Thursday, February 27, 2020

பிரசாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு.

தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், தன் திட்டத்தை திருடி, அவருக்கு சாதகமாக பயன்படுத்துகிறார் என, பீஹாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அளித்த புகாரை அடுத்து, கிஷோர் மீது, மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்படி பதிவு
பா.ஜ., காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர்.காங்., உள்ளிட்ட கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர். தற்போது, தி.மு.க.,வுக்கு, தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் பணியை, இவரது, 'ஐ பேக்' நிறுவனம் செய்து வருகிறது.
Prashant Kishore, charged, fraud,பிரசாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு

இந்நிலையில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த கவுதம் என்ற இளைஞர், போலீசில் புகார் அளித்துள்ளார்; அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:பீஹாரை, வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றுவதற்காக, 10 முக்கிய அம்சங்கள் அடங்கிய திட்டங்களை வகுத்து வைத்திருந்தேன். அதற்கு, 'பாத் கீ பீஹார்' என, பெயரிட்டிருந்தேன். இதை, முறைப்படி பதிவு செய்துள்ளேன்.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோர், நான் வகுத்த அதே, 'பாத் கீ பீஹார்' திட்டத்தை, தன் திட்டம் என கூறி, பீஹார் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். என்னிடம் பணியாற்றிய ஓசாமா என்ற இளைஞர், பிரசாந்த் கிஷோரிடம், இந்த திட்டத்தை பற்றி தெரிவித்ததை அடுத்து, அவர், என் திட்டத்தை, 'காப்பி' அடித்து செயல்படுத்து வருகிறார். அவர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.இதையடுத்து, பிரசாந்த் கிஷோர் மீது, பீஹார் போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.


கருத்து வேறுபாடு


பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பிரசாந்த் கிஷோர், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவராக இருந்தார்.சமீபத்தில், நிதிஷ் குமாருக்கும், கிஷோருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டார்.

இதையடுத்து, பீஹார் இளைஞர்களை ஒன்று திரட்டி, மாநிலத்தில் விழிப்புணர்ச்சியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தப் போவதாக அறிவித்துள்ள பிரசாந்த் கிஷோர், இதற்காக, 'பாத் கீ பீஹார்' திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...