Friday, February 21, 2020

எதற்கும் எப்போதும் கலங்குவதில்லை!.

கடந்த, 1980ம் ஆண்டுகளில், ஏராளமான படங்களில் நடித்து, படுபிசியாக இருந்த, கவர்ச்சி ஆட்டத்தால், ரசிகர்களை கிறங்க அடித்த நடிகை அனுராதா: சென்னை தான் பூர்வீகம். அப்பா, கிருஷ்ணகுமார், டான்ஸ் மாஸ்டர்; அம்மா சரோஜா, மேடை நாடக கலைஞர். பள்ளி விடுமுறை நாட்களில், பெற்றோருடன் சினிமா ஷூட்டிங் பார்க்கப் போவேன்.அப்போதே, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.கதாநாயகியாக சில படங்களில் நடித்தேன். அந்தப் படங்களில் சில வெளிவரவில்லை; சில தோல்வி அடைந்தன. இதனால், ராசியில்லாத நாயகி நடிகை என்ற பெயர், எனக்கு வந்து விட்டது. இந்நிலையில், மலையாள சினிமா ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ், அவர் பணியாற்றிய, காளியமர்த்தம் என்ற படத்தில், கவர்ச்சி நடனம் ஆட வாய்ப்பு வாங்கி கொடுத்தார்.ராசியில்லாத நடிகை என என் மீது குத்தப்பட்ட முத்திரையை உடைக்க வேண்டும் என, கவர்ச்சி நடனம், வில்லி ரோல் என, எந்த பாத்திரம் கிடைத்தாலும், அதில் நடிக்கத் துவங்கினேன். ஏராளமான பட வாய்ப்பு கிடைத்தன; பெரிய நடிகர்களுடன் நடித்தேன்; கவர்ச்சி ஆட்டத்தால் பிரபலமாகி விட்டேன். அதன் பின், நான் நடித்த படங்கள் பல, செம, 'ஹிட்' ஆகின. இதனால், எனக்கு தென் மாநிலங்களின் படவுலகில் சிறப்பான இடம் கிடைத்தது. அந்த நேரத்தில் எனக்கு, ரசிகர்களிடம் இருந்து தினமும், இரண்டு மூட்டை கடிதங்கள் வரும்; அவற்றை படித்து, பொறுமையாக பதிலும் எழுதுவேன். இந்நிலையில், குரூப் நடன கலைஞராக இருந்து, டான்ஸ் மாஸ்டராக உயர்ந்த சதீஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாகவும், பின் காதலர்களாகவும் மாறி, திருமணமும் செய்து கொண்டோம்.எல்லாமும் நன்றாகத் தான் போய் கொண்டிருந்தது. 1996ல், ஷூட்டிங் முடித்து காரில் வரும் போது, விபத்து ஏற்பட்டு, முழுவதும் செயல் இழந்து போனார், என் கணவர். அவரை, 2007 வரை, குழந்தை மாதிரி பார்த்துக் கொண்டேன்; அதற்காக பட வாய்ப்புகளை தவிர்த்தேன். 2007ல் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்து விட்டார். அதற்கு முன், தனியாக வாழ பழகிக் கொண்டதால், கணவர் இறந்த பிறகும், அது பற்றி கலங்காமல், தொடர்ந்து தனித்து வாழ்ந்து வருகிறேன்.கஷ்டம், நஷ்டம், புகழ், போராட்டம் என, ஏராளமானதை வாழ்க்கையில் பார்த்துள்ளேன். அவற்றை சரி சமமாகவே கருதுவேன். அதனால், எதற்கும் கலங்குவதும் இல்லை; பயப்படுவதும் இல்லை. இப்போது, என் மகள் அபி நடத்தும் நடனப் பள்ளியில், அவளுக்கு உதவியாக இருக்கிறேன். அவ்வப்போது, 'டிவி' தொடர்கள், சினிமாக்களில் நடிக்கவும் செய்கிறேன்!
 எதற்கும் எப்போதும்  கலங்குவதில்லை!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...