Monday, February 24, 2020

நம் நாட்டின் மிகப் பெரிய வரவேற்பால் டிரம்ப் உச்சக்கட்ட மகிழ்ச்சி!


மோடி பேச்சு


* டிரம்பை, குஜராத் மட்டுமல்லாமல்; ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

* டிரம்ப் வருகையால், இந்திய - அமெரிக்க உறவில், புதிய அத்தியாயம் துவக்கப்பட்டுள்ளது.

* உலகம் ஒரே குடும்பம் என்பது தான், இந்தியர்களின் நம்பிக்கை. இரு நாடுகளில் ஒரு நாடு, சுதந்திர தேவியின் சிலை மூலம் பெருமை கொள்கிறது. மற்றொரு நாடு, ஒற்றுமையின் சிலை மூலம் பெருமை கொள்கிறது.

* இரண்டு மனிதர்கள் அல்லது இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள மிகப் பெரிய வலிமையே, பரஸ்பர நம்பிக்கை தான். இந்தியா - அமெரிக்கா இடையேயான நம்பிக்கை, கடந்த ஐந்து ஆண்டுகளில், பெரும் வலிமை அடைந்துள்ளது.

* ஒரே நேரத்தில் பல செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி, உலக சாதனை படைத்துள்ளதுடன், பல கோடி பேருக்கு வங்கி சேவை வழங்கி, இந்தியா சாதனை படைத்துள்ளது.












டிரம்ப் பேச்சு


* இந்தியா, மிகப் பெரிய ஜனநாயக நாடு. பல்வேறு கலாசாரங்களை உடைய நாடு. இவை எல்லாவற்றையும் விட, இந்திய மக்கள் மிகவும் நேர்மையானவர்கள்.

* கடந்த, 10 ஆண்டுகளில் மட்டும், இந்தியாவில், 27 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

* சுதந்திரம், தனி நபர் உரிமை, சட்டம் - ஒழுங்கு ஆகியவற்றில், மற்ற நாடுகளுக்கு முன் மாதிரியாக இந்தியா விளங்குகிறது.

* பயங்கரவாதம், இந்தியா - அமெரிக்காவுக்கு மட்டுமல்லாது, சர்வதேச நாடுகளுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது. இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து, இந்த அச்சுறுத்தலை முறியடிக்க உறுதி எடுத்துள்ளன.

* இந்தியா - அமெரிக்கா இடையே, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. ராணுவத் துறையிலும், இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

* இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக, பிரதமர் மோடி இரவு - பகலாக உழைக்கிறார். மிகச் சிறந்த தலைவராக உருவெடுத்துள்ளார். எல்லாரும் அவரை நேசித்தாலும், அவர் மிகவும் கண்டிப்பானவர்.










No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...