Wednesday, February 26, 2020

தூங்கி எழுந்தவுடன் ஏன் உள்ளங் கையை காண வேண்டும்?

இது அக்காலத்தில் இருந்து வரும் ஒரு மரபு இதை தமிழர் கிராமத்தில் இன்று செய்கின்றனர் ஆனால் நகரத்தில் செய்வதில்லை
இதன் விவரம் யாதெனில்
நாம் உடலில் தினமும் பிராண சக்தி இழப்பு ஏற்படுகிறது.
அதை சரி செய்ய உணவு மற்றும் உறக்கம் கொண்டு சரி செய்கிறோம்.
உறங்கும் போது பிரபஞ்ச சக்தி அதிகமாக உடலில் கலந்து பிரணனாக உடலில் தங்குகிறது அவ்வாறு தங்கும் போது தலையில் அதிகமாக சேமிக்கபடுகிறது.
சேமிக்கபட்ட பிரணன் கண்ணை திறக்கும்போது அதிகமாக வெளியேசெல்கிறது அப்போது பிராண இழப்பு ஏற்படுகிறது.
அந்த பிராண சக்தி மீண்டும் உடலுக்குள் செலுத்த உள்ளங்கையை கண் முன்வைக்கிறேம் உள்ளங்கை இயல்பாக பிராண ஈர்ப்பு செய்யும்.
நாம் நினைத்தால் மட்டுமே உள்ளங்கையிலிருந்து பிராணன் வெளியே செல்லும்
ஆக உள்ளங்கை பார்க்கும் போது சேமித்தபிராணன் மீண்டும் உள்ளே அனுப்ப படுகிறது
பிராணன் பூரணமாக கிடைக்கும் இதை ஆதிகாலம் தொட்டே தமிழர்கள் செய்கிறார்கள்.
உள்ளங்கை என பெயர் ஏன் வைத்தான் தமிழன்
உள்ளங்கை = உள் அவையங்களோடு தொடர்புடைய பகுதி இது அனைத்து வர்ம பகுதியோடு தொடர்புள்ளது
புறங்கை= கையின் பின்பகுதி இங்கு பிராணன் இழப்பு இல்லை
அதனால் தான் அடித்தால் புறங்கையால் தட்டு, அடி என்பார்கள்.
புறங்கையால் யாரும் அடிக்க முடியாது பிறரை துன்பம் அடைய செய்வது தவறு அதை செய்ய முடியாத புறங்கையால் செய்தால் குறையும் என்பதே இதன் கருத்து
அடிப்பவனுக்கு தனது பிராண சலப்பு ஏற்படாமல் இருக்க கையை மூடவேண்டும் இது வர்மத்தில் குத்து என்று வரும்
முழங்கை = சங்கை முழங்க வாயின் பகுதிக்கு கொண்டு வர, மடங்கும் பகுதியின் கைக்கு முழங்கை* என்றும் அளத்தல் பகுதியில் அளவில் ஒரு முழம் என்றும் பின்னால் அழைக்கப்பட்டது
தமிழன் ஒவ்வொரு விசயமும் அறிவு பூர்வமாக செய்தான் என்பதை நினைவில் வைப்போம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...