Sunday, February 23, 2020

தென்னாடுடைய சிவனே போற்றி! அப்படின்னா வடநாட்டு சிவன்?

ஏன் அப்படிச் சொல்கிறார்கள்.
இதுதான் கதை.
தென்னாட்டு சிவன்தான் அசல்.
வடநாட்டு சிவன் அப்படியல்ல.ஏனெனில் வடநாட்டு சிவன் ருத்திரனாக மட்டுமே பாவிக்கப்படுகிறார். இது இங்குள்ள சைவமரபு.
தென்னாட்டின் முக்கிய சிவன் கோவில்கள் அனைத்தும் ஆகம விதிப்படி கட்டப்பட்டவை. வடநாட்டில் அப்படி அல்ல.இங்கு கோவில் கருவறையில் லிங்கத்தை தொட்டு வழிபட உரிமையில்லை. வடநாட்டில் தொட்டு வழிபடலாம். காசியில் உள்ள சிவன் கோவில் உட்பட.
அதற்காக அங்கு தீண்டாமை இல்லை
என்பது அர்த்தமல்ல.சிவனே அங்கு தீண்டாதவர்.ஏனெனில் படைப்புத் தொழிலை பிரம்மாவும், காக்கும் தொழிலை விஷ்ணுவும், அழிக்கும் தொழிலை சிவனும் செய்வதாக
கூறுவது வடநாட்டு மரபு.
தென்னாட்டில் எல்லாத்தொழிலையும் (முத்தொழில்) சிவனே செய்கிறார் என்று நம்புவது தென்னாட்டு சைவ சித்தாந்த மரபு. இங்கு படைத்தல்,காத்தல்,அழித்தல் போக மேலும் இரண்டு தொழிலை சிவன் செய்கிறார். அது மறைத்தல், அருளல். எனவே தென்னாட்டு சிவன் ஐந்தொழில் செய்பவராக இங்கு நிலைநிறுத்தப் பட்டுள்ளார்.
இந்த ஐந்தொழிலை ஆற்றுவதை விளக்குவதுதான் சிதம்பரம் கோவில் நடராஜர் வடிவம். நடனத்தின் அரசனாக சிவனை பார்ப்பது தென்னாட்டில் மட்டுமே.
எனவே தென்னாடுடைய சிவனே போற்றி!
ஓம் நமசிவாய!...!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...