Monday, January 31, 2022

ஒரே இந்தியா, சிறந்த இந்தியா என்பதே மத்திய அரசின் நோக்கம்.

 ஒரே இந்தியா, சிறந்த இந்தியா என்பதே மத்திய அரசின் நோக்கம் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

பார்லி.,க் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரையின் கூடுதல் விவரம் :
* நடைபாதை வியாபாரிகளுக்கு அரசாங்கம் பண உதவியை ஆன்லைன் மூலம் வழங்கியது. ஏழைகளுக்கு அரசின் திட்ட தொகை நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
* ஆன்லைன் பணப் பரிவர்த்தனை இந்தியர்களுக்கு மிக உதவியாக உள்ளது.
* 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* ஊரக பகுதியில் 6 கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைந்து வழங்கப்பட்டு வருகிறது. இது கிராமப்புற பெண்களுக்கு உதவியாக உள்ளது.
* கடந்த ஒரு ஆண்டில் நாட்டின் மொத்த வேளாண் உற்பத்தி பொருட்கள் 33 சதவீதம் உயர்ந்துள்ளது.
* பேரிடர் ஏற்பட்ட போது விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் சரியான காலத்தில் வழங்கப்பட்டது.
* மத்திய அரசு அமைத்துள்ள உணவு தானிய சேமிப்புக் கிடங்குகள் விவசாயிகளுக்கு பெரிய உதவியை வழங்கியுள்ளது.
* சிறு விவசாயிகளுக்கு உதவுவதுதான் மத்திய அரசின் திட்டங்களின் நோக்கம்.
* வங்கித்துறையில் தொடர்ந்து சீர்திருத்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
* ட்ரோன் தொழில்நுட்பம் அரசின் முக்கிய தொழில்நுட்பமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
* நாட்டின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து ஏராளமான திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது.
* பாதுகாப்பு துறைக்கான பொருட்களை நம்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டம்.
* தேஜஸ் போர் விமானம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
* மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானிற்கு இந்திய உதவி வருகிறது.
* நாட்டில் 21 புதிய விமான நிலையங்கள் அமைக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது.
* பிரதம மந்திரி கிராம சடக் யோஜனா திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ள சாதனைகள் பெருமைக்கு உரியவை.
* உத்தரபிரதேச மாநிலத்தில் நடக்கும் கும்பமேளாவை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.
* துர்கா பூஜையையும் யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.
* ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளின் முன்னேற்றத்திற்காக அரசு திட்டங்களை வகுத்து வருகிறது.
* ஜம்மு காஷ்மீர் மாநில மேம்பாட்டிற்காக ரூ.18 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
* லடாக் மேம்பாட்டிற்காக சிந்து மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.
* ஜம்மு காஷ்மீரில் 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன.
* ஒரே இந்தியா, சிறந்த இந்தியா என்பதே மத்திய அரசின் நோக்கம்.
- இவ்வாறு அவர் உரையாற்றினார்.
May be an image of 5 people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...