இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பையும் மேலாண்மை படிப்பையும் படித்து பட்டம் பெற்றவர்.
வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி, வெளிநாட்டிலேயே திருமணம் செய்து கொண்டு தாயகம் திரும்பியவர்.
தற்பொழுது அவர் முன் உள்ள மிகப் பெரிய சவால்.
மூழ்கும் தமிழகத்தை காப்பாற்றுவாரா? என்பதே.
காரணம்...???
திவாலாகும் தமிழகம்...!!
தி.மு.க.அள்ளி வீசிய வாக்குறுதிகளை நிறைவேற்ற எவ்வளவு நிதி தேவைப்படும்? (தேவையான தோராயமான நிதியை அடைப்புக்குறிக்குள் காணலாம்)
இல்லத்தரசிகளுக்கு தலா மாதம் ரூ. 1000 கோடி (ஆண்டுக்கு ரூ.24,000 கோடி), கொரோனா நிவாரணம் ரூ.4,000 (ஒரு முறை ரூ.80,000 கோடி)
சமையல் காஸ் மானியம் ரூ.100 (ஆண்டுக்கு ரூ.2,000 கோடி), க்ஷேத்ராடனம் செய்யும் 1 லட்சம் பேருக்கு ரூ.25,000 மானியம் (ஆண்டுக்கு ரூ.250 கோடி), பெட்ரோல் மானியம் லிட்டருக்கு ரூ.5, டீஸல் மானியம் லிட்டருக்கு ரூ.4 (சுமாராக ஆண்டுக்கு ரூ.6,750 கோடி), இவை தவிர கடன் தள்ளுபடி அறிவிப்புகள்.
அவற்றை சேர்க்காமல் மொத்தம் ரூ.1.13 லட்சம் கோடி.
நடப்பு நிதி ஆண்டான 2021-22-ல் தமிழக அரசின் வருவாய் ரூ.2.19 லட்சம் கோடி. செலவு ரூ. 2.60 லட்சம் கோடி. பற்றாக்குறை ரூ.41,000 கோடி. இது தவிர, இந்த ஆண்டு கொடுக்க வேண்டிய கடன் தவணை ரூ.20,000 கோடி.
மூலதனக் கணக்குகளையும் சேர்த்தால், மொத்த பட்ஜெட் பற்றாக்குறை ரூ.97,000 கோடி. இது தமிழக ஜி.டி.பி.யில் 5 சதவிகிதம்.
இந்த நிலையில் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றால் ஆண்டுக்கு ரூ.31,000 கோடி கூடுதலாக செலவு செய்ய வேண்டும். தமிழக பட்ஜெட் துண்டு 6.6 சதவிகிதமாகும்.
இத்துடன் ஒரு முறை செலவைச் சேர்த்தால் பட்ஜெட் துண்டு 10.75 சதவிகிதம் ஆகும்.
இது சாத்தியமே அல்ல. காரணம், ரிஸர்வ் வங்கியின் விதிப்படி பட்ஜெட் பற்றாக்குறை 3 சதவிகிதத்தை மீறினால் மாநில அரசினால் கடன் வாங்க முடியாமல் போகும்
(கொரோனா பாதிப்பினால்தான் கடந்த, நடப்பு ஆண்டுகள் 3 சதவிகித கட்டுப்பாடு தளர்த்தப் பட்டிருக்கிறது). இந்தச் செலவுகளைப் பகிர்ந்து, வரும் ஆண்டுகளில் செலவழித்தால் கூட, பட்ஜெட்டில் விழும் துண்டு கட்டுக்கடங்காது.
அதற்கு மேல், நடப்பு ஆண்டு முடிவில் தமிழகக் கடன் ரூ.5.7 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கும். தேர்தல் வாக்குறுதிச் செலவுகளைச் சேர்த்தால், தி.மு.க. வாக்குறுதிகளில், ஒரு முறை செய்யும் செலவினத்தால் கடன் ரூ.6.6 லட்சம் கோடியாக உயரும். அது தவிர, கடன் ஆண்டுக்காண்டு ரூ.31,000 கோடி அதிகமாகும்.
தமிழக அரசின் நிதி நிலை, அதன் கடன் வாங்கும் தகுதி இரண்டையும் வாக்குறுதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழகம் திவாலாவாவது நிச்சயம்.
அந்த வகையில் தி.மு.க. எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே.

No comments:
Post a Comment