Saturday, February 29, 2020

காங்கிரசை ஏய்ச்சுக்கட்டிய தி.மு.க.,வுக்கு...அடி சறுக்குதே!

தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியை ஏய்ச்சுக் கட்டிய, தி.மு.க., தலைமைக்கு அடி சறுக்கும் விதமாக, ராஜ்யசபாதேர்தல் அமைந்துள்ளது. ஆறு எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்காக, இம்மாதம் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலில், மூன்று எம்.பி.,க்களை பெற, காங்கிரசின் தயவை நாட வேண்டிய நிலை, தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், 2014 ஜனவரியில் நடந்த, ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், சசிகலா புஷ்பா, செல்வராஜ், முத்துகருப்பன், விஜிலா சத்தியானந்த் ஆகியோர், எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்பட்டனர். தி.மு.க., சார்பில், சிவா, அதன் கூட்டணி கட்சியான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை சேர்ந்த டி.கே.ரங்கராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதவிக் காலம் ஏப்ரல், 2ல் நிறைவடைகிறது.எனவே, புதிதாக, ஆறு எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்காக, வரும், 26ல் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான மனு தாக்கல், வரும், 6ல் துவங்குகிறது.

கொந்தளிப்பு
சட்டசபையில், தற்போது, அ.தி.மு.க.,விற்கு சபாநாயகருடன் சேர்த்து, 125 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.எதிர்க்கட்சியான, தி.மு.க.,விற்கு, 98 எம்.எல்.ஏ.,க்கள்; காங்கிரசுக்கு, ஏழு; முஸ்லிம் லீக்கிற்கு, ஒரு எம்.எல்.ஏ., உள்ளனர்.தினகரன், சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இரு இடங்கள் காலியாக உள்ளன. தற்போதுள்ள, எம்.எல். ஏ.,க்கள் எண்ணிக்கையின்படி, ஆளும் கட்சி சார்பில் மூன்று பேரும், எதிர்க்கட்சிகள் சார்பில், மூன்று பேரும் போட்டியின்றி, எம்.பி.,க்களாக தேர்வாகும் வாய்ப்பு உள்ளது.

ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய, 34 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. அந்த வகையில், மூன்று எம்.பி.,க்களை தேர்வு செய்ய, தி.மு.க.,விற்கு, 102 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. அக்கட்சிக்கு, 98 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர்.எனவே, தி.மு.க., வுக்கு, அதன் கூட்டணி கட்சிகளான, காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஆதரவு இருந்தால் மட்டுமே, மூன்று எம்.பி.,க்களை பெற முடியும்.காங்கிரஸ் ஆதரவு அளிக்காவிட்டால், தி.மு.க.,விற்கு, இரு எம்.பி., பதவிகளே கிடைக்கும்; மூன்றாவது எம்.பி., பதவியை பெறுவதில், போட்டியும் சிக்கலும்ஏற்பட்டு விடும்.
காங்கிரசை, ஏய்ச்சுக்கட்டிய, தி.மு.க.,வுக்கு,அடி சறுக்குதே!

தற்போது, தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் இருப்பதால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு பெறுவதில் சிக்கல் ஏற்படாது என, தி.மு.க., கருதுகிறது.ஆனால், தங்களின் ஆதரவு, தி.மு.க.,விற்கு தேவைப்படுவதால், ஒரு எம்.பி., பதவியை கேட்டுப் பெற வேண்டும் என்ற குரல், காங்கிரஸ் கட்சியில் எதிரொலிக்க துவங்கி உள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், காங்கிரசால் எந்த பயனும் இல்லை என, தி.மு.க.,வினர் விமர்சித்தனர்.அடுத்து வரும், நகர்ப் புற உள்ளாட்சி தேர்தலில், காங்கிரசை கழற்றி விட வேண்டும் என்றெல்லாம், தி.மு.க.,வினர் கூறி வந்தனர். ஊரக உள்ளாட்சி தேர்தல் இட பங்கீட்டில், காங்கிரஸ் ஏமாற்றப்பட்டதால், அக்கட்சியினர் கொந்தளித்தனர்.

நெருக்கடி
இதையடுத்து, தி.மு.க.,வை விமர்சித்து, தமிழக காங்., தலைமை அறிக்கை வெளியிட்டது. அதை பொறுத்துக் கொள்ள முடியாத, தி.மு.க., தலைமை, மறுப்பு அறிக்கை வெளியிடும் அளவுக்கு, காங்கிரசுக்கு நெருக்கடி கொடுத்தது.அதே, தி.மு.க.,வுக்கு, தற்போது, காங்கிரஸ் தயவு இருந்தால் மட்டுமே, மூன்றாவது எம்.பி., பதவியை, போட்டியின்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

காங்கிரஸ் தயவுடன், தி.மு.க., மூன்று எம்.பி.,க் களை பெறுமா அல்லது இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தி.மு.க.,வை மிரட்டி, தனக்கென ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியை, காங்கிரஸ் கேட்டு பெறுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.

'எங்களுக்கு ஒண்ணு!'
தே.மு.தி.க.,விற்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அக்கட்சி தலைவர் விஜயகாந்த் இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல், வரும், 26ல் நடக்கஉள்ளது.இதில், அ.தி.மு.க.,விற்கு, மூன்று ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்க உள்ளது.

எனவே, ஏற்கனவே பேசியபடி, தே.மு.தி.க.,விற்கு ராஜ்யசபா பதவி வழங்குமாறு, அ.தி.மு.க., விடம், விஜயகாந்த் மனைவி பிரேமலதா கோரிக்கை விடுத்து உள்ளார்.அதேநேரத்தில், த.மா.கா., தலைவர் வாசனும், எம்.பி., பதவியை எதிர்பார்க்கிறார். இதனால், யாருக்கு வழங்குவது என்ற கேள்வி, ஆளும் கட்சியில் எழுந்துள்ளது.இது, தே.மு.தி.க.,வினரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், முதல்வர் இ.பி.எஸ்.,சைசந்தித்து, இதுபற்றி பேசினார்.

இதையடுத்து, 'கூட்டணி தர்மத்தை மதித்து, முதல்வர்இ.பி.எஸ்., நிச்சயம் எம்.பி., பதவி வழங்குவார்' என்று, கட்சியினரிடம், விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். அதே நேரத்தில், அ.தி.மு.க.,வை சேர்ந்த அமைச்சர் ஜெயகுமார்,'தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி தருவதாக, எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை' என, கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...