Saturday, February 29, 2020

கலெக்டரின் சொத்து கணக்கு கேட்ட பெண்.

தேசிய கடல் மீன்வள வரைவு மசோதா கருத்து கேட்பு கூட்டத்தில் கலெக்டரின் சொத்து கணக்கை கேட்டு மீனவ பெண் பரபரப்பை ஏற்படுத்தினார்.

நாகர்கோவிலில் தேசிய கடல் மீன்வள வரைவு மசோதா 2019 தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் பேசிய மீனவ பெண் கலெக்டர் பிரசாந்த் வடநேரேயிடம் 'உங்கள் சொத்து எவ்வளவு' என்றார்.எதிர்பாராத கலெக்டர் சில வினாடி அமைதிக்கு பின் 'எனது சொத்து விபரம் ஆண்டுதோறும் ஜனவரியில் அரசுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. எனக்கும் எனது தம்பிக்கும் சேர்த்து மகாராஷ்டரா மாநிலம் கல்யாண் பகுதியில் ஒரு வீடு உள்ளது' என்றார்.சளைக்காத அந்த பெண் 'எனது குடும்பம் வாடகை வீட்டில் உள்ளது.

ஆட்சியரின் வீட்டை தரலாமா' என கேட்டார். கலெக்டரும் 'கல்யாணுக்கு சென்று வசிக்க தயாரென்றால் அந்த சொத்தை கொடுக்கிறேன். அதற்கு பதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேறு சொத்து வழங்குங்கள்' என்றார்.இதையடுத்து கலெக்டர் வரைவு மசோதா குறித்து மட்டும் பேசுமாறு அறிவுறுத்தினார். இதற்கு பதிலளித்த பெண் 'எங்கள் சொத்தான கடலை பறிக்க அரசு முயற்சிக்கிறது. எங்கள் சொத்தை யாருக்கும் விட்டு தரமாட்டோம்' என்றார்.

 கலெக்டரின் சொத்து  கணக்கு கேட்ட பெண்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...