Tuesday, May 18, 2021

உண்மையான நிலவரமும் கிட்டத்தட்ட சரியாக இருக்கிறது.

 கான்பூர் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐஐடி மாணவர்கள் இருவரும் தேசிய பாதுகாப்பு அலுவலர் ஒருவரும் சேர்ந்து ஒரு வலைதளம் உருவாக்கியிருக்கிறார்கள். 


புள்ளி விபரங்களின் அடிப்படையில் கொரானாவின் இரண்டாவது அலை இந்தியாவிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் எப்போது குறையும் என்று கணித்து வரைபடமாக்கியிருக்கிறார்கள்.


அவர்களின் கணிப்பும், உண்மையான நிலவரமும் கிட்டத்தட்ட சரியாக இருக்கிறது. 


அவர்களின் கணிப்பில் இந்தியாவில் இரண்டாவது அலையின் இறங்கு முகம் துவங்கிவிட்டது. 

ஆகஸ்ட் கடைசி வாரத்தில் வீழ்ச்சியடைகிறது.


தென்னிந்தியாவைப் பொறுத்தவரை.. 

கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் உச்சம் தொட்டு இப்போது 

இறங்கு முகத்தில்..


தமிழ்நாட்டிலும், பாண்டிச்சேரியிலும் இன்னும் 

உச்சம் தொடவில்லை. ஜூன் முதல் வாரத்தில்தான் உச்சநிலையை அடைகிறது. அதன் பிறகுதான் 

இறங்கு முகம். 


இந்த வலைதளத்தில் இந்தியாவின் எல்லா மாநிலங்களின் கணிப்பும் இருக்கிறது. 


www.sutra-india.in

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...