Tuesday, February 25, 2020

தமிழக_காவல்துறையின்_சார்பாக.

(படிச்சிட்டு பச்சை சிவப்பு கருப்பு வெள்ளை மஞ்ச னு எல்லாத் தமிழனும் ஷேர் செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப் படுகிறது)
1) ஆணோ, பெண்ணோ முகநூலில் தேவை இல்லாமல் குடும்பத்தினரின் புகைப்படங்களை பதிவிட வேண்டாம்.
2) தெரியாத நபர்களின் புகைப்படத்திற்கு Like, Comment, Share பண்ண வேண்டாம்.
3) ஆணோ, பெண்ணோ தெரியாத நபரிடம் தேவை இல்லாமல் சாட் செய்ய வேண்டாம். பிரச்சினையின் ஆரம்பமே இங்குதான்.
4) யாரை நம்பியும் புகைப்படத்தை அனுப்ப வேண்டாம். யாரிடமும் நீங்கள் புகைப்படத்தை கேட்கவும் வேண்டாம்.
5) நீங்கள் புகைப்படம் அனுப்பும் நபர் உங்கள் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தாலும், அவரது கவன குறைவின் காரணமாக அவரிடம் இருந்து உங்கள் புகைப்படம் கயவர்கள் கையில் செல்ல வாய்ப்பு உண்டு என்பதனை மறந்து விட வேண்டாம்.
6) யாரும் உங்களை மிரட்டினால் உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் தெரியப் படுத்துங்கள்.
7) ஆண்கள், பெண்கள் பெயரில் போலியாக ID உருவாக்கி, ஆண்களையும், பெண்களையும் ஏமாற்றலாம்.
8) முகநூலில் உங்கள் தொலைபேசி எண், மின் அஞ்சல், பிறந்த தேதி மற்றும் சொந்த ஊர், படித்த கல்லூரி போன்ற தகவல்களை பிறர் பார்ப்பதை போதுமான வரை தவிர்க்கவும்.
9) சமூக வலைத்தளங்களில் உறவு முறைகளை வைத்து தெரியாதவரிடம் பழகுவதை கூடுமான வரை தவிருங்கள். எங்கும் ஒரு இடை வெளி வைத்து கொள்ளுங்கள்.
10) தெரியாதவரிடம், உங்களது அந்தரங்க விஷயங்களை, குடும்ப பிரச்சினைகளை கூறாதீர்கள், அதே போல் அவர்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்யாதீர்கள்.
11) ஆபாச புகைப்படங்களை கொண்ட இணைப்புகள் வந்தால் அதனுள் போக வேண்டாம். அவ்வாறு சென்றால் அந்த இணைப்பு உங்களின் நண்பர்களுக்கு உங்கள் பெயரில் சென்று உங்களின் நன் மதிப்பு கெடும்.
12) உங்கள் நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களின் பெயரில் தேவை இல்லாத பதிவோ அல்லது செய்தியோ வந்தால் அவரிடம் உறுதி செய்து கொள்ளுங்கள்.
13) இத்தகைய தொழில் நுட்பங்களை உங்களின் முன்னேற்றத்திற்கு மட்டும் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
14) Facebook ,what's app Hack பண்ணுவது மிக மிக எளிது. உங்க mobile நீங்க lock பண்ணிருந்தாலும் hack பண்ணலாம்.
15) free recharge னு# லிங்க் வந்தால் அதில் போகாதீர்கள் சுலபமாக உங்களுடைய அனைத்து டாட்டா,புகைப்படங்கள்அவர்களுக்கு போய்விடும்.
16) உங்க mobile memory space இருந்தும் நீங்க 3g,4g network .இருந்தும் உங்க மொபைல் டக்குனு சூடு ஆனால்,ஹாங் ஆனாலோ உங்க தரவுகளை யாரோ திருடுறாங்கனு அர்த்தம். உடனே mobile data off பண்ணிட்டு சிம் கார்டை கழற்றி விடுங்கள்.
17) உங்கள் போன் ரிப்பேர் என்றால் அந்தரங்க போட்டோ இருந்தால்,இதற்கு முன் எடுத்து அழித்திருந்தாலும் தயவு செய்து ரிப்பேர்க்கு கொடுக்க வேண்டாம் போனால் போகட்டும் என்று விட்டு விடுங்கள் .அழித்த தகவல்களை திரும்ப பெறலாம்.
18) தனியார் பிரௌசிங் சென்டர்களில் உங்களது முக நூலையோ, மின் அஞ்சலையோ பயன்படுத்தினாலோ, அல்லது உங்கள் புகைப்படங்கள், பயண சீட்டுகள் மற்றும் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்தாலோ அதனை அந்த கணினியில் இருந்து நீக்கி விட்டோமா என்பதனை நன்கு உறுதி செய்து கொண்டு வெளியில் வாருங்கள்.
19) படிப்பு, போட்டி தேர்வு சம்பந்தமாக ஏதேனும் குழுவில் இருந்தால், அந்த வேலையை மட்டும் பாருங்கள், தேவை இல்லாத விஷயங்களை தவிருங்கள்.
20) மேற்கண்டவாறு நீங்கள் நடந்தால், சில நல்லவர்களை விட்டு நீங்கள் விலகி செல்லலாம், பரவாயில்லை. ஆனால் கண்டிப்பாக தீயவர்களிடம் நெருங்க மாட்டீர்கள்.
முதலில் நமது பாதுகாப்பு நமது கையில் என்பதை உணருங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...