Sunday, February 23, 2020

ஒரு வணக்கத்தை தெரிவிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள்*.

*கை குலுக்கும் பொழுது உறுதியாக கை குலுக்குங்கள்*.
*கண்ணைப் பார்த்து பேசுங்கள். அது சற்று சங்கடமாக தோன்றினால் இரண்டு புருவ மத்தியை பார்த்து பேசவும்*.
*யாருடனாவது மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டால் எப்பொழுதும் முதலில் இறங்கி போய் பேசி சரி செய்வது நீங்களாக இருங்கள்*.
*எப்பொழுதும் துணிச்சலை இழக்காதீர்கள். பயம் உங்கள் தொண்டையை அடைக்கும் பொழுதும் கூட துணிச்சலுடன் இருங்கள் அல்லது இருப்பது போல் நடிக்கவாவது செய்யுங்கள்*.
*வாழ்க்கை துணை அல்லது காதலியை தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள். ஏனெனில் உங்களது வாழ்க்கையில் 90% நிகழ்வுகள் இவரை சார்ந்தே அமைகிறது*.
*உங்களுக்கு தெரியாத நபருக்கும் உதவி செய்ய தயாராக இருங்கள்*.
*உங்கள் புத்தக தொகுப்பிலிருந்து எதையும் கடனாக கொடுக்காதீர்கள்*.
*குழந்தைகளோடு விளையாடும் பொழுது, அவர்களை வெற்றி பெற விடுங்கள்*.
*இந்த உலகத்தில் துக்கப்படும் அளவிற்கு ஒரு பெரிய பிரச்சனை கிடையாது. பிறக்கும் பொழுதும் வெறும் கையோடு தான் வந்தோம் போகும் பொழுதும் வெறும் கையோடு தான் போக போகிறோம். எனவே எப்பொழுதும் மன மகிழ்வுடனேயே இருங்கள்*.
*எல்லா பூட்டுகளும் சாவிகளோடு தான் தயாரிக்கப்படுகின்றன அது போலவே எல்லா மோசமான சூழ்நிலைகளும் அதற்கான தீர்வுகளோடு தான் வருகின்றன*.
* *இதற்கு மேல் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்றிருக்கும் நபரோடு மோதாதீர்கள்*.
* *நீங்கள் விரும்பும் நபரை எந்தளவுக்கு விரும்புகிறீர்கள் என கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தெரிவிக்க மறவாதீர்கள்*.
* *நண்பர்களோ உறவினர்களோ உடல் நலமில்லாமல் இருந்தால் நேரில் சென்று நலம் விசாரிக்க தவறாதீர்கள்*.
* *அவ்வப்பொழுது புதிய இடங்களுக்கு பயணம் செய்யுங்கள்*.
* *தூங்கும் பொழுது தலைமாட்டில் ஒரு சிறிய நோட்டையும் பேனாவையும் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை மாற்றி போடக்கூடிய யோசனைகள் பெரும்பாலும் படுக்கையில் இருக்கும் பொழுது தான் வரும்*.
*வங்கி வாசலில் நிற்கும் காவலாளியாக இருக்கட்டும், டீ போட்டு கொடுக்கும் மாஸ்டராக இருக்கட்டும் ஒரு வணக்கத்தை தெரிவிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள்*.
* *குழந்தைகள் போகும் பள்ளிபேருந்தை பார்த்தால் டாடா சொல்லுங்கள். சிறு குழந்தைகளை பார்த்தால் புன்னகைக்க மறக்காதீர்கள்*.
* *வாழ்க்கையில் எல்லாமே நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்க வேண்டுமென எண்ணாதீர்கள். வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதன் அடுத்த நொடி மர்மம் தான்*.
*வாழ்க வளமுடன்*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...