Friday, February 7, 2020

தலைப்பு செய்தி கொடுக்க ஸ்டாலின் பகீரத முயற்சி!

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினி அளித்த பேட்டிக்கு தமிழக அளவில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டதால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நொந்து போனார். ''வீட்டு வாசலுக்கு வந்து கேட்டை திறந்து திடீர் பேட்டி கொடுத்தவருக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். 'டிவி'க்களில் 'பிளாஷ் நியூஸ்' ஆக போடுகின்றனர்; நாளிதழ்களில் முதல் பக்க பேனர் செய்தியாக வெளியிடுகின்றனர்'' என திருமண விழாவில் அரசியல் பேசி ஆதங்கத்தையும் வேதனையையும் கொட்டித் தீர்த்தார்.

ராயபுரத்தில் தி.மு.க. நிர்வாகியின் குடும்பத்தை சேர்ந்தவர்களின் திருமணம் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது.

DMK,MKStalin,Stalin,Rajini,திமுக,ஸ்டாலின், ஆதங்கம், ரஜினி,

மணமக்களை வாழ்த்தி ஸ்டாலின் பேசியதாவது: இன்று நடைபெற்றிருக்கும் சீர்திருத்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்துடன் நடந்தேறியிருக்கிறது. ஒரு காலத்தில் வைதீகத் திருமணத்தை புரோகிதர்களை வைத்து சடங்குகளின் அடிப்படையில் நடத்துவர். புரோகிதர்களுக்கு நேரம் இருக்காது; அவசர அவரசமாக வைதீக திருமணத்தை நடத்தி சென்று விடுவர்.

இப்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. எங்களை போன்றவர்களுக்கு தான் இப்போது வரவேற்பு அதிகம். ஆன்மிகம், ஹிந்து மதம் என்றல்லாம் சொல்லி தி.மு.க.வை வீழ்த்த சிலர் திட்டமிடுகின்றனர்; அது ஒருபோதும் நடக்காது.ஊடகங்கள் உண்மை செய்தியை மறைக்கின்றன. ஆனால் மக்கள் உண்மையை அறிந்து தி.மு.க. பக்கம் நிற்கின்றனர்.

யாராவது வீட்டின் 'கேட்'டை திறந்து வாசலில் வந்து பேட்டி கொடுத்தால் அதை காட்சி ஊடகங்களில் 'பிளாஷ் நியூஸ்' ஆக போடுகின்றனர். அதை தான் நாளிதழ்களில் தலைப்பு செய்தியாக போடுகின்றனர். பேட்டி கொடுத்து அவர் 'ஷூட்டிங்' சென்று விடுகிறார். ஆனால் அவரின் பேட்டிக்கு தான் இப்போது முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கடந்த 15 நாட்களாக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரணை நடக்கிறது. 'பப்ளிக் சர்வீஸ் கமிஷன்' என சொல்லக் கூடாது; 'பப்ளிக் சர்வீஸ் கரப்ஷன்' என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு புரோக்கர் ஜெயகுமார் முக்கிய காரணம் என்கின்றனர்.

அவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தானாக முன்வந்து ஆஜராக வேண்டிய அவசியம் என்ன? அங்கு தான் சூழ்ச்சி இருக்கிறது! உண்மை நிலவரத்தை வெளியில் கொண்டு வர வேண்டும் என்றால் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

இந்த முறைகேடுகள் அமைச்சர்கள் வாயிலாக முதல்வரின் உத்தரவுடன் நடந்திருக்கிறது என நாங்கள் சந்தேகப்படுகிறோம். அந்தத் துறையின் அமைச்சராக இருக்கும் ஜெயகுமார் உடனே பதவி விலக வேண்டும்.சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளன. இந்த ஆட்சியில் நடந்து வரும் ஊழல்கள், அக்கிரமங்கள், கொலை,கொள்ளைகள், லஞ்சம் அனைத்தையும் மக்களிடம் பிரசாரம் செய்வோம். அதற்குரிய தண்டனையை தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உரியவர்களுக்கு பெற்றுத் தருவோம். இவ்வாறு பேசினார்.

மணவிழா முடிந்ததும் சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ராயபுரம் மேற்கு பகுதி மீனாட்சியம்மன் பேட்டையில் நடந்த கையெழுத்து இயக்கத்தில் பொது மக்களிடம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஸ்டாலின் கையெழுத்து பெற்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...