமானவரை போல நமக்கும் அந்த பாக்யம் கிட்டும்... நவராத்திரி காலங்களில் யார் வந்தாலும் அவருக்கு தாம்பூலம், குங்குமம் கொடுப்பது கூட இதனால் தான். அம்பாள் என்ன! எப்போதும் பாசாங்குசம் கரும்பு வில்லோடா வருவாள்.. எப்படியும் வருவாள்.. அகிலாண்டேஸ்வரி.. நாம் தான் உணர்ந்து பணிவிடை செய்து பாக்யம் பெற வேண்டும். ( ஒரு அம்பாள் உபாசகர் வீடு கொலுவிற்கு இப்படிதான் தெத்து பல்லோடும், கோரமாகவும் ஒரு பெண் வந்தாள், அவளை எல்லாரும் முகம் சுளித்தனர், ஒரு ஓரமாக போய் உட்கார் என்றனர் அழுதே கொண்டே அமர்ந்து இருந்து பிரசாதம் கூட பெறாமல் போய்விட்டார். அன்று அவரது மகளுக்கு கடுமையான காய்ச்சல், என்ன செய்வது என்று தெரியாமல் காளி சஹஸ்ரநாமம் படித்து விபத்து பூசி தூங்க கனவில் காளி தேவி கூறினாள், உன் வீடு கொலுவிற்கு வந்தால் ஓரமாக தான் உட்கார சொல்வாயா.. தாம்பூலம் கூட தரமாட்டாயா! காளியாகிய நான் தெத்து பல்லோடும், கருமையோடும் தானே இருப்பேன்! என கூறி மறைந்த பின்னர் தான் தெரிந்தது வந்தது சாஃஷாத் அம்பாள் என்று அம்பிகையை அவமதித்த பாவத்தால் குழந்தைக்கு காய்ச்சலும் வந்தது..பின் குணம் ஆனது.. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் கொலுவிற்கு பார்க்கிறார் அவள் வருவாள் என்று....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...