Saturday, February 22, 2020

ஏன் இந்த தாமதம்.??

தேசிய அளவில் பா.ஜ.,வின் உட்கட்சி தேர்தல் சமீபத்தில் நடந்தது. மத்திய அமைச்சராக அமித்ஷா பதவியேற்ற நிலையில், கட்சியின் புதிய தலைவராக ஜெய பிரகாஷ் நட்டா தேர்வானார். தவிர கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ., சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வாகினர். சமீபத்தில் கேரளளாவில் கூட புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், தமிழகத்தில் இதுவரை தலைவர் யார் என்பதை மத்திய பா.ஜ., மர்மமாகவே வைத்துள்ளது. தலைவர் பதவியிலிருந்து தமிழிசை விலகி நிலையில் அவரது இடத்தில் இதுவரை யாரையும் நியமிக்காதது புரியாத புதிராகவே இருக்கிறது. எச். ராஜா தொடங்கி கல்யாணராமன் வரை இவர்தான் பா.ஜ., புதிய தலைவர் என்ற செய்தி வெளிவந்துவிட்டது. ஆனால், எதுவுமே உறுதி செய்யப்படவில்லை.
தமிழகத்தில் தலைவர் பதவி காலியாக இருக்க பல காரணங்கள் சொல்லப்படுகிறது. முக்கியமாக சில மூத்த தலைவர்கள் மீது மேலிடம் கோபத்தில் இருக்கிறது. பலர் திமுகவின் ஏஜென்டாக இருப்பதும் கோபத்தை அதிகரித்துள்ளது. முன்னணி தலைவர்கள் சென்னை வந்து, தமிழக நிர்வாகிகளிடம் சில விஷயங்களை சொன்னால் அடுத்த நிமிடம் அது திமுக தலைமைக்கு தெரிந்து விடுகிறது. இந்த அனுபவம் அமித்ஷா அவர்களுக்கே நடந்துள்ளதாக டில்லி தரப்பில் கூறப்படுகிறது.
தலைவராக எச். ராஜாவை நியமிக்க மத்தியில் சிலர் விரும்புகின்றனர். திமுகவுக்கு சரியான பதிலடி கொடுப்பவர் இவர்தான் என சொல்லப்படுகிறது. ஆனால், எச், ராஜாவை தேசிய அளவில் பயன்படுத்திக் கொள்ளவே நட்டா விரும்புகிறார். நல்ல பேச்சாளர். சொல்ல வருவதை மிகச் சரியாக சரியான நேரத்தில் சொல்லக்கூடியவர் ராஜா என டில்லி தலைமையில் பேசப்படுகிறது. தவிர கேரள மாநிலத்தின் ஆலோகராக எச். ராஜா சிறப்பாக செயல்படுவதால் அவரை தமிழக தலைவராக நியமித்து வீண் செய்ய வேண்டாம் என்ற கருத்தும் நிலவுகிறது. தவிர, எச். ராஜா வரக்கூடாது என்பதில் சில தமிழக தலைவர்கள் வேலை செய்வதையும் பா.ஜ., தலைமை கவனித்து வருகிறது.
பா.ஜ., தலைவர் நட்டாவை பொறுத்தவரை ஒரு இளைஞர் அல்லது நல்ல அனுபவம் மிக்க ஓருவரைத்தான் தமிழக தலைவராக நியமிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. நெல்லை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் இருந்து ஒருவர்தான் தலைராக தேர்வு செய்யப்பட உள்ளார் என்பது மட்டும் உறுதி. இந்த முறை பெண்களுக்கு தலைவர் பதவி கிடையாது என சொல்வதை மேலிடம் திட்டவட்டமாக மறுக்கிறது. அப்படி ஒரு எண்ணம் இல்லை. பெண்களில் ஒருசிலர் சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்கள் பெயரும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பில்லை என்பது 100 சதவீதம் உறுதி என்ற தகவலும் கிடைத்துள்ளது.
தலைவராக தேர்வு செய்யப்படுபவர் திராவிட சிந்தனைகளுக்கு எதிரானவராக இருக்க வேண்டும். சக கூட்டணி தலைவர்களை அனுசரித்து போக வேண்டும். கட்சி மீதான விமர்சனங்களுக்கு உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும். தவிர மத்திய அரசின் திட்டங்கள் குறித்து நன்கு தெரிந்தவராக இருக்க வேண்டும் என்பதையே தலைமை எதிர்பார்க்கிறது. இப்படி பார்த்தால் ஒருசிலரே இதில் தேர்ச்சி பெறுவார்கள். அவர்கள் யார் எனபதை தொண்டர்கள் எளிதாக கணித்துவிடலாம்.
டாக்டர் கிருஷ்ணசாமி, ரஜினிகாந்த் போன்றவர்களை எதிர்பார்த்து மத்திய தலைமை இல்லை. அதே நேரம் இந்த இருவர் மீதும் மத்திய பா.ஜ., நல்ல மதிப்பு வைத்துள்ளது, அதோடு தலைமை இல்லாமலேயே தமிழக பா.ஜ., தற்போது சிறப்பாக செயல்படுதாக மத்திய தலைமை நினைக்கிறது. இது இன்னும் சில காலம் நீடிக்கட்டும் என விரும்பினாலும் 2021 சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு அடுத்த சில நாட்களில் தலைவர் யார் என்பதை பா.ஜ., தலைமை அறிவிக்கும் என தெரிகிறது. ஆனால், இந்தமுறை யாரும் எதிர்பார்க்காத ஒருவரே தலைவராக நியமிக்கப்படுவார் என்பது மட்டும் உறுதி.
குடியரசுத் தலைவர் பதவிக்கு பலரது பெயர்கள் அடிப்பட்ட போதும் யாரும் எதிர்பாராத வகையில் ராம்நாத் கோவிந்தை மோடி-அமித்ஷா கூட்டணி தேர்வு செய்தை யாரும் மறக்க முடியாது. எது எப்படியோ இந்த முறை நல்ல நேர்மையான தலைவர் கிடைத்தால் மட்டுமே தொண்டர்கள் புத்துணர்ச்சியுட்ன செயல்படுவார்கள் என்பது 100 சதவீதம் உறுதி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...