Friday, January 21, 2022

குருவே சரணம்...

 ஒருமுறை ஸ்ரீராகவேந்திரர் சுவாமிகள் கும்ப கோணத்தில் தங்கியிருந்தபோது, மூன்று ஜோதிடர்கள் மடத்தில் தரிசிக்க விரும்பினர்.

பக்தர்கள் யாராக இருந்தாலும், எந்த தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தா லும் அவர்களை அன்புடன் வரவேற்று, ஆசி வழங்கி அனுப்புவது சுவாமிகளின் வழக்கம்.
மூன்று ஜோதிடர்களும் தரிசனம் முடிந்ததும் அங்கேயே தயங்கியபடி நின்றிருந்தனர்.
"என்ன வேண்டும்?’’ என்று சுவாமிகள் கேட்டார் அதற்கு அவர்கள், ''நாங்கள் ஜோதிடம் சொல் பவர்கள். எங்களுக்கு இங்கே ஒரு வாய்ப்பு கிடைத்தால், அதை எங்களுடைய பாக்கியமாக நினைப்போம்'' என்றனர்.
சற்று யோசித்த சுவாமிகள், ''உங்களிடம் ஒரு ஜாதகம் தருகிறேன். அந்த ஜாதகத்துக்கு உரியவரின் ஆயுள் காலம் என்ன என்று கணித்துச் சொல்ல முடியுமா?'' என்று கேட்டார்.
பொதுவாக ஜோதிடர்கள் ஆயுளை கணிப்ப தில்லை. ஆனால், சுவாமிகளின் உத்தரவு என்பதால் அவர்களால் மறுக்கவும் முடியவி ல்லை. கொஞ்சம் தயங்கியபடியே, ''எங்களால் முடிந்தவரை கணித்துச் சொல்கிறோம்'' என்று கூறினார்கள்.
''சரி, நான் ஜாதகத்தை தனித்தனியாக மூன்று பேரிடமும் கொடுக்கச் சொல்கிறேன். கணித்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். அதற்கு பிறகு என்னுடைய முடிவைக் கூறுகிறேன்'' என்றார்.
அதன்படியே மூன்று ஜோதிடர்களிடமும் ஜாதக ம் தரப்பட்டது. அவர்களும் தாங்கள் சொல்லிய படியே ஜாதகத்தைக் கணித்துப் பார்த்தனர். பின்னர், தங்கள் கருத்துகளை ஒப்பிட்டுப் பார்த்த போது, மூவரின் கணிப்பும் வேறு வேறாக இருந்தது.
"ஜாதகரின் ஆயுள் காலம் நூறு ஆண்டுகள்’' என்றார் ஒருவர்.
"இல்லை, முந்நூறு ஆண்டுகள்’’ என்றார் அடுத்தவர்.
"இல்லையில்லை, எழுநூறு ஆண்டுகள் என்பதே சரி’' என்றார் மூன்றாமவர். சுவாமிக ளுடன் இருந்தவர்கள் அனைவரும் திகைத்துப் போனார்கள்.
"உங்கள் திறமையில் முழு நம்பிக்கை உங்களு க்கு இருக்கிறதல்லவா? உங்கள் கணிப்பை முழு கவனத்துடன்தானே செய்தீர்கள்?'' என்று கேட்டார் ராகவேந்திர சுவாமிகள்.
'`ஆம் சுவாமி! அதில் சந்தேகமே இல்லை. அது வும் தங்களுக்காக மேற்கொண்ட பணியில் நாங்கள் சிரத்தையுடன் ஈடுபடவேண்டியது எங்கள் கடமையல்லவா?’' என்றனர்.
எனில், ஏன் அப்படி அவர்களின் கணிப்பில் வித்தியாசம் ஏற்பட்டது? எவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அனைவரும் திகைத்து நின்றார்கள்.
ஆனால், சுவாமிகளோ, "உங்களை சோதித்து பார்க்கவே இப்படிக் கேட்டேன். உங்களுடைய தன்னம்பிக்கையை மெச்சுகிறேன். நீங்கள் மூவரும் கணித்த கணிப்பு சரிதான்’' என்றார்.
'`சுவாமி, தங்கள் கட்டளைப்படி எங்கள் கடமை யைச் செய்து விட்டோம். ஆனால், தங்களிடம் ஒரு விளக்கம் பெற விரும்புகிறோம். தனித்த ன்மை வாய்ந்த இந்த ஜாதகத்துக்கு உரியவர் யார்?’' என்று கேட்டனர்.
ராகவேந்திரமகான் புன்னகைத்தபடி "நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தே ன். அது என்னுடைய ஜாதகம்தான்’' என்றார். தொடர்ந்து, "என்னுடைய ஆயுள்கா லத்தை மூன்று பேரும் மூன்று விதமாக கணித்தது சரி தான். எப்படி என்பதை நான் விளக்குகிறேன். ஒருவர் ஆயுள்காலம் நூறு வயது என்று கூறியிருக்கிறார். நான் சரீரத்துடன் இருக்கும் காலத்தைத்தான் அவர் கணித்திருக்கிறார். எனவே, அவருடைய கணிப்பு சரி. அடுத்தவர் முந்நூறு ஆண்டுகள் என்று கூறியிருக்கிறார். அவர், எனது கிரந்த நூல்கள் பிரகாசம் அடை ந்து பரவும் காலத்தை கணித்துக் கூறினார். மூன்றாமவர் எழுநூறு ஆண்டுகள் என்று கூறி யிருப்பது, நான் எழுநூறு ஆண்டுகள் பிருந்தா வன வாசத்தின் மூலம் என் பக்தர்களை காப் பாற்றுவேன் என்பதைத்தான். ஆக, மூவருடை ய கணிப்பும் சரிதான்’’ என்று கூறி, மூவருக்கு ம் பிரசாதம் கொடுத்து ஆசீர்வதித்தார்..
ஓம் பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனுவே.
ஓம் குரு ராகவேந்திராய நமஹ...
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...